Chapter 1

877 66 2
                                    

முல்லை கல்லூரி முடிந்து பேருந்தில் குன்னக்குடி நோக்கி வந்து கொண்டிருக்கையில்...

ஒரு சாதி பெரியவரை இன்னொரு சாதியை சேர்ந்தவர்கள் வெட்டி விட்டார்கள் என்று அந்த ஊர் கொந்தளித்து கலவர பூமியாக எரிந்து கொண்டிருந்தது...காவல் துறை ஊரடங்கு போட்டு கலவரத்தை அடக்க போராடி கொண்டிருந்தது....

ஆங்காங்கே குடிசைகள் தீக்கு இரையாக்கப்பட்டு ஆள் அரவமற்று ஊர் அடங்கி கிடந்தது...ஊர் எல்லையில் ஒரு ஆள் நடமாட்டம் இல்லை...

சாதி கலவரத்தால் பேருந்துகள் ஊரின் எல்லையிலே நிறுத்தப்பட்டது...

நடத்துனர்: குன்னக்குடி போறவங்க எல்லாம் இங்கையே இறங்குங்க மா...

முல்லையும்...விஜியும் மட்டுமே குன்னக்குடி போகிறவர்களாக அந்த பேருந்தில் இருந்தார்கள்...

இருவரும் பிரச்சனையின் ஆழம் அறியாமல் பேருந்தில் இருந்து இறங்கி பயத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.

பேருந்து அவர்களை இறக்கிவிட்டு வேற ஊர் வழியாக பயணித்தது..

விஜி: முல்லை...உன்.வீட்டுக்கு call பண்ணுடி...

முல்லை: ஐயோ..எங்க அப்பா ஊர்ல இல்லையேடி...காலைல தான் அம்மாவும் அப்பாவும் மதுரை போனாங்க...இப்ப என்னடி பண்றது...உங்க வீட்டுக்கு call பண்ணுடி...

விஜி: இருடி அண்ணனுக்கு அடிக்கிறேன்....

விஜி அண்ணனின் அலைபேசி அணைப்பில் இருந்தது...

அவனும் சாதி சண்டை குழுவில் முக்கிய நபராக குழுமியிருந்தான்...

முல்லை தன தந்தைக்கு அழைக்க...முருகன் பதறிவிட்டார்...

முருகன்: அம்மாடி...அப்பா உடனே ஊர்ல இருந்து கிளம்புறேன் டா...அது வரை அங்கையே பத்திரமா இருடா...

தனியா நிக்காத...கூட்டத்தோட நில்லுடா..என்று சொல்லிவிட்டு பதட்டத்தோடு குன்னக்குடிக்கு கிளம்ப ஆயத்தமானார்....

இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே...

சாதி சண்டை குழு ஒன்று விஜியை பார்த்தது...

சாதி..வெ1: டேய்...அந்த பொண்ணு யாரும் தெரியும் ல..

சாதி..வெ2: அந்த புள்ள..அந்த ஜாதிக்காரப்பிள்ள தாண்டா...அவ அண்ணன் அங்க நம்மாளுக கிட்ட ஒரண்ட இழுத்தாண்டா...

சாதி..வெ1: அப்படியா...அந்த நாய்க்கு அவ்வளவு அதுப்பா...நம்ம யாருனு அவ தங்கச்சி கிட்ட காட்டுவோம்...என்று சாதி வெறியுடன் வேற ஒரு வெறியும் ஏற ஒரு கழிசடை கொக்கரித்தது..

அவர்கள் விஜியையும்...முல்லையையும் நோக்கி நகர்ந்தார்கள்...

சாதி.வெ3: கூட ஒன்னு அழகா நிக்குது டா? வேற ஜாதி பொண்ணாச்சே டா...

சாதி..வெ: டேய்..கலவரத்தோட கலவரமா எல்லாத்தையும் சேர்த்து முடிச்சு விட வேண்டியது தான்...நமக்கு இன்னைக்கு ஏதோ மச்சம் இருக்குடா...கிளி கணக்கா இரண்டும் சிக்கியிருக்கு...எதுவா இருந்தா என்ன என்று குடிபோதையில் சிரித்து கொண்டே வந்தார்கள்...

இதுகள நம்ம வண்டில தூக்கி போட்டு கருவ காடுக்கு கொண்டு போயிருங்க டா...

SP நம்ம ஆளு தான்...பிரச்சனை ஒன்னும் வராது....பார்த்துக்கலாம்...

நம்ம ஐயாவையே போட்டாய்ங்க...இதெல்லாம் என்ன பெரிசா..பாத்துக்கலாம்....

அவைங்க பொண்ண தூக்குனா தாண்ட அவங்க சரி வருவாய்ங்க....

என்று குடியில் நிதானமிழந்தது மட்டும் இல்லாமல்...சாதி வெறியுடன்...காமமும் கலந்துவிட்ட காமுகர்கள் அவர்களை நோக்கி சென்று அவர்களிடன் தகாத வார்த்தைகளை
பேசிக்கொண்டிருக்கையில் தூரத்தில் கதிரின் வண்டி  மெதுவாக வந்து கொண்டிருந்தது..

(தொடரும்)

மாமன் மகள்(STOPPED)Tempat cerita menjadi hidup. Temukan sekarang