துளி 1

321 24 64
                                    

'அம்மா கொஞ்சம் இங்க வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுனங்களேன், ஹாப்னவரா தேடிட்டு இருக்கேன். கெடச்ச மாதிரி இல்லை..' உள்ளிருந்து வந்த குரலில் எரிச்சலும் அவசரமும் இருந்துது.

'ரிஷி அவளோ முக்கியமான பேப்பர என்கிட்டே கொடுத்து வைச்சா என்ன?. உங்க அப்பா கிட்ட கொடுத்தா அதோட மறந்துற வேண்டியதுதான்...அது பத்திரமா பரலோகம் போயிருக்கும் .திரும்ப பாக்குறது இனி கஷ்டம் தான்..', எந்த நேரமா இருந்தாலும் நிதானமான பதில் தான் வாணிக்கு, எப்பவும் போல் லேசான சிரிப்போடு.

'என்னமா நீங்களும், என் அவசரம் புரியாம அவரை கிண்டல் பண்ணுற நேரமா இது. நான் போகுறப்போ AC சர்விஸ் சென்டர்ல போய் கம்பளைண்ட் பண்ணிட்டு போகலாம்னு பார்த்தேன் இப்போ நேரமாச்சு'

' இன்னும் கொஞ்சம் நேரம் இரேன். வாக்கிங் தானே போயிருக்கார் வந்தவுடனே தேடி எடுத்துட்டு போ. அப்புறம் அங்க போய் கோவமா எதுவும் அவுங்க கிட்ட பேசிடாத அப்புறம் அதுக்கும் சேர்த்து பில் போட்ர போறாங்க'

'அதெப்படி போடுவாங்க , எனக்கு ரீபிளேஸ்மெண்ட் வேணும்னு சொல்ல போறேன்.. வாங்கி ரெண்டு மாசம் கூட ஆகல அதுக்குள்ள எப்படி மொத்தமா ரிப்பேர் ஆகும்....'

'அதெல்லாம் உங்காப்பா கைங்கைர்யம்டா, AC அஹ போட்டா ஏதோ ஒரு டெம்ப்ரேசர்ல செட் பண்ணி விட்ரனும், ஆனா இவரு அப்டியா பண்ணுறாரு ; பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை எந்திருச்சு அத ஆப் பண்ணுறது, அப்புறம் திரும்பவும் வேர்க்கும் திரும்ப ஆன் பண்ணுறதுன்னு நைட் புல்லா இதே வேலை தான்.

எனக்கு வர கோவத்துக்கு நானே எதாவது பண்ணி அத ரிப்பேர் பண்ணனும் நெனச்சேன். நல்ல வேளையா அதுவே ஆயிருச்சு...கொஞ்ச நாளைக்கு நீ அத சரி பண்ணாத அப்டியே விட்ரு..நானும் நிம்மதியா தூங்குவேன்.'

'இந்த ஊருலேயே நீங்க மட்டும் தான் இப்டி இருக்கீங்க ..இந்த வெயிலுக்கும் எப்போதும் கூலா '

சீனி மிட்டாய்Where stories live. Discover now