பகுதி 1

297 38 6
                                    

பச்சைப்பசேல் என்று இருக்கும் கிராமம் ;;;;;;  கால் நடைகளின் வாசமுனமும் விதைக்கப்பட்ட தளிரிட்டு கதிர் விடப்போகும் நெற்கதிரின் வாசமும் நிறைந்து மண்மனம் மாறாத அழகிய கிராமம்

முல்லை: அப்பா அம்மாவுக்கு 1/2 குறுக்கம் விவசாய நிலம் தான் அம்மா அப்பா இருவரும் விதைத்து அதில் வரும் வருமானம் வைத்து சாப்பிட்டு முல்லை யும் படிக்க வைக்க வருமானம் பத்தாததால் அந்த நிலத்தையும் அடமானத்தில் அவ்வூரின் தலையதிகாரியிடம் கடன் பெற்றுள்ளனர்



கதிர்:வீட்டில் காடு களனிகள் அதிகம் கண்ணுக்கு எட்டும் தூரமும் அதை தாண்டி பிஞ்சைகளும் அதிகமா இருக்கின்றன

அவர் அப்பா அம்மா சம்பாதித்தது கொஞ்சம் என்றால் பிள்ளைகளின் உழைப்பால் இன்னும் அதிகபடுத்தி வாங்கி விவசாயம் பன்னி மொத்தமாக விற்பனைக்கு அனுப்புகின்றனர் அனைவரும் உழைத்தாலும் கதிரவனின் உழைப்பு மூன்று ஆண்களுக்கு ஈடுகட்டும் உழைப்பு,  அவனது உலகமே விவசாயமும் உடன் பிறந்தவர்களும் வீடு உறவுகள் மட்டுமே

தங்கை என்றால் அனைவருக்கும் உயிர் அவளுக்கும் சகோதரர்கள் என்றாள் உயிர் அண்ணி மீது மிகவும் மரியாதை கொண்டவள் கன்னனுக்கு மட்டும் சகோதரி அக்கா .
அழகான குடும்பம் அவள் கணவன் விவசாயம் அவரும் அவர் கிராமத்தில் மதிப்பு மிக்க செல்வந்தர் தான் இருந்தாலும் இவர்கள் தங்கள் வீட்டில் கொஞ்சம் வித்தியாசமாக சமைத்தால் கூட தங்கைக்கு எடுத்து சென்று கொடுப்பார்கள்  தனமும் டிகிரி முடித்தவள் மாமன் மகன் என்ற உரிமையில் பெரியோர்களின் ஆசைக்காகவும் இவளும் மூர்த்தி மீது கொண்ட அதித அன்பினாலும் கட்டிக் கொண்டு முழு நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்





அதிகாலை நேரம் ,,

பகலில் உழைத்த களைப்பில் கட்டிலில் படர்ந்து அயர்ந்து துயிள்கிறான்; கதிரவன் அருகில் ஜீவாவும் கட்டிலில் தூங்குகிறான்,


காலை கதிரவன் உதிக்கும் முன்பே சேவல் கூவ கதிரவன் விழிக்கிறான்⏰4;விழித்து நேரம் ஆனது போல எழுந்து கட்டிலில் அமர்ந்து தன் சோர்வை முறித்துக் கொண்டு காலை கடன்களை முடித்து விட்டு வயலிற்க்கு,வாழைக்கு தென்னைக்கு நீர்பாய்ச்ச ஆயத்தமாக நிற்க்க

தனம் :   என்னடா கதிர் எழுந்துட்டியா

கதிர் :ஆமாம் அண்ணி வெயில் ஏறும் முன்பே நீர் பாய்ச்சினால் குளுமையாக வீரியமாக வரும் அதான் போயிட்டு வாரேன்

தனம் : இருடா அண்ணன் வரட்டும்

கதிர்:  அண்ணன் எதுக்கு தூங்கட்டும் நான் முடிச்சிட்டுவாரேன் அண்ணன் ஒரு 6 மணிக்கு வந்தால் போதும்

தனம்: சரி இரு வாசல் தெளித்து கோலம் போட்ட பிறகு கிளம்பு

என்று சொல்லிக் கொண்டே சாணம்  எடுத்து அதில் கொஞ்சம் மஞ்சள் கறைத்துத் தொழித்து கோழமிடுகிறாள்


கதிரவன் தன் அண்ணி செய்வதை முகத்தில் மலர்ந்து புன்னகைத்துக் கொண்டே ரசித்துக் கொண்டே இருக்கின்றான்

அண்ணி நீங்கள் மட்டும் எப்படி அண்ணி இவ்வளவு அழகாக கோலம் போடுறீங்க நீங்கள் போடுற எல்லாக் கோலமும் எனக்கு பிடிக்கும்

தனம்: ஆமான்டா இப்போம் இப்படி தான் சொல்வீக நாளைக்கு உங்களுக்குனு பொஞ்சாதி வந்ததும் அவ போடுறக் கோலம் தான் பிடிக்கும் எங்களுக்கு தெரியாத என்ன

நக்கலாக துடைப்பத்தையும் நீர்தெளித்த வாளியும் ஓரமாக வைத்து விட்டு கோழமாவை தின்னையின் மேல் இருக்கும் மாடாக் குழியில் வைக்கிறாள் ;

கதிரவனின் முகத்தில் நாணங்கள் படர்ந்து தன் புண்ணகையுடன் தன் இதழ்களை தன் பற்களால் கடித்துக் கொண்டு அதையும் வெளியே அண்ணி தெரியாதளவிற்கு மறைத்துக் கொண்டு;

யாருவந்தாலும் நீங்கள் போடுறமாதிரி கோலம் யாராலையும் போட முடியாது அண்ணி; என அண்ணியிடம் சமாளித்து விட்டு
ம் சரி அண்ணி கிளம்புறேன் என்க;

பார்த்து போடா பூச்சி பட்டை வரும் கவனமாக வேலைய பாரு சரி அண்ணி கிளம்புறேன் ; தனம் மலர்ந்த முகத்துடன் ம் சரி என்க



அவன் அங்கே நின்றுக் கொண்டிருந்த இரண்டு சர்க்கர வாகனத்தை எடுத்து செல்கிறான் அங்கே களனியில் நீர் பாய்ச்சி உரம் இட்டு வேலையை முடிக்க பலபல வென்று ஒருவர் முகம் ஒருவருக்கு தெளிவாக தெரியாத நேரம் ;

காலை கதிரவன் மெதுவாக எட்டிபார்க்க முயல்கிறான்;

நம் கதிரவன் வீடு திரும்புகிறான் வண்டியில் வந்து கொண்டிருக்கும் சமயம் வண்டி கண்ணாடியில் சற்று தொலைவில் ஒரு உருவம்



உங்களுக்கு இந்த கதை பற்றிய‌ கருத்தை சொல்லுங்கள்

அடுத்த பகுதியில் நமது நாயகியை பார்போம்





kathirmullai kaadhal kaaviyam🤩🤩Where stories live. Discover now