பூவே: 21

93 12 12
                                    


விஸ்வதி வகுப்பறையில் அமர்ந்திருந்தாள்.
மூளை பாடத்தில் விழிப்பாக இருந்தாலும், மனம்
இங்கு இல்லை என கற்பூரம்
அணைத்து சத்தியம்
செய்யும் அளவிற்கு,  சிந்தனையும் நிதானமும் வேறொரு லோகத்தில் ஆழ்த்திருந்தது.

பாடத்தின் நடுவே வரும்
கவன சிதறல், அவள் மனதை விரல் பிடித்து எங்கெங்கோ சுற்றி, கடைசியில் கவிதீனாவின் இடத்தில் நிறுத்திவிட்டு சென்றுவிட, விஸ்வதியின் சிந்தனை
அங்கே தொற்றி நின்றது. 

தோழி உலுக்க, விஸ்வதி திடுக்கிட்டு பார்த்தாள்.

"பாருடி பிரேக் விட்டுட்டாங்க. பெல் அடிச்சதும் கேன்டீன் போற நீயா இப்படி பிரேக் விட்டது தெரியாம உக்காந்துருக்க" என்றுவிட்டு விஸ்வதிக்கும் சேர்த்து ஸ்னாக்ஸ் வாங்கி வந்தாள் விஸ்வதியின் தோழி.
இருவரும் பகிர்ந்து உண்டனர்.

"அப்படி என்ன யோசனை?"

விஸ்வதி "யோசனை இல்ல"

"யோசனை இல்லனா என்ன உன் மண்டைக்குள்ள ஓடுது?" என கேட்டாள் அவள்.

விஸ்வதி "கவி அண்ணனு சொல்வேன்ல. அது இப்போ ரிஸன்ட்டா நாலு இன்டெர்வியூக்கு போனுச்சு. ரெண்டுல செலக்ட் ஆகியிருக்கு"

"ஹேய் இது நல்ல விஷயம்தானடி. அதுக்கு ஏன்
நீ இப்படி இருக்க?"

விஸ்வதி "ரெண்டு கம்பெனிக்கும் வேலைக்கு போக பிடிக்கலையாம்டி"
என சோகமாக சொல்ல,
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"வேலை கிடைச்சும் ஏன் உன் அண்ணா போகல? அவர்தான் கன்ப்ஃயூஸ் பன்றார்னா நீ அதுக்கு மேல. தெளிவா சொல்லுடி"

விஸ்வதி "உன் அக்காகாக கேட்டு தான நான் கவி அண்ணகிட்ட பேசினேன்.
நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் போகட்டும்னு நெனச்சேன். என் வற்புறுத்தல்ல போன கவி அண்ணனுக்கு இப்போ இந்த வேலை பிடிச்சிருக்காம். கம்ப்யூட்டரே பாத்திட்டு இருந்ததுக்கு இது புத்துணர்வா இருக்காம். ஈவினிங் பார்ட் டைமா நடத்தினாலும் திருப்தியா இருக்காம். இப்படி நிறையா சொல்லுது...

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Where stories live. Discover now