ஏரோட்டும் ஏகன்

456 59 164
                                    


மர இலைகளின் இசைக்கு
காட்டுக்குயில்கள் தாளமிசைக்க....
வெட்டுக்கிளிகளின் சீரான லயத்திலும் வண்டுகளின் பல்லவியிலும் மெல்ல கண்விழித்தவளின் அருகில் தன்னவன் இல்லாமல் போக அவன் சென்றயிடத்தை சரியாக யூகித்தவள் தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு தன்னவனை நோக்கி சென்றாள்....

தலையில் கட்டிய தலைப்பாகை, மடித்து கட்டிய வேஸ்டியுடன் இருந்தவனின் முகத்தில் வியர்வை துளிகள் கோர்த்திருக்க அதை தன் கையால் துடைத்துகொண்டே மண்வெட்டியை பிடித்து வயலில் இறங்கி வரப்பு வெட்டிக் கொண்டிருந்தவனை தூரத்தில் நின்று பார்த்தவள்

'என்னங்க..!!" ஏங்க..."என இருமுறை சத்தமாக அழைக்க நிமிர்ந்து பார்த்தவன்.. ஏழு மாத மேடிட்ட வயிற்றை தன் கையால் பிடித்தவாரு தாய்மையின் பூரிப்புடன் நின்றிருந்தவளை பார்த்து "ஏய் புள்ள அங்கேயே நில்லு நானே வரேன்" எனக் கூறிக்கொண்டே மண்வெட்டியை வயலின் ஓரத்தில் வைத்துவிட்டு அவளிடம் வந்தவன்

" படிச்ச பொண்ணு தானே மலரு நீ..... இப்போ ஏன் இங்க வந்த..வீட்டில இருந்து வெளியே வர கூடாதுன்னு தெரியும்ல..வயத்துப் புள்ளத்தாச்சி மூச்சு வாங்க நிக்கறவ.. உனக்கு எதிர்ப்பு சக்தி இந்த நேரத்தில ரொம்ப கம்மியா இருக்கும்... அறிவில்லையா டி உனக்கு இது கூடவா தெரியாது..."

"நீங்களும் படிச்சவங்க தானே.. உங்களுக்கும் 144 தடை அப்படினா என்னனு தெரியும் தானே... நீயேன் வயலுக்கு வந்த..! அதான் நானும் நம்ம புள்ளையும் உன்னை தேடி வந்துடோம்.."

"இந்த வியாக்கியானமெல்லாம் நல்லாத பேசுவே..மொதல்ல வீட்டுக்கு போ.. இரு ஒரு நிமிஷம் இப்படியே போகதா.." என கூறி அவளின் முந்தானையை கையில் எடுத்து அவளின் முகத்தில் கட்டிவிட்டவாறே "இப்போ போ... வெளிய வரும் போது மாஸ்க் போடனுங்கர சென்ஸே இல்லை.."என கூறியவனை முறைத்தவள் "உனக்கு இருக்கா.."

"என்ன இருக்கா.."

"அதான் நீ சொன்ன சென்ஸ் அது உனக்கு இருக்கா டா..!! ஊரடங்கு அப்படினா நான் மட்டும் இல்லை நீயும் தான் வீட்டில இருக்கணும்.. நீ மட்டும் வந்து விவசாயம் பார்க்கற.. போக போக சமுதாய பரவல் வர மாதிரி இருக்காம்.. நம்ம தான் நம்மளை பாத்துக்கணும்.. வா வீட்டுக்கு போலாம்"

"இங்க பாரு மலரு...இந்த ஊரடங்குல எல்லாருக்கும் முக்கியமான ஒரே தேவை சாப்பாடு மட்டும் தான் டி..!! அதுக்கு விவசாயம் ரொம்ப முக்கியம் டி.. எல்லாரும் வீட்டில இருக்காலம் ஏன் அம்பானில இருந்து நம்ம வீட்டுக்கு வர பாத்திரக்கரான் வரைக்கும் எல்லாரும் வீட்டுல இருக்கலாம்.... ஆனால் விவசாயி நாங்க வீட்டுலயே இருந்தோம்னு வை..... இதோ இப்போ நிம்மதியா எல்லாரும் சாப்பிடற சாப்பாடுக் கூட அடுத்த மாசம் இல்லாமல் போயிடும் டி..!! இதோ நம்ம தோட்டத்தில இருக்கற எல்லாம் காய்கறிலையும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கற காய்கறி தான் இதெல்லாம்.... நம்ம ஊருல இருக்கற கவேர்மண்ட் வண்டில போட்டு விட்டா.. எல்லாரு வீட்டுக்கும் நம்ம காய்கறி போகும் டி..!!
நான் கொண்டு போயி குடுக்கற மாதிரி எதுக்கு இந்த பதட்டம்..!! ஆனால் ஒன்னு டி காரோனா வரத்துக்கு முன்னாடி வேணா விவசாயத்தை கண்டுக்காம இருந்து இருக்காலம் டி... ஆனால் வந்ததுக்கு அப்பறம் கண்டிப்பா இந்த விவசாயியையும் விவசாயத்தையும் தேடுவாங்க.. என கூறிய கதிரவன் தன்னவளை அழைத்து சென்றான்..!!

ஊர் முற்றிலும் முடக்கப்பட்டாலும்
விவசாயமும் விவசாயிகளும் தேவை.. (நமக்கு சோறும் தேவை..)

சுபம்...

நன்றியுடன்

புவனா மாதேஸ்..

குட்டி குட்டி கதைகள்Where stories live. Discover now