தூரிகை 1

172 5 3
                                    

உன் ஒற்றை புருவத்தூக்களில்
அன்றே விழுந்தேனடா....
உன்னை விட
உன் மௌன மொழியை ரசித்தேனடா..
என்றும் உன் ரசிகையாய் நான்..,

"இரண்டு முற்று புள்ளி..அப்பறம் ஒரு கமா...இத்தொடா 100 வது கவிதை எழுதிட்ட அக்கா... ஆனால் இப்போ வரைக்கும் நீ உன்னோட அந்த அவருக்கு ரசிகையாய் மட்டும் தான் இருக்கையானு எனக்கு சந்தேகமா இருக்கு" எனக் கேட்ட தன் தங்கையின் தலையில் இலவசமாய் இரண்டு கொட்டுகளை வைத்தவள் "போடி போயி உன் வேளையைப் பாரு
டி" என கூறிய தன் அக்காவிடம் "இரு டி அம்மா கிட்டயே போயி சொல்றேன் அம்மாம்மா அக்கா என்னமோ ஒரு ஆப்ல (சி+ஆர்த்தவி) பேருல கவிதை எழுதறா மா யாரு அந்த சித்துன்னு கேளுமா" என அவள் கத்திக்கொண்டே செல்ல பாதி வழியில் மடக்கி பிடித்து இருந்தாள் சித்தார்த்தின் ஆர்த்தவி...

"எனக்கு அவரை தெரியாது டி..!!
ஒரு கதையில படிச்சேன்.. அதுல சித்தார்த்னு ஒரு கதாபாத்திரம் அவருக்கு நான் ரசிகை.. உண்மையாவே அந்த சித்தார்த்க்கு மட்டும் தான் இந்த கவிதை.. என கூறிய தன் அக்காவிடம் "அம்மா இந்த புள்ளைக்கு என்னமோ ஆயிருச்சு மா.. கதையெல்லாம் படிக்கறா மா.. அதுவும் குடும்ப கதை படிக்கறா மா என மீண்டும் கத்த.. அவளின் வாயை அடைத்தவள் "ஏய் சும்மா இரு டி.. அம்மாக்கு தெரிஞ்சா திட்டு விழும்.. என் செல்லம்ல.." என கெஞ்சியவளிடம் "கொஞ்சம் செலவாகும் டி"

"சொல்லித் தொலை'

"பிட்சா ஆர்டர் பண்ணி இருக்கேன்.. காசு மட்டும் கொடுத்துடு" என கூறியவளை முறைத்தவள் தன் தலையில் அடித்து கொண்டு "கொடுத்து தொலைக்கிறேன்" என கூறியவள் தன் கையில் வைத்திருந்த கவிதையை மீண்டும் ஒரு முறை படித்து.."என் கையில் தூரிகையாய் வந்த என் கள்வன்..சித்தார்த் என் கற்பனை காதலன்..!! ஹிம்ம்ம் நிஜ வாழ்க்கையில வந்தா கூட நல்லா தான் இருக்கும்.."

*********

"ஜோசியர் சிகாமணி குண்டலகேசியின் ஒரே புதல்வன் சித்தார்த் குண்டலகேசியை வருக வருக என வரவேற்கிறேன்..!" என வரவேற்க ஆயிரம் பேர் கூடி இருக்கும் அந்த மண்டபத்தின் மேடையில் ஏறியவன் அனைவரையும் பார்த்து மெல்லியதாக சிரித்து கை கூப்பி வணங்கி தன் இருப்பிடத்தில் அமர்ந்தான்..!!

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 10, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

தூரிகையென வந்தவன்Where stories live. Discover now