சங்கீதம்🎼16🎼

474 25 12
                                    

"அந்த பொறுக்கிய நாய  தூக்கி போட்டு மிதிக்காம, சும்மா வந்துருக்கா... நீ கொடுக்குற அடியில மூஞ்சி முகரை பேந்து இருக்க வேண்டாமா?"  என்று கோவத்தில் கத்திக் கொண்டிருந்தான் முத்து.

அங்கிருந்த கல் பெஞ்சில் படுத்து தலைக்கு கை கொடுத்து ஆகாயத்தை பார்த்திருந்த சர்வேஷ்வரனுக்கு கோவம், இயலாமை, வருத்தம் என அனைத்தும் அவன் முகத்தில் பிரதிபலிக்க "டேய் உன்னைத்தான் கேக்குறேன்... அவ போடான்னு சொல்லிட்டு போன பிறகு ஏன்டா அவளையே நினைச்சி வருத்தப்படுற?  உன்னை யாருன்னு அவளுக்கு தெரிய வர்றப்போ இது நடக்கும்னு உனக்கு  தெரியும் தானே!! அப்புறம் ஏன் இப்படி அப்சட்டா இருக்க?" என்று நண்பனை தேற்றிக் கொண்டும் பைரவியை வறுத்துக் கொண்டும் இருந்தான் முத்து.

அவன் சொன்ன எந்த சொற்களும் சர்வேஷ்வரனின் செவிலிகளில் விழுந்தது போல்  தெரியவில்லை இன்னும் வானையே வெறிக்க "டேய் இங்க ஒருத்தன் காட்டு கத்து கத்துறேன் கொஞ்சமாச்சும் ரெஸ்பான்ஸ் பண்றியாடா?" என்று அவனின் கைகளில் பட்டென தட்டினான் முத்து.

அதில் சிந்தனை கலைந்த சர்வேஷ் "இப்ப என்னடா என்னடா உன் பிரச்சினை" என்றான் சலிப்பாக

"டேய் உனக்காக தான்டா இவ்வளவு நேரம் பேசுறேன். எனக்கு என்ன பிரச்சனைன்னு கேக்குற…" என்று மறுகேள்வி கேட்க

"உனக்கு என்னடா இப்போ அவனை ஏன் தூக்கி போட்டு மிதிக்கலன்னு வருத்தமா இருக்கா?" என்று எழுந்து அமர்ந்தவன் "ஏற்கனவே அவன் செஞ்ச தப்புக்கு பைரவி அவனை அடிச்சிட்டா... இதுல நானும் போய் அடிச்சா விஷயம் பிரின்ஸி வரையும் போகும் யார் என்னன்னு கேள்வி வரும் என் பேர் அடிபடுறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஆனா இதுல பைரவிய சம்மந்தபடுத்த எனக்கு விருப்பம் இல்ல" என்றான் தெளிந்த குரலில்.

"அவளுக்காக இவ்வளவு யோசிக்கிற உன்னை பத்தி அவ கொஞ்சம் கூட யோசிக்கலையே டா" என்றான் சற்றே ஆதங்கமாக.

"எப்பவும் நம்ம சைடே பாக்கதடா எதிராளி பக்கமும் பாக்கனும்...  நான் பொறந்திலிருந்து என் அப்பாவை பாக்குறேன்… அவரோட வார்த்தைகள் எந்த அளவுக்கு அவளுக்கு  ரணத்தை கொடுத்திருந்தா என் அப்பா பெயர் தெரிஞ்சவுடனையே என்னை தூக்கி எரிஞ்சிட்டு போய் இருப்பா!?"  என்றான் வருத்தமாக.

காதலின் சங்கீதமே!!! (முழு தொகுப்பு)Where stories live. Discover now