சுடர் - 41

1.5K 64 6
                                    

"எதுக்கு மா இவ்வளவு அவசரமா அங்கிருந்து கிளம்பின? இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தா பரிதிய பார்த்து பேசி இருக்கலாமே!

அவன் நிச்சயம் அங்க இருந்திருக்க மாட்டான். இருந்திருந்தா இவ்வளவு நேரம் இவுங்க உன்ன அவமானப் படுத்த அனுமதிச்சிருக்க மாட்டான்" என்றார் மகேஷ்வரி ஆதங்கத்துடன்.

"அவர் அங்க தான் இருந்தாரு அத்த, நான் அவரை பார்த்தேன்" என்று கூறும் போதே அவள் குரல் உடைந்து அழுகை அவளை மீறி வந்தது. அவர் மடியில் முகத்தை புதைத்து தேம்பி அழுதாள்.

மகேஷ்வரி அதிர்ச்சியாக அமர்ந்திருந்தார். அவள் அழுது முடிக்கும் வரை அவர் அவளை தொந்தரவு செய்யவில்லை.

"பரிதியை எப்போ பார்த்த?" அவர் கேட்க, "நாம பேசி முடித்து கிளம்பும் போது அவர் வேறொரு வழியா வீட்டுக்குள்ள போனாரு அத்த! ஏதோ நாம கிளம்புவதுக்காக காத்திருந்த மாதிரி இருந்துச்சு.

அந்த வீட்டுல அவர் எங்கே இருந்திருந்தாலும் நாம பேசினது அவர் காதில் விழாம இருக்க வாய்ப்பே இல்ல. அதையெல்லாம் கேட்டும் அவர் வந்து அதை தடுக்கலையே!

என்ன காப்பாத்த வரலைன்னு நான் கவலை படல, ஆனா அம்மாவா ஏத்துக்கிட்ட உங்கள அவ்வளவு அவமானப் படுத்தி அவுங்க உங்கள கீழே தள்ளி விடும் போது கூட அவர் வந்து ஒரு வார்த்தை கேட்கலைனு நினைச்சா தான் எனக்கு வேதனையா இருக்கு" என்றாள் கண்ணீருடன்.

"இப்போ இதை பற்றி எதுவும் பேச வேண்டாம் மா, நீ அமைதியா இரு மற்றதை நாளைக்கு பேசிக்கலாம்" என்று கூறி அவளை சமாதானம் செய்து உறங்க வைத்தார்.

மறுநாள் காலை அவளின் இல்லத்தை அடைந்திருந்தார்கள். இளமதியை அவள் அறையில் ஓய்வெடுக்க சொல்லி விட்டு அவளுக்கு துணையாக லட்சுமியை அங்கேயே விட்டு வந்தார்.

"என்னாச்சுங்க மா, ஏன் மதி முகம் என்னவோ மாதிரி இருக்கு? இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துட்டீங்களே!" என்றாள் மாதவி வருத்தத்துடன்.

மகேஷ்வரி சுருக்கமாக நடந்தவற்றை விளக்கினார். மாதவிக்கு தலை சுற்றியது. இவ்வாறு ஒரு நிலை அவர்களுக்கு வரும் என்று அவரும் எதிர்பார்க்கவில்லை.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now