Chapter 30

1.6K 68 31
                                    

ஆதி பேசியது காதில் ஒலித்துக் கொண்டு இருக்க, ஜானவிக்கு மனம் வேறு எதிலும் ஈடுபட முடியாமல் தவித்தது. அவன் கிளறி விட்டு போன பழைய நினைவுகள் மனதை காயப்படுத்தியது. மனம் போக்கில் வேலைச் செய்து கொண்டிருந்த ஜானவி, சாதனாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.

"என்ன ஆயிற்று அக்கா உனக்கு?"

"ஏன்? எனக்கு ஒன்றும் ஆகவில்லையே?"

"அது சரி, உனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால், சாம்பாரில் பாலை எதற்கு ஊற்றி கொண்டிருந்தாய்?" 🤦‍♀

"என்ன நானா?"😲

" ஆமாம், பின்னே வேறு யார் செய்தார்கள்?"😒

"அதெல்லாம் எனக்குத் தெரியும், இது புதுவகையான சாம்பார், வலைத்தளம் (internet) ஒன்றில் பார்த்தேன் 😅, இதைச் சாப்பிட்டால் வேறு சாப்பிடவே தோன்றாதாம்! அப்படி ஒரு ருசி இருக்குமாம்!😅 உனக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது!"😏

" எது பால் கலந்த சாம்பார் ?😒 புது ருசி?"😏😒

"ஆமாம், நீ வேண்டும் என்றால் சாப்பிட்டு பார், அப்போது தெரியும்!"😅

" இந்த விஷப் பரிட்சை எல்லாம் நீயே செய்!😏 என்னை விட்டு விடு தாயே!🤣 ஆதி அண்ணா எனக்கு விருந்து கொடுக்கிறார், இதை நீயே ஆசை தீர சாப்பிடு!"🤣

"அவனுக்கு வேறு வேலையே இல்லையா? என் வழியில் வருவதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறான்" 😤 என்று மெதுவாக புலம்பினாள் ஜானவி!

"என்ன சொல்கிறாய் அக்கா? சத்தமாக சொல்லு, நீ பேசுவதே புரியவில்லை"

"அதெல்லாம் ஒன்றும் இல்லை! எதற்கு இப்போது விருந்து தருகிறார் உன் ஆதி அண்ணா?"😒

" எனக்கும் தெரியவில்லை அக்கா, போனால் தான் தெரியும், கண்டிப்பாக வர வேண்டும் என்று மட்டும் சொன்னார்! அண்ணாவிற்கு அவர் வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்று புலம்பி கொண்டிருந்தார்! பெண் எதுவும் அமைந்து விட்டதோ என்னவோ! அதற்கு தான் விருந்து போல! நேரமாகி விட்டது அக்கா, வந்து சொல்கிறேன் என்னவென்று" என்று தன் போக்கில் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றாள் சாதனா!

தோயும் மது நீ எனக்கு(Edited)Where stories live. Discover now