அத்தியாயம் 13

155 24 34
                                    

"ஆனால்.. நீங்க செய்யிறது பிழைதானே ங்க? இந்த விடயத்துல கவனம் இல்லாம இருந்தா வாழ்க்கையோட அடிப்படையே உங்களுக்கு ஒழுங்கா இருக்காதே.." என ரூஹி கலங்கிய கண்களுடன் கஷ்டப்பட்டு வந்த வார்த்தைகளை உதிர்க்க,


"ஓ மை.. எனக்கு ஆஃபிஸ் க்கு டைமாச்சு. எவ்ளோ முக்கியமான ஒரு கான்ஃபரன்ஸ் மீட்டிங் இருக்கு தெரியுமா? சே.. ஏற்கனவே உன்னால ஃபைவ் மினிட்ஸ் லேட் ஆச்சு எனக்கு. ப்லீஸ் ஸ்டாப் திஸ். இப்ப எதுக்கு நான் உன்னை ஏதோ கொடுமை பண்ண மாதிரி அழுது வடியிற?" என அளவுக்கு மீறிய எரிச்சலுடன் கத்திவிட்டு தன்பாட்டில் தன் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான் இம்ரான். ரூஹியின் கண்களோ அணையை உடைத்த வெள்ளமாகக் கண்ணீரைச் சொறிந்தன.

கண்களிரண்டும் திறந்துகொள்ள, வேகமாகச் துடித்தது அவளது இதயம். கண்கள் அழுததற்கு அத்தாட்சியாக சிவந்து, ஈரமாக இருந்தன. தான் கட்டிலில் இருப்பதை உணர்ந்தாள். ஆக, அது ஒரு கனவு, கெட்ட கனவு. "அஊதுபில்லாஹ்" எனக் கூறியவாறு இடது பக்கத்திற்கு மூன்று முறை உமிழ்நீர் வெளிவராமல் துப்பிக்கொண்டாள். தன் கண்களையும் துடைத்துக் கொண்டாள். ஆனால்..!? ஏன் அப்படி ஒரு கனவு?? அவள் மனதில் அதைப் பற்றிய சிந்தனையே ஓடிய வண்ணமிருந்தது.

"எதற்காக அவருக்கும் எனக்கும் அக்கனவில் ஏதோ முறன்பாடு வந்திருக்கும்..!?" என யோசித்துப் பார்த்தாள். வேறு எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை. "அப்படி ஒன்றும் நடக்காது.." என நினைத்து மனதை சமாதானம் செய்துகொண்டாள்.

இரவு புத்தகம் வாசித்தபடியே அந்நிலையில் தூங்கிவிட்டதால் ரூஹிக்குக் கழுத்தெல்லாம் வலித்தது. கட்டிலில் எழுந்தமர்ந்து, கழுத்தை அப்படியும் இப்படியும் திருப்பிக்கொண்டுவிட்டு சுபஹ் தொழ வேண்டுமென நினைத்தபடி வுழூ செய்யும் எண்ணத்துடன் அங்கிருந்து நகர்ந்தாள். ஹாலில் எங்கோ செல்வதற்குத் தயாராகிக்கொண்டு சில தாள்களை வைத்தபடி இம்ரான் ஏதோ செய்துகொண்டு இருப்பதைப் பார்த்தவுடன்தான் தான் இப்போது அமெரிக்காவில் இருப்பது ஞாபகம் வந்தது அவளுக்கு.

முகில் மறை மதி ✔Where stories live. Discover now