26. ஜொலித்த இரவு

245 16 3
                                    

டாக்ஸி என்னை அபார்ட்மெண்ட் வாசலில் இறக்கிவிட்டு தன் அடுத்த வருமானத்தை தேடிச் சென்றது. என் சௌகரியத்துக்காக இனாபா வீட்டு கூடத்திலிருந்து ஒரு ஸ்டூலை எடுத்து வாசலில் போட்டிருந்தான். அந்த ஸ்டூலில் அமர்ந்து crutches ஐ சுவற்றோடு சாய்த்து பின் பேண்ட் பாக்கட்டிலிருந்து வீட்டு சாவியை தேடியெடுத்து கதவை திறந்தேன். ஆண்களின் பேண்ட் பாக்கெட் பாதாளக்குழி போல பெரிதாய் பல பொருட்களைக் கொண்டிருக்கும். காலையிலிருந்து சாயங்காலம் வரை குளிரில் உரைந்திருந்த வீடு வெளியுலகத்தின் வெப்பத்தில் கொஞ்சம் குளிர் காய்ந்தது. தெரு விளக்குகளின் வெளிச்சத்தில் சுவிட்சைக் கண்டுபிடித்து என் வீட்டு விளக்குக்கு ஒலி கொடுத்தேன்.

முதல் வேலையாய் ரைஸ் குக்கரில் அரிசியை வைத்துவிட்டு அரிசி அவியும் நேரத்தில் உடை மாற்றி முகம் கழுவினேன். மீண்டும் கிட்சனுக்கு வந்து ப்ரிட்ஜை திறந்து டப்பாவை எடுத்து கையில் மோர் குழம்பை பிடித்தபோது ஜில் டப்பாவின் குளிர் என் மனதையும் குளிரவைத்தது. நீங்கள் எதிர்பார்த்தது போல் ஜனனி ஒன்றும் அனுதினமும் வந்து சமைத்து வைக்கவில்லை. அவள் சமைத்து டெலிவரி மூலம் டப்பாக்களை அனுப்பி வைத்தாள். ஆம், இரவுகளை அவளின் சமையலோடு கழித்தேனே ஒழிய அவளின் இன் முகத்தைக் கண்டு பத்து நாட்களாயிருந்தன. சோறு மல்லிகைப் பூவாய் மலர்ந்ததும் மோர் குழம்பை சுட வைத்து நான்கு frozen சிக்கன் பீஸை பொறித்து எல்லாவற்றையும் தட்டையில் குமித்து ஹாலுக்கு கொண்டுவந்தேன். அங்கே காபி டேபிளில் உணவை வைத்து இரு கால்களையும் நீட்டி தரையில் அமர்ந்தேன். இன்று ஜனனி போனை எடுப்பாளா என்பது 50-50 கேள்வி. அவளுக்கு ஒரு "ஹெலோ, ரெடி டு ஈட்? (hello, ready to eat?)" என மெசேஜ் அனுப்பிவிட்டு வீடியோ கால் பத்தானை அமுக்கினேன். யாரோ கடவுளின் கருணையை பெறவில்லை போலும் இன்று அவரிடம் கூடுதலாக இருந்த கருணையை எனக்கு அளிக்க இரு நிமிடங்களில் ஜனனி போனை எடுத்தாள்.

"ஹாய் ராஜ்! இரு, நான் கத்தரிக்காய பிரட்டிட்டு வர்ரேன்," என்றவள் திரையிலிருந்து மறைந்து 3 நிமிடங்களுக்கு பின் மீண்டும் தோன்றினாள். கிட்சனுடன் சேர்ந்து இருந்த island kitchen top இல் ஒய்யாரமாய் அமர்ந்தவள் என்னை நோக்கினாள்.

அழகியல்Where stories live. Discover now