பூவே: 25

93 11 42
                                    


அரை நிலவை ஓட்டி
அழகான வட்டமிட்டு
கோட்டை கட்டிருந்தது வானம்.

இரவிற்கே உரித்தான அமைதியும் இதமும்
அவ்விடத்தை நிறைத்திருக்க
உண்டு முடித்து வெளியில்
அமர்ந்திருந்தார் கண்ணன்.

"என்னப்பா இங்க வந்து உக்காந்துட்டீங்க? தூங்கலையா?" என்றபடி அழகர் வந்தான்.

"தூங்கணும்ப்பா. வா!
வந்து இப்படி உட்காரு" என
அவர் அழைத்ததே அழகருக்கு சொல்லாமல் சொல்லிவிட்டது, அப்பா தன்னிடம் ஏதோ பேச விரும்புகிறார் என்பதை.

அழகர் "என்னப்பா யோசனை?"

கண்ணன் "எனக்கு உங்கள தாண்டி என்னப்பா யோசனை! பெரியவ சந்தோசமா இருக்கா.
என்ன மசக்கைதான் முதல் நாலு மாசத்துக்கு பாடு படுத்தும். அடிக்கடி போய் பாத்துக்கனும். அடுத்து சின்னவ இருக்கா!
அவளுக்கு வரன் பாக்க ஆரம்பிக்கணும். அடுத்து நீ.
இப்படி பிள்ளைங்க பின்னாடியே எங்க காலம்
ஓடி போய்டும்" என்றவரின்  புன்னகையில் பிள்ளைகளை பற்றிய பூரிப்பு அழகாய் தெரிந்தது.

அழகர் "எனக்கு என்னப்பா அவசரம்? ரதிக்கு நல்ல இடமா டாக்டர் பையனா பாத்து கட்டி கொடுக்கணும்.
அவளுக்கு படிப்பு வேலைனு எல்லாம்  புடிச்சதா அமைஞ்சாலும் நிறைவா எதுவும் கிடைக்கலப்பா. நமக்கும் அவ விசயத்துல மனநிறைவு வரல. இதெல்லாம் ஈடுகட்டி
ரதிக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்..... இப்போதான் அவள நீங்க என்  கைல கொடுத்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள அவ கல்யாணம் பத்தி பேசுறோம்" என சிலாகித்தான். ஏனோ ரதி பற்றி ஆரம்பித்தால், இவர்களுக்கு மட்டும் பேச ஆயிரம் விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிற்கும்.

'அது என்ன ரதிக்கு மட்டும்
தனி கவனிப்பு?  அவளும் அபர்ணாவை போல் தானே!' என எண்ணலாம். அதற்கு தகுந்த காரணம் இருந்தது. கண்ணனுக்கு மகள்கள் இருவரும் ஒன்று என்றாலும், அழகருக்கு தங்கைகள் இருவரும் ஒன்றல்ல.

அபர்ணாவை விரல்பிடித்து நடை பழக்கிய அழகர், ரதியை தன் கால்மேல் பாதம் வைத்து நடை பழக்கினான்.

இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!Donde viven las historias. Descúbrelo ahora