12. பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்

333 12 0
                                    

நண்பர்களுடன் மரத்தடியில் அமர்ந்தவன் காதில் ஹெட்ஃபோன் மாட்டியிருந்தான். மற்றவர்கள் அனைவரும் கைபேசியில் எதையோ செய்து கொண்டிருக்க அவன் மட்டும் கண்களை மூடி மரத்தில் சாய்ந்தவாறு ஒரு பாடலை மெல்லிசாக முணுமுணுத்து கொண்டிருந்தான். ஏனோ அதைக் கேட்க வேண்டுமென தோன்ற அவனருகே சத்தமில்லாமல் அமர்ந்தாள். அவர்களைப்பற்றி அவன் நண்பர்களுக்கு தெரிந்ததால் சிரிப்போடு அவ்விடத்தை விட்டு சென்றனர். அவர்களிடம் நன்றி என்பது போல சைகை செய்தாள் ஜனனி.

பின் கவனத்தை முழுதும் அவனிடம் திருப்பினாள். அருகே அமர்ந்தும் அவன் பாடுவது சரியாக கேட்காமல் இருக்க மேலும் நெருங்கி அவன் இதழ்கள் அருகே அவள் காதை கொண்டு சென்றாள்.

"எந்தன் மனம் பார்க்க சொல்வதெல்லாம் கேட்க
கிடைத்த ஓர் உயிர் துணை நீயே.."

என்று அவன் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டவள் இதழிலும் புன்னகை மலர்ந்தது. ஆனால் அதே நிமிடம் காற்றால் அவள் தலைமுடி அவன் மூக்கில் பட ஜீவா தும்மினான். அதில் பதிறி விலகியவள் திருட்டுமுழி முழித்தாள். அவளை அங்கு எதிர்ப்பார்த்திருக்காதவன் அதிர்ந்து எழுந்தான். சுற்றி வேறு யாரும் இல்லாததால் குழப்பத்தோடு அவளைப் பார்க்க அவள் முகபாவனைகளால் ஒற்றைப் புறுவத்தை உயர்த்தினான்.

உடனே அசடு வழிய சிரித்தவள், "நீ பாடிட்டு இருந்தியா. அதான் சும்மா கேட்கலாமேனு உட்கார்ந்தேன். Trust me. உன் ஃபர்ண்ட்ஸா தான் போனாங்க. நான் ஒன்னும் சொல்லல" என்றாள் தொண்டையில் கைவைத்து.

அதைக் கண்டு சிரித்தவன் அவள் கையைப் பிடித்து தன் அருகே அமரச் செய்து தானும் அமர்ந்தான். அமர்ந்த பின்னும் அவன் அவள் கையை விடாமல் இருக்க உள்ளம் படபடத்தாலும் அதை மறைத்துக் கொண்டு, "ஹே ஜீவா...எனக்காக அத திரும்ப பாடேன். Clear ஆ வே கேக்கல" என்றாள்.

அவள் ஆர்வத்தை உணர்ந்தாலும் முதன்முறையாக வேறொருவர் முன் பாடுவது அவனுக்கு சிறு பதட்டத்தை உண்டு பண்ணியது.

"நான் ..அவ்ளோலாம் நல்லா பாட மாட்டேன். அது..உனக்கு பிடிக்காட்டி" என்று அவன் தயங்க,

"ம்ச் நான் என்ன சூப்பர் சிங்கர நடத்றேன். சும்மா ஃப்ரியா பாடு ஜீவா. நா தானே" என்றாள்.

இந்த பாடலை அவன் அவளை நினைத்தே கேட்டதால் ஜீவாவிற்கு அது மேலும் சிரமமாக இருந்தது. இருப்பினும் அவளை ஏமாத்த மனமில்லாமல் பாடத் துவங்கினான்.

"எந்தன் முகம் காட்டும் புன்னகைகள் கேட்டும் மனதின் கண்ணாடி நீயே.."

என்று அவன் பாட துவங்கியதும் அவள் புன்னகை மேலும் விரிந்தது. அதில் இருந்த தயக்கங்கள் மறைய மனதார பாடத் துவங்கினான் ஜீவா.

"என்னை என்னைப் போலே ஏற்றுக்கொண்டதாலே எதிரொலியாகிடுவாயே.."

இம்முறை அந்த வரியில் அவன் மனதும் பிரதிபலித்தது.

"கண்டதை பாடவும்
கண்மூடி ஆடவும்
என் துணையாக வந்தாயே
சண்டைகள் போடவும்
பின்வந்து கூடவும்
ஆயிரம் கரணம் தந்தாயே
வண்ணங்கள் நானே நீ தூரிகையே
என் நண்பியே நண்பியே
எனைத் திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழக்கும் இன்பியே.."

என்று இறுதியில் அவன் குரல் உயர்ந்து ஒலிக்க அதில் தன்னைத் தொலைத்தவள் கைதட்டுவதற்குள் ஒரு கூட்டமே சூழ்ந்து கைதட்டியது.

அவனுக்கு அவர்களைப் பார்த்ததும் கூச்சம் அதிகரிக் பார்வையை மேலே சுழலவிட்டான். ஒருவர் பின் ஒருவராக வந்து அவனுக்கு வாழ்த்துக்கள் கூற யாருக்காக பாடினானோ அவள் சிலையென நின்றிருந்தாள்.

ஒருநிமிடம் அவனை ஓடிச்சென்று அணைத்தவிடலாமா என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற அந்த எண்ணத்தில் முகம் சிவந்தவள் முகத்தை மறைத்துக் கொண்டே அவனுக்கு கை கொடுத்தாள்.

"செமையா... இருந்தது ஜீவா...நா வர்றேன்" என்று முணுமுணுத்து விட்டு ஓடினாள்.

அவளது உணர்வுகளை அறியாதவன் அவளுக்து தான் பாடியது பெரிதாக பிடிக்கவில்லையோ என்று மனம் வருந்தினான்.
______________________________________________________

வணக்கம் மக்களே ❤️,

என்ன நினைக்கிறீங்க ஜீவா திரும்ப அவளத் தேடி போவானா இல்ல காத்திருப்பானா?

பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்Where stories live. Discover now