12

383 19 0
                                    

எதிர்முனையில் அமுதனின் நெருங்கிய உறவினர் ஒருவர் "டேய் அமுதா நம்ப கைலாசம் அண்ணே இறந்துட்டாரு டா வா டா சீக்கிரம்" என்று கூறிவிட்டு போனை துண்டிக்க அவனோ என்ன செய்வதறியாது தமிழ்ச்செல்வியை இறக்கிவிட்டு அவளை ஒரு ஆட்டோவில் அனுப்பி வைத்துவிட்டு இழவு வீட்டிற்கு விரைந்தான்.

சேனலுக்கு வந்தடைந்தாள் நம்முடைய கதாநாயகி தமிழ்ச்செல்வி அவளை பார்த்ததும் இன்முகத்துடன் வரவேற்பரையில் வரவேற்று சேனல் ப்ரொடக்ஷன் மேனஜரை சந்திக்கும்படி அனுப்பி வைக்க மேனஜர் அறைக்கதவை தட்டினாள்.

"எக்ஸ்கியூஸ் மீ" உள்ள வரலாமா என்றவாறு மேனஜரை பார்க்க அவரோ அவளை வரவேற்று நாற்காலியில் அமரச்சொன்னார்.
"அப்றம் மேடம் கதை எழுதுற பயணம் எல்லாம் எப்படி போகுது? உங்கள் கணவர் தான் உங்களுடைய மிகப்பெரிய வாசகர் போல..."என்று புன்னகையிக்க அவளோ புகழ்ச்சியின் வெட்கத்தில் தலையை கீழே சாய்த்துக்கொண்டாள்.

"மேடம் சீரியலுக்கு வசனம் எழுதுவதற்கு தான் உங்களை அழைச்சோம்..இனி இரண்டு நாள் ஒருமுறை சேனலுக்கு வரனும் வந்து வசனங்கள் எழுதி தந்துவிட்டு போகனும். டைரக்டர் எப்படி எதிர்பாக்கிறாரோ அதுபடி உங்கள் ரைட்டிங் இருக்கனும். ஏதோ கதை எழுதுற மாதிரி எல்லாம் சீரியலுக்கு ஸ்க்ரிப்ட் எழுதக்கூடாது. என்ன தேவையோ அதற்கு ஏற்றாற்போல் இருக்கவேண்டும்.. சரி சரி மத்தது எல்லாம் டைரக்டர் விலாவாரியாக சொல்லுவார். இப்ப நீங்க கிளம்பலாம்" என்று கூறி அனுப்பிவைக்க அவளுக்கு அந்த சேனலில் இருந்து வெளியே வரும்போது ஏதோ சாதித்தது போல் இருந்தது.

வெளியே வந்ததும் என்ன தோன்றியதோ தெரியவில்லை அருகில் இருந்த ஜூஸ்கடையினுள் வந்து ஒரு ரோஸ்மில்க் ஆர்டர் செய்து அமர்ந்தாள். எப்போதெல்லாம் மனது சந்தோஷமாக உள்ளதோ அப்போதெல்லாம் எதாவது குளிச்சியாக சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் சின்ன வயதிலிருந்தே தமிழுக்கு உண்டு. ரோஸ்மில்க் உரிந்துக்கொண்டிருக்க எதிரே உதயன் தற்செயலாக தன் மனைவியுடன் அந்த கடைக்கு வந்தான்...

காரிகையின் கனவு (Completed Novel)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon