பாகம் - 8

1.1K 40 5
                                    


ரிசெப்சன் நல்லபடியாக முடிய  அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல பிருந்தா,மோகன்,பாலா,
காயூ என அனைவரும் சேர்ந்து சனாவை அங்கேயே பிடித்து கொண்டனர். முக்கியமான போன் கால் என்பதால் தேவா வெளியே சென்று பேசி கொண்டிருந்தான்.

சித்தா "இன்னும் யாரும் தூங்க போகலையா.... நாளைக்கு காலையில முகூர்த்தம்..... "

"தெரியும் மா கொஞ்ச நேரம் பிளீஸ்....'' என்றாள் காயூ

"சரி எண்ணமோ பண்ணுங்க சீக்கிரம் படுங்க...." என அவர் செல்ல...

"ஏய் சனா நீ இங்க என்ன பண்ணுற தூங்கு போ..." என்றாள் வைரவி.

"அக்கா.... கொஞ்ச நேரம் பேசிட்டு..." என கூறுவதற்குள்....

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ போ போய் தூங்கு...." என்றாள்.

"வைரவி அவதான் பேசனுமுனு சொல்லுறால பேசட்டும் நீ போய் தூங்கு அங்க பாரு மாப்பிள்ளை கீக்கீய வச்சுகிட்டு  நிக்கிராரு....." என்றார் vk.

"மோகன்... டேய்........ மோகன் vk வாடா இது.... வைரவிய உள்ள போக சொல்லுறாரு.... எப்பவும் சனாவ தான  திட்டு வாரு...." என்றாள் பிருந்தா.....

"அதுதான் டி எனக்கும் ஒன்னும் புரியல டி..... " என அதிர்ந்து மோகன் நிற்க...

"பிருந்தா என்னைய கொஞ்சம் கில்லேன் கனவா நினைவா.... ஒன்னும் புரியல..." என்றாள் காயூ.

"எல்லாம் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க...." என்றான் பாலா....

"அப்பா நீங்க என்ன சொல்லுறீங்க நாளைக்கு..." என வைரவி கோவமாக  கூற அதற்குள்...

"நாளைக்கு கல்யாணம் எனக்கு தெரியும் கொஞ்ச நேரம் தான வரட்டும் இது அவ கல்யாணம் அவ நல்ல என்ஜாய் பண்ணட்டும்.... அவ இஷ்டத்துக்கு....  நீ போய் தூங்கு..." என கூறி பின் திரும்பி  "காயத்திரி... அது தான உன் பேரு...??? " என அவர் கேட்க அங்கு காயூவோ அசையாமல் நின்றாள். பிருந்தா கையை கிள்ள "ஆங்.... சொல்லுங்க அங்கல்... " என பேந்த பேந்தனு முழிக்க....

" பாத்துகொங்க... கொஞ்சம்  கவனம் இருக்கட்டும்..." என சனாவின் தலையை தடவி சென்றார்....

என் உயிர் நீ... உன் உயிர் துணை நான்... Completed Where stories live. Discover now