இந்த வாழ்க்கையே சீதனம்...

16 0 0
                                    

இந்த பூமியே பூவனம்...
உங்கள் பூக்களை தேடுங்கள்...
இந்த வாழ்க்கையே சீதனம்...
உங்கள் தேவையை தேடுங்கள்...

சமீபத்துல நான் கேட்டு ரொம்ப ரொம்ப ரசிச்ச பாட்டு இது. இதுக்கு முன்னாடி கூட இந்த பாட்டை நிறைய தடவை கேட்டு இருக்கேன். ஆனா அப்போவெல்லாம் அதோட இசையை மட்டும் தான் ரசிச்சு இருக்கேன். ஆனா அன்னைக்கு பௌர்ணமி... ஏன்னே தெரியாம மனசுக்குள்ள ஒரு வேதனை...எதிர்காலத்தை பத்தின பயம்...இப்படி நிறையா இருந்துச்சு

பாட்டு கேட்டா சரியாகும்ன்னு நினைச்சி மொட்டைமாடிக்கு ஹெட் செட்டோட போனேன். பாட்டு மெலடி பாட்டா இருந்தா நல்லா இருக்கும்னு இந்திரா படத்தில வர்ற இந்த " நிலா காய்கிறது " பாட்டை போட்டுட்டு வால்யூமை அதிகமாக்கி வைச்சேன்.

அந்த நாள்ல இருந்து இப்போ வரைக்கும் நான் டவுன் - ஆ ஃபீல் பண்ணும் போதெல்லாம் அந்த பாட்டை போட்டு தான் கேட்பேன். நான் சொல்ற பாட்டு ஹரிணி பாடினது. ரொம்ப கேஸ்வலா இருக்கும் அதுல வர்ற வரிகள்

"காற்று வீசும்.. வெயில் காயும் காயும்...
அதில் மாற்றம் யேதுமில்லையே...
வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில்...."

நம்ம வாழ்க்கையில நடக்கிற எல்லாம் நடந்துட்டே தான் இருக்கும்... காற்று வீசும்...அதாவது சந்தோஷம் வரும் பல நேரங்கள்ல!

வெயிலும் காயும்...சில நேரங்கள்ல! நம்ம எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு பேரண்டத்தின் சக்தியா இயங்கிட்டு இருக்கிற இந்த இயற்கையே எல்லா நேரங்களையும் ஒரே மாதிரி இருக்கிறது இல்லை. அதனால இயற்கையை பார்த்து கத்துக்கோ... கஷ்டத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கிற வானம் தான் வாழ்க்கை!

வானம் என்ன கஷ்டத்தை இன்பத்தை கொடுத்தாலும் அதை எல்லாத்தையும் தாங்கிட்டு பல ஆயிரம் ஆண்டுகள் தாண்டி இப்போ வரைக்கும் நிலைச்சி நிற்கிற இந்த மாபெரும் பூமி தான் நம்ம!

இயற்கையே தன்னை பார்த்து, நம்ம எல்லாரையும் வாழ கத்துக்க சொல்லுது. நம்ம நல்லா வாழ வாழ்த்து சொல்லுது...அதுவே எவ்ளோ பெரிய வரம்... வாழ்வோம்!!



வணக்கம் மக்களே!

புது கதைன்னு நினைச்சி ஓடி வந்து பார்த்த எல்லாருக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
புது கதையை முழுசா முடிச்ச அப்புறம் தான் உங்களை சந்திக்க வருவேன்...rough - ஆ எதை பத்தி எழுத போறேன்னு யோசிச்சிட்டேன்...சில சீன்ஸ் டைப் பண்ணவும்  செஞ்சிட்டேன். எனக்கே கொஞ்சம் திருப்தியா இல்லை . அதுவும் இல்லாம, லாஸ்ட் டைம் மாதிரி எபிசோட் லேட் பண்ணி கொடுக்க மனசு வரல... அதனால தான் மொத்தமா முடிச்ச அப்புறம் உங்களை கதையோட மீட் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இந்த தடவை கதையில கொஞ்சம் நிறையா சோக கீதம் வாசிச்சி இருப்பேன். நீங்க பொருத்துகிட்டு தான் ஆகணும்..simply this universe has no way other than following me...so, கதையை முடிக்க சில மாதங்கள் ஆகலாம் 😬😬 இப்போ நான் சொல்ல வந்தது அது இல்லை.  நீங்க எல்லாரும் என்னை மறந்துட கூடாது இல்லையா? அதான் அடுத்த கதை வர்ற வரைக்கும் கொஞ்சம் வித்தியாசமா இதை ஒரு ப்ளாக் மாதிரி மையின்டெய்ன் பண்ணலாம்ன்னு ஐடியா பண்ணி இருக்கேன். அதோட ஒரு முயற்சியா தான் இந்த போஸ்ட்... நீங்க என்ன நினைக்கிறீங்க.?

You've reached the end of published parts.

⏰ Last updated: May 31, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

இந்த வாழ்க்கையே சீதனம்...Where stories live. Discover now