அத்தியாயம் 1 - நட்பும் காதலும்

23 0 0
                                    

கடல் போல் விரிந்து பறந்து கிடந்த வீர நாராயன ஏறி.
சில காலம் முன்பு ஆடி பெருக்கு அன்று புது வெள்ளத்தின் பொழுது நாம் இந்த மாபெரும் ஏரியின் கரைக்கு வந்தோம். அப்பொழுது தண்ணீர் குபு குபு என்று ஓடி கொண்டு இருந்தது.
ஆனால் இப்போது பங்குனி மாதம் வெயில் அனைவரையும் சுட்டு எரித்து கொண்டு  இருந்தது அதனால் நீர் மட்டமும் கம்மியாக தான் இருந்தது. ஆனால் சோழ நாட்டின் பட்டத்து இளவரசர் ஆக இருந்து வீர மரணம் எய்த ராசாதித்தர் உருவாக்கிய இந்த அற்புத ஏறி மட்டும் பார்ப்போருக்கு குதுகலம் ஊட்டி உடலையும் மனதையும் களிப்படைய செய்தது.

இந்த மாபெரும் ஏரியின் விசாலமான கரையில் ஒரு குதிரை நின்று குதுகளத்துடன் கனைத்தது... அந்த குதிரை மீது ஒரு வாலிபன் அமர்ந்திருந்தான்...

இந்த காட்சி நமக்கு வேர் ஒருவரின் நினைவை ஊட்டினாலும்.. இப்போது அந்த குதிரை மீது அமர்ந்து இருப்பது அவர் அல்ல... அந்த மாபெரும் ஏரியை கட்டமைத்த மாபெரும் வீரரின் வம்சாவழி வந்த இப்போது இச்சோழ வலனாட்டின் பட்டத்து இளவசர் ஆக இருக்கும் பொன்னியின் செல்வர் எனும் அருள்மொழி வர்மர் தான்.

சட்டென்று குதிரை மேல் இருந்து கீழே குதித்து.. ஏரிக்கு அருகே சென்று தன் இரண்டு கால்களையும் தண்ணீரில் இறக்கியவாரு அமர்ந்து கொண்டார் அருள்மொழி வர்மர்.

தஞ்சையில் கிளம்பியதில் இருந்து தன் மனதில் ஓடி கொண்டு இருக்கும் சிந்தனை ஓட்டத்தை அந்த பிரமாண்ட ஏரியின் காட்சி நிறுத்தியது....
இப்போது அது மீண்டும் தொடர.. அருள்மொழி வர்மர்
தன் ஒரு கை இடை வாலின் மீது வைத்து கொண்டும் மற்றோரு கையை தன் அருகே மண்டியிட்டு தண்ணீர் அருந்தி கொண்டு இருக்கும் குதிரையை தடவி கொண்டும் இருந்தது..

சிந்தனை ஓட்டம் தொடர அதற்கு முடிவு கொண்டு வருவது போல் ஒரு சத்தம் அருள்மொழி வர்மருக்கு பின்னே கேட்டது.. அது குதிரையின் காலடி சத்தம்.

அதை கேட்டு அருள்மொழி வர்மரின் முகம் மலர்ந்தது.
உடை வாலின் மீது இருந்து கையை எடுத்து தண்ணீரில் விட்டு விளையாடி கொண்டு இருந்தார்.

புலிக்கொடி வேந்தன் Where stories live. Discover now