Survival of the fittest

28 4 3
                                    

பூமியில் சுமார் அறுபது லட்சம் முதல் பத்து கோடி வகையான உயிரினங்கள் வாழ்வதாகவும், அவை ஒவ்வொன்றும் தனக்கே உரிய தனிச்சிறப்போடும் உடல்கூறுகளோடும் வடிவமைக்கப் பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தனிச்சிறப்பான உருவ அமைப்பு கொண்ட பல்வேறு வகையான உயிரினங்களின் தோற்றம், அவற்றின் எண்ணிக்கை மற்றும் வகைகள் உருவாக காரணமானதை மனித இனமும் தொடர்ந்து ஆய்ந்துக் கொண்டு தான் இருக்கின்றது. என்றாலும் உறுதியாகவும், இறுதியாகவும் அறுதியிட்டு சொ்ல முடியவில்லை.

மதங்களை பொறுத்தவரை, உயிரினங்களை உள்ளடக்கிய அனைத்தும் ஏதோ ஒரு கடவுளால் படைக்கப்பட்டது என்ற படைப்பு தத்துவத்தையே முன்வைக்கின்றனர்.

19-ம் நூற்றாண்டு வரை, ஐரோப்பிய அறிவியலாளர்களிடையே அரிஸ்டாட்டிலின் ஆதியும் அந்தமும் அற்ற நிலையான உலகம் என்ற இயக்க மறுப்பியல் கோட்பாடே ஆதிக்கம் செலுத்தியது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு சரியென்று நம்பப்பட்ட கருத்துகளிலிருந்து வேறுபட்டு விளக்கமளிக்க முற்பட்டவர் சார்லஸ் டார்வின். ஆனால், முதன்முதலாக படைப்பு கொள்கையை மறுத்து பரிணாம வளர்ச்சியை முன்வைத்தவர் டார்வின் அல்ல.என்பதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

THEOLOGICAL NATURALISM : அறிவியலும், அறிவுத் துறைகளும் மதங்களின் பிடிகளில் இறுகிக்கிடந்த காலத்தில், பெரும்பாலான அறிவியலாளர்களும், கல்வியாளர்களும் மத குருமார்களாக இருந்த போதிலும் இறைவனின் படைப்புகளாக சொல்லப்படுவதை முழுவதுமாக அறிந்து கொள்ள இயற்கையை ஆய்ந்து விவரங்களை திரட்டி, அதற்கு இறை இயற்கையியல் (theological naturalism) என்ற பெயரிட்டனர்.

17-ம் நூற்றாண்டில், பாறை அடுக்குகளில் எலும்புகள், உயிரின படிவங்கள் கண்டறியப்பட்டன..டேனிஷ் அறிவியலாளரும் Father NICOLUS STENO திரவ நிலையிலிருந்த குழம்புகள் குளிர்ந்து கெட்டிப்பட்டு பாறைகளாவதையும், புதிதாக குளிர்ந்து உருவாகும் புதிய பாறை பழைய பாறையின் மீது படிந்து பாறை அடுக்குகள் உருவாவதையும் விளக்கமளித்தார். கண்டறியப்பட்டவை தொல்லுயிர் எச்சங்கள் என்றார்.அவரது கருத்துகள் தொல்லுயிரியல் துறைக்கு அடிப்படையாக அமைந்தன.

You've reached the end of published parts.

⏰ Last updated: Nov 02, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

தக்கன பிழைக்கும்Where stories live. Discover now