ஸ்டெதஸ்கோப்❤️

45 5 3
                                    

     சாரை சாரையாக வந்த மக்களைப்பார்த்து அவர்களின் குறை தீர்ப்பது என் வேலை. உடம்பில் உள்ள குறையை என்னால் மருந்திட்டு ஆற்ற முடியும் . ஆனால் மனதில்???!!
               அவளது அந்த தடிமனான மூக்குக்கண்ணாடி விழாமல் நின்றது எனக்கு ஆச்சரியமூட்டியது.அதன் வழியை என்னை கண்கள் அகல பார்த்தவாறு உள்ளே நுழைந்தாள். அமருமாறு சைகை காட்டினேன். தன் கையிலிருந்த சீட்டை என்னிடம் கொடுத்தாள்.
                
            "என்னவாயிற்று??" என்று நான் கேட்ட ஒரு கேள்வியின் வலி எனக்கு அன்று புரிந்தது.. இருக்கையை விட்டு எழுந்தவள், கண்களில் கொட்டும் கண்ணீருடன் தன் முதுகை காட்டினாள்.
           
             "என் மகன் குச்சியை வைத்து அடித்து விட்டான் சாமி", என சிறு குழந்தையாய் மாறினாள்.

                அவளுக்கு அந்த காலத்தில் ஏன் வெள்ளையம்மா என்று பெயர் வைக்கவில்லை என்று நான் யோசிக்க வேண்டியதாயிற்று.. அவளின் சுருங்கிய வெள்ளைத்தோல் ஓர் இடத்தில் மட்டும் தக்காளி பழ நிறமென சிவந்திருந்தது.
                 
                 பார்வை மறைத்தது எனக்கு, என்னுள் தேங்கி நின்று கொண்டு , வெளிவர துடித்துக்கொண்டிருக்கும் கண்ணீர் துளிகளால். நான் இருந்த பணி, எனக்கு அழ அனுமதி தரவில்லையே. அதையும் மீறி என் பாட்டியின் உருவம் தோன்றி மறைந்தது. அவளுக்கு நானை உடனிருந்து மருந்திட வேண்டும் என தவித்தது மனம்.
                     
              என்னிடம் இருந்த தைலத்தை எடுத்து தந்து "இதை போட்டுக்கோ பாட்டி" என்று கொடுத்தேன். "ஊசி போடுவாங்க, மாத்திரை போட்டுக்கோ " என சொல்லிவிட்டு அவளிடம் திரும்பி சீட்டை தரும் வேளை, "வலிக்கிது சாமி" என்றாள். என்னை சோதிப்பதற்காக இன்று வந்துள்ளாள் போல என்று எண்ணினேன். அந்த தைலத்தை வாங்கி நானே என் கைகளால் தடவியவாறு , "இதே மாறி வீட்டுல போட்டுக்கோ பாட்டி. சரி ஆகிவிடும் "என்று கூறினேன்.
                
               மீண்டும் என்னைப்பார்த்தவள்.. "கொஞ்சம் செஸ்ட் பண்ணு சாமி" என்றாள்.
   
             "நான் பார்த்திட்டேன் பாட்டி.லேசா ரத்தம் கட்டிருக்கு .இரண்டு மூனு நாள்ல சரி ஆகிடும் " என்றேன்.

         " இல்ல சாமி , இத வச்சி பாரு" என்று என் ஸ்டெதஸ்கோப்பைக்காட்டினாள். அவளிடம் சென்று, இதை வைத்துப்பார்க்கமுடியாது என்று என்னால் சொல்ல முடியவில்லை.. என்னிடன் உள்ள சொத்தையா கேட்டாள்???காசா ?? பணமா?? என்றவாறு அந்தகாயத்தில் வைத்துபார்ப்பாதைப்போல் பார்த்துவிட்டு, "நல்லா இருக்கு பாட்டி " என்று கூறினேன்.
                 95 வயதான அவளை அடிக்கும்பொழுது எப்படி துடித்திருப்பாள் என்று எண்ணும்போது ஒரு சேர கண்ணீரும் கோபமும் புகைந்தது.
                
              மீண்டும் அடுத்த நாள் வந்தாள். ஆச்சரியத்துடன் "என்னாச்சு பாட்டி " என்றேன். "என் மகன் அடிச்சிட்டான் சாமி என்றாள். பதறிப்போய் "எங்கே??"என்று கேட்டேன். அதே இடத்தைக்காட்டினாள். என்ன சொல்லி தேற்றுவது அவளை??
               
             "தினமும் அலையாத பாட்டி. மூன்று நாளுக்கு மருந்து இருக்கு "என்று இன்றும் பரிசோதிப்பது போல் பாவனை செய்தேன். அவள் மன திருப்தி என்னை நல்ல மருத்துவராக உணரவைத்தது.
                 
          அவளின் முகம் மறையக்கூடாது எனக்கு என்று தவமிருக்கிளாளோ என்னவோ!!?? மூன்றாவது நாளும் வந்தாள். எனக்குப்புரிந்தது. வீட்டில் இருக்க பயந்துகொண்டு இங்கு வந்து விடுகிறார் போலும். தினமும் நாலு வார்த்தை பேசுவதால் நான் ஒன்றும் ஆக போவதில்லை.. ஆனால் தினமும் இப்படி தனியாக அலைவதால் அவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று தான் என் கவலை,2கி.மீ க்கு அப்பால் உள்ள இடத்திலிருந்து பேருந்திற்கு காசு இல்லாமல் வழி போக்கர்களிடம் கெஞ்சி ,.....இதயம் கணமாகியது.
                 
          எதார்த்தமாக கேட்டேன் "காலையில சாப்பிட்டியா பாட்டி??" என்று. அவள் சொன்ன பதில்.." என் மருமக போடமாட்டேன்டா சாமி". மனதிற்குள் பொங்கியது கோபம். கையிலிருந்த 20 ரூபாய் பணத்தைக்கொடுத்து , செவிலியரை அழைத்து மருந்து வாங்கி கொடுத்து அனுப்பிவிடுங்கள் என்று கூறி அனுப்பிவைத்தேன்.
                 
         இவள் (மாமியார்)என்ன செய்தாளோ?? என இன்னுமும் சில பேர் யோசிக்கத்தான் செய்கிறார்கள். காலம் வசதி வாய்ப்பு எல்லாம்மாறினாலும், முதுமையை மாற்ற முடியாது. யாரும் தப்பவும் முடியாது. அந்த நிலையில் நம்மை நிலை நிறுத்தி பாருங்கள்..!!
                
          அவர்கள் எதிர் பார்ப்பது காசோ பணமோ இல்லை.. ஒருவேளை உணவு என்றாலும் , அன்பாக நாலு வார்த்தை. அவ்வளவே!!
                
           இருப்பவனுக்கே மரியாதைக்கொடுப்பது நம் பழக்கமாகிவிட்டது. இல்லாதவர்களுக்கு உதவுங்கள்.. உங்களை கடவுளாக பார்ப்பார்கள்!!

         அதன் பிறகு அவளை இன்னும் நான் பார்க்கவில்லை.. திரும்பி இதே மாறி வந்து விட போகிறாள் என்று பயமாய் இருந்தாலும், அவளை பார்க்க வேண்டும் என்றும் மனம் தவிக்கின்றது. !!!

You've reached the end of published parts.

⏰ Last updated: Jul 30, 2020 ⏰

Add this story to your Library to get notified about new parts!

பொட்டலம்Where stories live. Discover now