என் இம்சை அரசி-1

67 3 4
                                    

கி.பி 1750 ஆண்டு-

"வனமலை உங்களை அன்புடன் வரவேற்கிறது"

என்ற பெயர் பலகையை பார்த்ததும், அந்த வழிப்போக்கன், குதிரை கடிவாளத்தை கெட்டியாக பிடித்து கொண்டான்.

வனமலை என்றாலே 'ஆபத்து' என்று கேள்வி பட்டிருக்கிறான். குறிப்பாக இரவில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஊர் கிழடுகள் கூறுவார்கள்.

"அப்படி என்ன பெரிய பொல்லாத ஆபத்து, நான் பார்க்காத ஆபத்து. எங்கள் பயிற்சி காலத்தில் இதை விட பெரிய ஆபத்தான யானைகளுடன் சண்டை பயிற்சி செய்ய வேண்டும். அதையே சமாளித்து சாதித்து கொண்டு வந்த எங்களிடம் ஆபத்து கோபத்து என்று கதை விடாதே கிழவி" என்பான் குமரன்.

"ஆமாம் நீர் பெரிய வீரன் தான். நேற்று காட்டு எலியை பார்த்து பரண் மேல் தாவிக் கொண்ட மாவீரர்" என்று நொடித்துக் கொள்வாள் கிழவி சக்கி.

"இதையெல்லாம் யார் உன்னிடம் கூறி..னா..ர்கள்" என்று முதலில் புரியாமல் கேட்டவன், பிறகு ஏதோ தோன்ற திரும்பி நண்பனை பார்த்து முரைத்தான்.

குமரன் தன்னை பார்த்து முரைப்பது தெரிந்தும், அவனுக்கு முதுகு காட்டி கொண்டு அமர்ந்து கொண்டு, கையில் இருக்கும் கத்தியை கூர்மையாக்கி படி இருந்தான் மாறன்.

கீழே கிடந்த ஒரு மாங்காய் ஒன்றை எடுத்து மாறனை நோக்கி எறிந்தான் குமரன்.

குமரன் வீசிய மாங்காய் வேகமாக மாறனின் தலை நோக்கி பாய, மிகவும் சாதாரணமாக அந்த காய் தன்னை தீண்டும் முன், கையில் இருக்கும் கத்தியால் அதை தடுத்தான் மாறன்.

கத்தி பட்டு மாங்காய் சரியாக இரண்டு துண்டுகளாக பிளந்து கீழே விழ, மாறன் ஒரு துண்டையும், குமரன் ஒரு துண்டையும் எடுத்து கொண்டு அமர்ந்தனர்.

"ஏற்கனவே கூர்மையான கத்தியை ஏதற்கு மேலும் தீட்டினாய் என்று இப்போது புரிகிறது" என்று கூறிய படி, தன் துண்டில் இருந்த பாதி மாங்கொட்டையை தனியாக எடுத்து விட்டு, கடித்தான்.

என் இம்சை அரசி-1Where stories live. Discover now