என் இம்சை அரசி -2

22 1 1
                                    

சம்பாவை விட்டு இறங்கிய மாறன், தன் முன் இருந்த அந்த சத்திரதை ஆராய்ந்து பார்த்தான்.

"சக்கி கூறிய சத்திரம் இதுதானா!"

சம்பாவின் மேல் இருந்த மூட்டைகளை அவிழ்த்தான்.

"சற்று ஓய்வெடுத்துக் கொள், சம்பா. இன்னும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது!" என்று குதிரையை அன்போடு தடவி கொடுத்தான்.

தன் ஒரு காலை தூக்கி, தலையை குனிந்து, "சரி" என்றது குதிரை, சம்பா.

அதன் செயலைப் பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு தன் தலையை அதன் தலையோடு வைத்து தேய்த்து விட்டான்.

"இது புயலுக்கு முன் வரும் அமைதி. இதைப் பார்த்து நாம் ஏமாந்து விடக்கூடாது. நம்மை ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அதை என்னால் உணர முடிகிறது. உன்னாலும் முடியும் என்று நம்புகிறேன். ஆதலால், ஜாக்கிரதை!" என்று தனது நான்கு  கால் நண்பனுக்கு,மெதுவான குரலில் எச்சரிக்கை விடுத்தான்.

பிறகு, சத்திரம் உள்ளே நுழைந்தவன், தனது மூட்டையை பிரித்தான்.

அதில், கற்களை கொண்டு நிரப்பியிருந்தவன், மேலே சிறிது துணிகளை வைத்து கற்களை மறைத்திருந்தான். அதன் மேலே சில உணவு பொட்டலத்தையும் வைத்து மூட்டையை கட்டியிருந்தான்.

இப்பொழுது அவனுக்கு சாப்பிட தோணவில்லை தான். ஆனால், அவன் ஒரு அப்பாவி வியாபாரி வேடத்தில் இருக்கிறான் அல்லவா.

அதுமட்டுமல்ல, தன்னை களவாட நினைப்பவர்களுக்கு அவன் ஒரு வாய்ப்பளிக்கிறான்.

அவன் அமர்ந்திருப்பது, பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால், இப்பொழுது எங்கிருந்து தாக்கினாலும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், திருப்பித் தாக்கவும் ஏற்றவாறு அமர்ந்திருந்தான்.

பொறுமையாக உணவு பொட்டலத்தை பிரித்தவன், சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பிடும் பொழுது தான் அவனுக்கு புரிந்தது தான் எவ்வளவு பசியாக இருந்துள்ளது.

You've reached the end of published parts.

⏰ Last updated: Oct 01, 2022 ⏰

Add this story to your Library to get notified about new parts!

என் இம்சை அரசி-1Where stories live. Discover now