பகுதி 13

728 26 0
                                    

தோட்டத்தில் இருந்து அவர்கள் வீடு வர காலை 5.45 ஆனது. அந்நேரம் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் எழுந்து கொள்ளும் நேரம் ஆக வண்டியை வீட்டின் முன் நிறுத்தாமல் பின் பக்கமாக நிறுத்தினான் ஆதி.

கீழே இறங்கிய சனாவிடம்,
"இங்க இருந்து உள்ள போய்விடு. நான் அப்புறம் உள்ள வந்துக்கிறேன்" என்றவன் வண்டியை திருப்ப முயல,

"நான் மட்டும் உள்ள போய் மாட்டிக்கறதா? நீயும் வா" என்றவள் அவன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டாள்.

"இது என்ன வம்பா போய் விட்டது. இரண்டு பேரும் சேர்ந்து போனால் எங்க போயிட்டு வந்தீங்கன்னு கேட்பார்கள் என்று தான் நான் அப்படி சொன்னேன். "என்று கூறி, வண்டியை  மதில் அருகில் நிறுத்தியவன் முன்னே சென்றான்.

" ஆதி எதுக்கு இவ்வளவு வேகமா போற? "என்றவள் அவனைத் தன் பின்னால் மெதுவாக வரும் படி சொன்னாள்.

" இதற்கு தான் நான் அவளை மட்டும் உள்ளே போக சொன்னேன். எங்கே மாட்டிக் கொண்டால், நான் மட்டும் தப்பித்து விடுவேன் என்ற பயத்தில் என்னையும் இழுத்துச் செல்கிறாள் இந்த திமிரு பிடித்தவள். இதில் வேறு வேகமாக போக கூடாதாம். "என்று மனதளவில் நினைத்தவன் எங்கே தானும் மாட்டிக் கொள்ளப் போகிறமோ  என்ற பயத்தில் அங்கும் இங்கும் பார்த்தவாறு அவள் பின் சென்றான்.

பின் வாசலில் இருந்து சமையல் அறை சென்று உள்ளே சென்று விடலாம் என்று எண்ணி அங்கே செல்ல நினைக்க அங்கு ஆள் நடமாடும் சத்தம் கேட்டது.

அதை கவனித்த சனா அவன் கையை  இழுத்துக் கொண்டு வேகமாக பின் வாசலிற்கே சென்று அங்கிருந்த மதில் பின் ஒளிந்து கொண்டாள்.

"ஏன் திருப்பி இங்க கூட்டிட்டு வந்த?" என்ற ஆதியின் கேள்விக்கு,

"அங்க யாரோ இருக்காங்க. இப்ப போனா மாட்டிக் கொள்வோம். இப்பொழுது எப்படி உள்ளே போவது? " என்றவள்  யாராவது வந்து விடுவார்களோ என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அவள் கண்மணிகள் அங்கும் இங்கும் உருண்டோடுவதை பார்த்தவன் அதில் தன்னை தொலைத்து தான் போனான்.

என் உலகாகிப் போவாயாடா(முழுதும்) Where stories live. Discover now