💜D-19💜

4K 133 2
                                    


"ச்சே.... சொல்லி சொல்லி வாய் தான் வழிக்கிது. நீ சுயநலம் பிடிச்சவன் தான். ஆனா அதுக்காக நானும் அப்படி இருக்க முடியாது."

"சரிங்க தியாக செம்மலே"

"நவீன் - எயினி வாழ்க்கையில எனக்கு அக்கறை இருக்கு"

"ஓஓஓ.... சரி... சரி... உன் இஷ்டம்... உனக்கா எப்போ தோனுதோ அப்போ சொல்லு. நா உன்னோட வாழ தயாராயிருக்கேன், அப்பறம் நீ டிவோர்ஸ் கேட்டாலும் தர தயார் தான். ஏன்னா தப்பு என்மேல தான். நீ என்ன முடிவு பண்ணாலும் என் கிட்ட சொல்லு. ஆனா என் வாழ்க்கையில மனைவி 'னு ஒரு இடம் இருந்தா கண்டிப்பா அந்த இடம் உனக்கு தான். நீ மட்டும் தான் என்னவள். நீயா என்னை புரிஞ்சிக்கற வரை உன்கிட்ட என்னை வெளிப்படுத்த கூடாது'னு நினைச்சேன். ஆனா உன்கிட்ட என்னை புரியவைக்கனும்'னு மட்டுமே தோனுது. ஆனா நீ என்னை புரிஞ்சிக்க மாட்ற, கொஞ்சமும் புரிஞ்சிக்கனும்'னு முயற்சி கூட பண்ண மாட்றிய'ன்னு வருத்தம் இருக்கு. பரவாயில்லை. அப்பறம் பார்க்காம எல்லாம் இருக்க முடியாது. அது எல்லாருக்கும் கேள்வியா அமையும். அதனால தான் சொல்றேன் புரியுதா??? ஆனா இனி உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன். இதுவரை கஷ்டப்படுத்தினதுக்கு Sorry."

சொல்லிட்டு திரும்பி கூட பார்க்காம அருண் வெளியே போயிட்டான். விசாலினி சிலை போல இருக்கா. இவனால எப்படி இப்படி பேச முடியுது. சரியான வளர்ந்து கெட்டவனா இருக்கானே.... அவன் தான் சொன்னான். எல்லாம் செஞ்சான். இப்போ சீன் போட்றான்.

"Noooooo சாலி... அவனை பத்தி யோசிக்காத... அவன் உன் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காதாவன்." நு புத்தி சொல்றதை கேட்டு ஆமா இனிமே இவனை பத்தி யோசிக்க கூடாது. முடிவெடுத்துட்டு அவனை வெளில அனுப்பின சந்தோசத்தில, அமைதியா படுத்து தூங்கறா.

"ஏய் என்னடா...??? இப்போ வந்திருக்க???? இது உன் வீடு தான் டா. இங்க இருக்கறது எல்லாம் உன்னுடைய பொருள் தான். உனக்கு இங்க வர எல்லா உரிமையும் இருக்கு. ஆனா அதுக்காக இப்படியா நடுராத்திரில வருவ. பாவம்டா விசாலினி."

தேவதையே நீ தேவையில்ல (completed)Место, где живут истории. Откройте их для себя