அத்தியாயம் 11

1 0 0
                                    

விடிவெள்ளியும் தன் வேலை முடிந்தது என கதிரவன் வெளிச்சத்தில் மறைந்து போக, மதி தனது பிறந்தநாளின் காலையை தொடங்கினாள்.

தனது பெயர் கொண்ட கிராதகன் கதிரவன் தன் மீதே அவன் கனல் கதிர்களை தெளிக்க கண்கள் மூடியபடி அவன் அவனின் அவளை துலாவினான். அவள் இல்லையென உணர்ந்த அவன் எழுந்து சென்று வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

இந்த வருடம் நல்லபடியாக அமைய வேண்டும், கனவு நிறைவேற வேண்டுமென கடவுள் முன் தன்னவள் நின்று கொண்டிருப்பாள் என எண்ணி வந்தவன் ஏமாற்றத்துடன் சமையலறை செல்ல, அங்கே அவளோ எண்ணெயில் கடுகு போட்டு அது பொரிவதை ஏதோ உலக அதிசயத்தை பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

அவளிடம் சென்று அவள் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாக சிறிது கீழே குனிந்து அவள் காதோரம் ஆடும் கம்மலின் இசையை துணையாய் கொண்டு ரகசியமாக,”Happy Bday Mathi..” என கூற அவள் திரும்பி ஒரு புன்சிரிப்பு சிரித்துவிட்டு ‘ரொம்ப முக்கியம்… முதல்ல சட்னி அப்பறம் தான் நீ..’ என்பதுபோல சட்னியை தாளிப்பதிலேயே கவனமாய் இருக்கிறாள். அவளை ஆச்சரியத்துடன் பார்த்தவனுக்கு கையில் அவனது ஃபேவரிட் காஃபியைக் கொடுத்துவிட்டு,” ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி.. ஃப்ரெஷ் ஆயிட்டு வா சாப்பிடலாம்..” என்றாள்.

ஆதி பெருமூச்சுடன்,”நேத்து நான் உனக்கு கொடுத்த கிஃப்டை ஓப்பன் பன்னி பாத்தியா..?” எனக் கேட்க, “இல்ல ஆதி… அப்பறமா பாக்குறேன்…” என்றாள்.

“ப்ச்ச்..” என காஃபி கப்பை அங்கேயே வைத்துவிட்டு தன் அறைக்கு சென்று அதை எடுத்து வந்து அவள் வலது கையை இறுக பற்றி அவளை வீட்டின் கூடத்திற்கு வரவைத்து அங்கே திறந்து பார்க்க சொன்னான். அவள்,”ஏன் இந்த அவசரம் இப்போவே பாக்கனுமா…வேலை இருக்கு ஆதி…” என சலித்துக்கொண்டே கேட்க, அனைவரும் வந்துவிட்டனர் அதற்குள். மதியை உடனே பார்க்கவேண்டுமென அடம்பிடித்து வந்த கவினும் காவ்யாவும் ஓடி வந்து மதியின் கால்களைக் கட்டிக்கொண்டு, ”பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்தை…”எனக் கூற அவர்களை அணைத்து நன்றி கூறிவிட்டு அந்த கிஃப்டை பிரித்தாள் மதி.

சாத்திரங்கள் சொல்லுதடி..!!Where stories live. Discover now