அத்தியாயம் 1

19 2 2
                                    

அன்று அவள் சற்று சீக்கிரமாகவே எழுந்து விட்டாள். எப்படி புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை. இதற்கு மேல் முடியாது என்று எழுந்து தனது தினசரி வேலையை தொடங்கி விட்டாள்.

மணி காலை நான்கு.

தனது மடிக்கணிணியின் முகத்தில் தெரிந்த பிரகாசத்தில் தனது கண்கள் கூசினாலும் சிறிது நேரத்தில் அதைப் பழக்கப்படுத்திக்கொண்டு மனதில் தோன்றிய அனைத்தையும் பொதிந்து வைக்கத் தொடங்கினாள். நேரம் கடந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் தனது வீட்டில் ஒவ்வொருவராய் எழுந்து வரத் தொடங்கினர்.

”என்ன மதி சிக்கிரம் எழுந்துட்ட போல.. எழுந்துட்டனா வீட்டுல உள்ள வேலைய எதாவது பாக்கலாம்ல… காலையிலயே ஆரம்பிச்சுட்டியா உன் Screenplay அ…? படிச்சது Software engineering, இதுல Topper வேறு... படிச்ச படிப்புக்கு ஏத்த வேலைய பாத்திருந்தா இதுக்குள்ள நீயும் நம்ம வீடும் நல்ல நிலைமைக்கு வந்திருக்கும்… போடி நீயும் உன் passion உம்…” பட்டென பொரிந்து விட்டு சலித்துக் கொண்டாள் அவள் அம்மா, கலா.

படித்து முடித்த பின் வேலையில்லை என்றாள் ஆண்களுக்கு மட்டுமில்லை பெண்களுக்கும் மரியாதை இல்லை வீட்டில்..ஹாஹா… அதே தான் வெண்மதி க்கும்…

வெண்மதி…

பெயருக்கு எற்றார் போல் பிறை போன்ற நெற்றி, மதியின் ஒளி தவழும் முகம். அந்த ஒளியை விட பிரகாசமாக அவளது அதரம் சிந்தும் புன்னகை… பொன் நகை ஏதும் தேவை இல்லை இவள் புன்னகை தெறிக்கும் பார்வையின் முன். கன்னியமும் கூர்மையும் நிறைந்த அவளது கண்கள். அவள் கன்னம் தொடும் கார்மேகச் சுருள் முடி. நேர்த்தியான உடை அணியும் நவீன அழகுப் பதுமை…

Software engineering இல் Gold medallist அவள்…ஆனால் கணினியின் மீது காதல் இல்லை அவளுக்கு… அவள் காதல் எல்லாம் திரையின் மீதும் திரையின் கதை மீதும் தான். ஆம், அவளுக்கு திரைக்கதை எழுதி தானே ஒரு படம் இயக்க வேண்டும் என்பது கனவு…அவள் எழுத்து பித்து. என்ன எழுதுகிறாளோ அதுவே அவள். அவள் பார்க்கும் எல்லாம் கதையாக பொதிந்து விட வேண்டும் என்பது அவளது தீராக்காதல்.. மீளாத் தேவை..

சாத்திரங்கள் சொல்லுதடி..!!Where stories live. Discover now