சுடர் - 46

1.7K 74 11
                                    

"அண்ணா, பரிதிக்கு என்ன ஆச்சுன்னு விசாரிங்க. எனக்கும் ரொம்ப பதட்டமா இருக்கு" என்றார் மகேஷ்வரி.

"கவலைப் படாதே மா, நான் போய் பார்க்குறேன். நீ இளமதியை கவனித்துக் கொள்" என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

இளமதிக்கு மயக்கம் தெளிந்திருந்தாலும் மனம் படபடப்பாகவே இருந்தது. பரிதிக்கு எதுவும் நேர்ந்திருக்க கூடாது என்று மனதில் வேண்டிக் கொண்டே இருந்தாள்.

சுமார் நான்கு மணி நேரம் சென்றிருக்கும், இளமதி எதுவும் சாப்பிடாமல் யாரிடமும் பேசாமல் அவள் அறையில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தாள்.

திடீரென யாரோ அவள் அறை கதவை திறந்தது தெரிந்தது. "யாராக இருக்கும்? யாரேனும் எதுவும் சொல்ல வந்திருக்கிறார்களா? முருகா! என் பரிதிக்கு எந்த ஆபத்தும் வந்துருக்க கூடாது" என்று மனதார வேண்டி கொண்டாள்.

"மதி!"

அவள் செவிகளில் விழுந்தது அவன் குரல் தானா? நிஜமாகவே அவன் வந்து விட்டானா? இல்லை இதுவும் என் கனவா! என்று பல சிந்தனைகள் அவளுள் எழுந்திருக்க, "மதி! என்ன பாரு" இந்த முறை அவளுக்கு மிகவும் அருகாமையில் அவன் குரல் கேட்டு கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீருடன் அவனை திரும்பி பார்த்தாள்.

அவன் நலமாக இருக்கிறான் என்பதை உணர்ந்தாள். எதுவும் பேசாமல் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். இது கனவல்ல நிஜம் தான் என்று அவள் உணர வெகு நேரம் ஆனது.

பரிதி அவள் தலையை வருடியபடி அவளை ஆசுவாசப்படுத்தினான். வெகு நேரம் ஆகியும் அவன் அணைப்பில் இருந்து விலக மனமில்லாமல் அவ்வாறே அமர்ந்திருந்தாள்.

"மதி! எனக்கு ஒன்னும் இல்ல! நீ பயப் பட வேண்டாம்" என்றான் பரிதி மௌனத்தை கலைத்து.

"அடி எதுவும் இல்லையே!" என்று வேகமாக அவன் அணைப்பில் இருந்து விலகி அவன் முகத்தையும் கைகால்களையும் ஆராய்ந்தாள்.

"எனக்கு எதுவும் இல்ல மதி. நான் அந்த வழியிலும் வரல, கார்லையும் வரல, அதனால நீ எதுவும் பதட்டப்படாதே!" என்றான் பரிவாக, அவள் கண்ணீரை துடைத்து கொண்டாள்.

என் வாழ்வின் சுடரொளியே!Where stories live. Discover now