Chapter 3

459 73 8
                                    

ஊருக்குள் அவர்கள் வர ஊரில் ஒரு
ஈ காக்கா இல்லை...

எல்லாரும் அவரவர் வீட்டில், பகலிலையே கலவரத்திற்கு பயந்து வீட்டிற்குள் அடைப்பட்டு இருந்தனர்...

விஜி வீடு அருகில் வரவே

முல்லை: மாமா..வண்டிய நிறுத்து...நாங்க இறங்கிக்கிறோம்..

கதிர்: ஹே...என்னடி விளையாடுறிய... ஒழுங்கா நீ நம்ம வீட்டுக்கு வா.இப்ப இருக்க நிலைமைக்கு இங்க உன்ன விட்டுட்டு போக சொல்றீயா?

முல்லை: ஆத்தி வேண்டாம்..விஜி அம்மா இருக்காங்க...இங்க இவ்வளவு வீடு இருக்குல....நான் அங்க வந்தது
அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்...கொண்டுபோட்டுருவாங்க...

கதிருக்கு முல்லை இவ்வாறு சொன்னது வருத்தமாக இருந்தது..

கதிர் வண்டியை நிறுத்த இருவரும் இறங்கி கொண்டனர்...

விஜி வீட்டுக்குள் செல்ல

முல்லை கதிரை பார்த்து
"நீ கிளம்பு மாமா" என்று வருத்தத்துடன் சொல்ல

கதிர் வருத்தத்துடன் நின்றான்..

கதிர்: முல்லை..
முல்லை: ஏன் மாமா...வருத்தப்படுறியா...
கதிர்: இந்த நிலைமைல கூட எப்படி டி நான் உன்னை தனியா விடுறது...கஷ்டமா இருக்குடி...வாடி...நம்ம வீட்டுக்கே போலாம்...மாமாகிட்ட ஏதாவது சொல்லிக்க...
முல்லை: மாமா..புரிஞ்சுக்கோ...
கதிர்: நீ நான் சொன்னா கேக்க மாட்டியா?
முல்லை: கேட்பேன் மாமா...உன் பேச்ச கேட்காம இருப்பேனா.....ஆனா இப்ப வேண்டாம் Pls...
இந்த வருஷத்தோட நீ சொன்ன மாதிரி என் படிப்பு முடியுது...
என்ன கல்யாணம் பண்ணிக்க...
நான் உரிமையா உன் பொண்டாட்டியா நம்ம வீட்டுக்கு வரேன்...

கதிர்: ஆமா கூப்பிட்டா வீட்டுக்கு வரவே இவ்வளவு யோசனை உனக்கு...
இந்த லட்சனத்துல கல்யாணம் பண்றாக உன்னை...

...என்று ஏமாற்றத்துடன் முணங்க

முல்லை: என்ன ? என்ன சொன்ன.. இப்ப என்ன சொன்ன நீ?....திரும்ப சொல்லு

கதிர்: ஒன்னும் சொல்லலையே..

முல்லை: இங்க பாரு...விளையாட்டுக்கு கூட இப்படி சொல்லாத சொல்லிட்டேன்...

மாமன் மகள்(STOPPED)Where stories live. Discover now