Chapter 6

649 67 12
                                    

மாமன் மகள்
பகுதி - 6

ஓவியம் முடித்த கையோடு, ஒய்யாரமாய் அவள் எழுந்து நடக்க, அவள் நடக்கும் அழகை ரசித்தபடி பின்புறமாய் வந்த அவன் அவள் கண்களை மூட

முல்லை: மாமா....

கதிர்: கண்டுபிடிச்சிட்டியா?

முல்லை: ஆமா..பெரிய கண்டுபிடிப்பு...உன் வாசம், உன் ஸ்பரிசம் எனக்கு தெரியாதா? வேற யாரு என் கண்ண பொத்துவா...

கதிர்: ஓ...அப்படி வர...சரி சரி..
உன்ன குளத்துக்கு தானடி வர சொன்னேன்....இங்க உட்கார்ந்து இருக்க.

முல்லை: இங்க நல்லா இருந்துச்சு..அப்படியே உட்கார்ந்து வரைய ஆரம்பிச்சிட்டேன் மாமா...

கதிர்: ம்...பார்த்தேன்...பார்த்தேன்...
வரைஞ்சிட்டு..அப்படியே வச்சிட்டு நம்ம மரத்த பார்க்க போறீயாக்கும்...

முல்லை: ஹி..ஹி..புத்திசாலி மாமா...

கதிர்: வேற எங்க போவ நீ....இப்படி எல்லாம் தனியா போகாத சொல்லிட்டேன்...அதுவும் சாயங்கால நேரத்துல...

முல்லை: ஆகா...என்ன அக்கறை...அவ்வளவு அக்கறை இருக்கவ correct ஆ சொன்ன time க்கு வரனும்...நான் வந்து 1 மணி நேரம் ஆக போகுது..

கதிர்: ஏன்டி...நீ முக்கால்மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துபுட்டு என்ன சொல்றீயா?

முல்லை: அதெல்லாம் நாங்க அப்படித்தான்...உன்ன மாதிரியா?
சரி அந்த படத்த பார்த்தியா? உனக்கு பிடிச்சிருக்கா....

கதிர்: பாத்தேன்...ரொம்ப ரொம்ப அழகா இருக்கு...எனக்கு பிடிச்சிருக்கு..Signature முல்லை கதிர்வேலன் அதுகூட ஓவியமா இருக்கு டி...இது எனக்குதானே...

முல்லை: ம்...

கதிர்(சிரித்துக்கொண்டே): படமும் எனக்கு தான் படம் வரைஞ்சவளும் எனக்குதான்.

முல்லை: ம்ம்...நினைச்சேன்...நீ சொல்லுவனு...இரண்டுமே உனக்கு தான்...

கதிர்: நீ நெனச்சா, அத சொல்லுவான்டி உன் மாமா...

அது இருக்கட்டும் அது என்ன என் வாசம்...அப்படி ஒன்னு இருக்கா... உனக்கு நான் அவ்வளவு அத்துப்பிடியோ..

Você leu todos os capítulos publicados.

⏰ Última atualização: Jul 18, 2021 ⏰

Adicione esta história à sua Biblioteca e seja notificado quando novos capítulos chegarem!

மாமன் மகள்(STOPPED)Onde histórias criam vida. Descubra agora