அத்தியாயம் 8

5 0 0
                                    

அடுத்த நாள் காலைல 6 மணி.

கீர்த்தி : டேய் ரஞ்சித், இப்போ பரவா இல்லையா, நேத்து நைட் stressed ah இருந்த.

ரஞ்சித் : நல்லா தான் இருக்கேன். அந்த கமல மட்டும் என் கிட்ட காட்டாதீங்க.

கீர்த்தி : சரி போய், டீ குடி.

தாத்தா உட்கார்ந்து இருக்காரு, ரஞ்சித் அவரு கிட்ட போய் உட்காருறான்.

தாத்தா : டேய், உன் கிட்ட ஒன்னு கேட்கணும் நேத்தே நினைச்சேன்,ஆனா மறந்துட்டன், நீ முந்தாநேத்து ஏன் தூக்கத்துல அளறிட்டு, திரும்பவும் தூங்கிட்ட.

ரஞ்சித் : கனவுல பயந்துட்டேன்.

தாத்தா : அது என்ன கனவு.

ரஞ்சித் : அது யார்கிட்டயும் சொல்றது இல்ல, சிரிப்பாங்களோனு பயம்.

தாத்தா : நான் டயானாவ முத்தம் குடுத்துட்டு, ஓடுன கதையெல்லாம் சொன்னேன், ஆனா நீ என்கிட்ட மறைக்கிற.

ரஞ்சித் : சரி நான் சொல்றேன் தாத்தா, அன்னைக்கு கனவுல, ஒரு அவார்டு functionல எனக்கு ஒரு அவார்டு குடுத்தாங்க, ஏன் எனக்கு அவார்டு குடுத்தீங்கனு கேட்டன், பெஸ்ட் காமெடியன் ஆஃப் தி இயர்னு சொன்னாங்க, உடனே விழாக்கு வந்தவங்க எல்லாம் கல் எடுத்து எரிய ஆரமிச்சுட்டாங்க. அப்போதான் நைட் அளறிட்டேன். நான் காமெடியன்னு சொன்னாலும், இல்ல என்ன யாருனா காமெடியன் சொன்னாலும், எதோ தப்பா நடக்குது தாத்தா. அன்னைக்கு நம்ம டாம்மி நாயும், காமெடியன்னு நீங்க நினைச்சதுக்கு என் கிட்ட பாயுது. நீங்க தான் இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.

தாத்தா : உனக்கு காமெடியன்ற வார்த்தை மாதிரி, எனக்கும் ஒரு வார்த்தை சொன்னா பிரச்னை இருக்கு.

ரஞ்சித் : என்ன தாத்தா அது.

தாத்தா : பரிமளா.

ரஞ்சித் சிரிக்கிறான்.

தாத்தா : இன்னைக்கு, இந்த பிரச்னைய முடிக்கிறேன்.

ரஞ்சித் : என்ன தாத்தா பண்ண போறோம்.

தாத்தா : வெயிட் அண்ட் சி.

கீர்த்தி வரா.

கீர்த்தி : டேய் ரஞ்சித், முந்தாநேத்து நீ தூக்கத்துல, அலறுனியாமே, அதுனால நம்ம பாட்டி உன்ன, கோயிலுக்கு கூட்டினு போய் மந்திரிக்க சொல்லுச்சு.

ரஞ்சித் : நான் வரல, எனக்கு ஒண்ணுமில்ல.

தாத்தா : உங்க பாட்டி ஆசைக்கு போய்ட்டு வா.

ரஞ்சித் : சரி இரு வரன்.

ரஞ்சித் : ரகு நம்ம கூட வரல.

கீர்த்தி : நீயே கூப்புடு, நான் கூப்டா வரல.

ரஞ்சித் : டேய் ரகு நீயும் வாயேன் கோயிலுக்கு.

ரகு : எல்லாத்துக்கும் கூப்டாதீங்க டா, நீங்க போய்ட்டு வாங்க, நான் வீட்ல இருக்கேன்.

ரஞ்சித்தும், கீர்த்தியும் கோயில் கிட்ட இருக்காங்க. ரஞ்சித் ஒரு நாய பாத்ததும், கீர்த்தி பின்னாடி ஒளிஞ்சுகிட்டான்.

கீர்த்தி : டேய் இப்படி நாய பாத்து பயந்தினா, உன்ன எப்படி ஒரு பொண்ணு லவ் பண்ணும்.

ரஞ்சித் : சுந்தர் சி தெரியுமா.

கீர்த்தி : தெரியுமே

ரஞ்சித் : ஆள் எப்படி இருப்பாரு.

கீர்த்தி : பத்து பேர அடிக்கற மாதிரி, ஆள் height அண்ட் வெயிட்டா இருப்பாரு.

ரஞ்சித் : அவரே நைட் தனியா தூங்கமாட்டாராம், யாராவது கூட படுத்துக்கணுமா, பேய் பயமாம், குஷ்பூவே ஒரு பேட்டில சொன்னாங்க . பேய் பயம் இருக்க அவுருக்கே ஒரு குஷ்பூ கிடைக்கும் போது, நாய் பயம் இருக்க எனக்கு எந்த herione காத்துட்டு இருக்குனு நினைக்கும் போதே, வெட்கம் வருது.அவங்களா இருப்பாங்களோ இவங்களா இருப்பாங்களா.

கீர்த்தி : கோயில் குள்ள போபோறோம், கண்ட கழுதைய யோசிக்காத வா.

கோயில்க்கு போயி, ரஞ்சித்துக்கு, வேப்பல அடிச்சு முடிக்கிறாங்க.

ஒரு பொண்ணு கோயில்ல கீர்த்திக்கு, கை காட்டுறா.கீர்த்தி கிட்ட பேசறதுக்கு அந்த பொண்ணு கிட்ட வரா.

கீர்த்தி : ஏய் குயிலி.

குயிலி : என்ன டி கோயில் பக்கம், நீ ஒன்னும் அவளோ பக்திமான் லாம் இல்லையே,அதும் இல்லாம கொஞ்ச நாளா ஊர்ல இருக்க போல, சென்னைக்கு போகல.

கீர்த்தி : இங்க கொஞ்சம் வேல இருக்கு டி.

குயிலி : சரி சார் யாரு, பக்கத்துல பொண்ணு இருக்கு கீழயே பாத்துட்டு இருக்காரு.

கீர்த்தி : ரஞ்சித்,கொஞ்சம் நிமிர்ந்து தான் பாக்குறது.

ரஞ்சித் : சாரி குயிலி,நான் இப்போலாம் அழகான பொண்ணுங்கள பாக்குறது இல்லனு முடிவு பண்ணிருக்கேன்.

குயிலி : நீங்க பாக்கலைனு அழகான பொண்ணுங்க எல்லாம் தற்கொலை பண்ணிக்கிட்டா, உங்கள போலீஸ் புடிச்சிடாதா.

ரஞ்சித் : போலீஸ் புடிக்குமா, எனக்கும் அழகான பொண்ணுங்களுக்கும் செட் ஆக மாட்டிங்குது.

குயிலி : என்னனு சொல்லுங்குளேன்.

ரஞ்சித் : பெரிய காரணம் இல்ல, நான் பாத்தா, அவங்க என்ன பாக்கறது இல்ல. சுய மரியாதை காரணமா இந்த முடிவு எடுத்து இருக்கேன்.

கீர்த்தி : ஆமா எப்போல இருந்து இந்த கொள்கை.

ரஞ்சித் : இந்த ஊருக்கு வந்ததுல இருந்து.

கீர்த்தி : அப்பறம் குயிலி, உங்க அண்ணனும், ரஞ்சித்தும் friend.

ரஞ்சித் : யாரு இவங்களோட அண்ணன்.

கீர்த்தி : கமல்.

ரஞ்சித் : அவனோட தங்கச்சியா, இவ பாக்கறதுக்கு, அழகா இருக்கா, அறிவோட பேசுறா மாதிரி தெரியுது.

கீர்த்தி : அவ 12th ல ஸ்கூல் டாப்பர், டிகிரீயும் முடிச்சு இருக்கா. ஊருல உள்ள அறிவாளி புள்ளைங்கல இவளும் ஒருத்தி.

குயிலி : ரஞ்சித் சார் உனக்கு என்ன வேணும் கீர்த்தி.

கீர்த்தி : என் அண்ணனோட friend, எனக்கும் தான்.

ரஞ்சித் : கீர்த்தி இவங்க பக்கத்துல நின்னுட்டு இருந்தா, என் கொள்கைய நான் மாத்திப்பனோனு தோணுது. நான் போறேன்.

குயிலி : நம்ம வேணா ஒரு டீல் வச்சுக்கலாம், நீ என்ன two மினிட்ஸ் பாரு, உனக்கு நிஜமாவே நான் அழகா தெரிஞ்சா, நீ உன் கொள்கையில இருந்து மாறாத, ஒரு வேல உனக்கு அசிங்கமா தெரிஞ்சா என் போன் நம்பர் தரேன்.

கீர்த்தி : ஏண்டி இது கோயில் டி.

குயிலி : இரு டி. ரெண்டு நிமிஷம் மூஞ்ச பாக்குறதனால, சாமி ஒன்னும் கோச்சிக்காது.

கீர்த்தி : சாமி கூட நல்ல பழக்கம் இருக்க மாதிரி சொல்லுறாலே. சரி நடத்து.

குயிலி கொஞ்சம் தள்ளி போய், ஒரு செவுத்துல சாஞ்சி நிக்குறா.ரஞ்சித், குயிலியவே பாக்குறான். கீர்த்தி, ரஞ்சித் கிட்ட பேசுறா.

கீர்த்தி : டேய் என்ன தோணுது.

ரஞ்சித் : அழகா இருக்கா.

கீர்த்தி : நீ அசிங்கமா இருக்கானு சொன்னா தான், அவ நம்பர் கிடைக்கும்.

ரஞ்சித் : அதுக்குன்னு என்ன பொய் சொல்ல சொல்றியா.

கீர்த்தி : டேய் ரொம்ப பண்ணாத,பொண்ணுக்காக எப்படியெல்லாம் அளஞ்சி இருக்கணு மறந்துடாத.

ரஞ்சித் : ஏய் நான் இருக்க கட்சில , கொள்கை தான் எல்லாம்.

கீர்த்தி : எந்த கட்சி டா கொள்கைய லாம் கடை பிடிக்குறாங்க.நல்லா பாரு அவள, இத விட நல்ல சான்ஸ் உனக்கு கிடைக்காது.

ரஞ்சித் : என்னா கண்ணு எப்ப எப்ப எப்பா. இவளோ அழகான கண்ண நான் பாத்ததே இல்ல. அதுக்காகவே எனக்கு நம்பர் வேணா.

two மினிட்ஸ் ஆகிடிச்சு, குயிலி கிட்ட வரா.

குயிலி : என்ன தோணுச்சு ரஞ்சித்.

ரஞ்சித் : என்னங்க நீங்க இவளோ அழகா இருக்கீங்க, உங்க நம்பரே வேணாம்.

குயிலி : first டைம் அழகா இருக்கறதுக்கு வருத்த படுறேன்.

கீர்த்தி : நீ ஒன்னும் வருத்த படாத டி, நீ என் கண்ணுக்கு அசிங்கமா தெரியுற.

ரஞ்சித் : என்ன இவ உன் கண்ணுக்கு அசிங்கமா தெரியுறாளா.

கீர்த்தி : ஆமா, உனக்கு அழகா தெரியுறா, எனக்கு அசிங்கமா தெரியரா , ரெண்டு பேரும் ஒரு ஒரு வோட்டு போட்டு இருக்கோம், இப்போ வேற யாராவது வந்து, இந்த பொண்ணு அசிங்கமா இருக்கானு சொன்னா, எனக்கு ரெண்டு வோட்டு ஆகிடும், அப்பறம் நீ அவ போன் நம்பர் வாங்கிக்கணும்.

ரஞ்சித் : ஓகே தான், ஆனா நம்ம கூட யாரும் இல்லையே கேட்கறதுக்கு.

கீர்த்தி : இதோ இந்த uncle ல கேட்போம். யாருன்னு தெரியல, இருந்தாலும் கேட்போம், சார் இந்த பொண்ணு அழகா இருக்காளா.

அந்த uncle : ச்ச மூஞ்சா இது.

கீர்த்தி : இந்த uncle ah ஒரு நாய் கூட பாக்காது இந்த நாயே சொல்லிடுச்சு, இவ அசிங்கமா இருக்காணு, நம்பர் வாங்கிக்கோ.

அந்த uncle : என்னமா நாயினு லாம் சொல்றா.

கீர்த்தி : டேய், அவ அசிங்கமா இருக்கானு சொல்லிட்டல டா. உனக்கெல்லாம் எதுக்கு டா மரியாதை.

அந்த uncle கோபமா போறாரு.

கீர்த்தி : ரஞ்சித் நீ நம்பர் வாங்கிக்கோ.

ரஞ்சித் யோசிக்கிறான். ரகு கோயிலுக்கு வரான்.

கீர்த்தி : ரகு, நீ என்ன டா கோயிலுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்ட.

ரகு : நீங்க இவளோ நேரம், என்ன பண்றிங்கனு பாக்க வந்தேன்.

ரஞ்சித் : சரி மச்சான், இந்த பொண்ணு அழகா இருக்கான்னு பாத்து சொல்லு.

கீர்த்தி : அவன எதுக்கு டா கேட்குற, அவனுக்கு ரசனையே இல்ல, என்ன மாதிரி அழகான பொண்ண லவ் பன்றான்.

ரஞ்சித் : கரெக்ட் தான், ஆனா அவன் என் நண்பன், மச்சான் நீ சொல்லு டா.

ரகு பாக்குறான்.

ரகு : என்ன கண்ணு டா , எவளோ அழகா இருக்கா.

ரஞ்சித் : நல்ல வேல மச்சான், நீ வந்து காப்பாதிட்ட, இல்லனா அவ நம்பர் வாங்கி இருப்பேன்.

ரகு : அழகா தான டா இருக்கா, நம்பர் வாங்கிக்கோ டா.

ரஞ்சித் : அது என் கொள்கைக்கு எதிரானது.

ரகு : இவனுக்கு என்ன மன்னாங்கட்டி, கொள்கை இருக்கு.

பாட்டி கோயிலுக்கு வருது.

கீர்த்தி : டேய் பாட்டி வருது, அது கிட்ட கேட்போம்.

கீர்த்தி : பாட்டி, நீ சொல்லு இந்த பொண்ணு எப்படி இருக்கு.

பாட்டி பாக்குது.

பாட்டி : என்ன டா இந்த பொண்ணு,பேய் மாதிரி இருக்குது. ரஞ்சித்து கட்டுனா இந்த மாதிரி பொண்ண கட்டிக்கோ, பொண்ணு பேய் மாதிரி இருக்கருதால, உன்ன ஒரு பேய் பிடிக்காது.

ரஞ்சித் : சரிங்க குயிலி, உங்க நம்பர் குடுங்க.

நம்பர் வாங்கும்போது தாத்தா வராரு.

ரஞ்சித் : ஏய் தாத்தா கிட்ட ஒரு தடவ கேட்கலாம்.

கீர்த்தி : இவரு வேறயா, டேய் தாத்தா முடிவு தான் ஃபைனல். ஓகேவா.

கீர்த்தி : தாத்தா, இந்த பொண்ணு அசிங்கமா இருக்குனு சொல்லிட்டு போ.

ரஞ்சித் : ஏய் தாத்தாவ நீ influence பண்ற.இது ஒத்துக்க மாட்டேன்.

கீர்த்தி : சரி தாத்தா, உனக்கு அந்த பொண்ண பாத்தா என்ன தோணுதோ சொல்லு.

தாத்தா, ரொம்ப நேரமா பாக்குறாரு.

கீர்த்தி : தாத்தா நீ ரொம்ப நேரம் பாக்குற, பாட்டி மூஞ்சு வெறி ஆகுது.

தாத்தா : சரி சரி, நான் இப்போ சொல்லிடுறன்.

கீர்த்தி : தாத்தா நீ இவளோ நேரம் பாத்துட்டு, பொண்ணு அழகா இருக்கானு சொன்னா, நம்ம கிழவி கோயில்ன்னு லாம் பாக்காது, பறந்து பறந்து அடிக்கும்.

தாத்தா : சரி நான் முடிவ சொல்லிடுறன், இவ கொஞ்சமா அசிங்கமா இல்ல, என் பொண்டாட்டிய விட ரொம்ப அசிங்கமா இருக்கா.என்னப்பா எல்லாருக்கும் இந்த தீர்ப்பு திருப்தியா.

பாட்டி, தாத்தாவ மொறைக்குது.

கீர்த்தி : தாத்தா நீ செத்த இன்னைக்கு.

கீர்த்தி : அப்பறம், என்ன பா பஞ்சாயத்து முடிஞ்சுது, ரெண்டு பேரும் நம்பர மாத்திக்கோங்க.

கீர்த்தி : பாட்டி, குயிலிய அடையாளம் தெரில, நம்ம கமல் தங்கச்சி.

பாட்டி : ஓ சின்ன வயசுல பாத்தது, உன் கூட விளையாட லாம் வருவா, இப்போ இவளோ பெருசா வளந்துட்டா. சரி மா நான் கிளம்புறன்.

எல்லாரும் போய்ட்டாங்க, ரகு, ரஞ்சித், கீர்த்தி, கோயில் படிக்கட்டுல நடந்து போய்ட்டு இருக்காங்க.

ரஞ்சித் : மனசே சந்தோஷமா இருக்கு மச்சான், எனக்கு எங்க அழகான பொண்ணு கிடைச்சுடுமோனு பயந்துட்டேன்.

ரகு : உன் மனசுக்கு எல்லா நல்ல மாதிரி நடுக்கும் டா.

ரஞ்சித் : எங்க அம்மாக்கு போன் பண்ணி சொல்லிடுறேன்.

ரஞ்சித் போன் பேசுறான்.

ரஞ்சித் : மா உனக்கு ஒரு அசிங்கமான மருமகள பாத்துட்டேன். மொதல்ல கோயிலுக்கு போய் கெடா வெட்டணும்.

ரஞ்சித் : ரகு, கீர்த்தி உங்களால தான் எனக்கு இந்த வாழ்க்கை கிடைச்சுது. உங்கள மனசார ஆசிர்வாதம் பண்ணனும் நினைக்கிறன் டா.

ரகு : பண்ணு மச்சான்.

ரஞ்சித் : உங்களுக்கு ரெண்டு பெண் குழந்தை பிறக்கணும், அது ரெண்டுமே இந்த உலகத்திலேயே அசிங்கமான குழந்தைங்கனு இந்த உலகமே சொல்லணும்.

கீர்த்தி : டேய் நாயே செருப்பால அடிப்பன், ஆசிர்வாதம் மண்ணாங்கட்டி பன்றான்.

ரஞ்சித் : என்ன நாயேனு லாம் சொல்றிங்க, அசிங்கமா திட்டுங்க, அசிங்க அசிங்கமா திட்டுங்க, எனக்கு இனி உலகத்துல புடிச்ச வார்த்தை, அசிங்கம்.

கீர்த்தி, கோயில்னு பாக்காம அசிங்க அசிங்கமா பேசுறா.

ரகு : போதும் டி விடு. மந்திரிக்க கூட்டுனு வந்து, அந்த பையன பைத்தியம் ஆகிட்டீங்க.

எல்லாரும் வீட்டுக்கு வந்துடுறாங்க.

ரஞ்சித்,ரொம்ப நேரமா குயிலி கிட்ட பேசிட்டு, இப்போ தான் எழுந்து நடந்து வரான்.

ரகுவும், கீர்த்தியும் ஒண்ணா ஒக்காந்து இருக்காங்க.

ரஞ்சித் : என்ன ரகு, கீர்த்தி ஒரு மாதிரி இருக்கா.

கீர்த்தி : போடா, உன் மேல செம கோபத்துல இருக்கேன்.

ரஞ்சித் : ஏன் மேல என்ன கோவம்.

ரகு : நீ தான எங்க ரெண்டு பேருக்கும் பொறக்குற குழந்தை, உலகத்திலேயே அசிங்கமா பொறக்கும்னு ஆசீர்வாதம் பண்ண. அதான் கோபம்.

ரஞ்சித் சிரிக்கிறான்.

ரஞ்சித் : டேய் கோயில்ல பண்ணது எல்லாமே விளையாட்டுக்கு, அந்த குயிலி போன் நம்பர் தரேன்னு சொன்னதும்,உடனே வாங்க தேவ இல்ல,கொஞ்சம் இழுத்து பாப்போம்னு நினச்சேன். அதுனால தான் கொஞ்சும் fun ah போச்சு. நீங்க நம்பள னா என் வாட்சப் பாருங்க, குயில்ய எத்தனை வாட்டி அழகா இருக்கானு சொல்லி இருக்கேனு.

கீர்த்தி : அப்போ என் குழந்தைங்க, அழகா பிறக்கும்னு சொல்லு.

ரஞ்சித் : கியூட் boy அண்ட் கியூட் girl தான் உங்களுக்கு பொறுக்கும், போதுமா.

கீர்த்தி இப்ப தான் சிரிக்குது. ரஞ்சித் அங்க இருந்து போய்ட்டான்

கீர்த்தி : ரகு, சகுந்தலா பாட்டி இன்னைக்கு, வெளி ஊருக்கு போய் இருக்கான், போன்ல அந்த பேய் கத சொல்லட்டுமானு கேட்டுச்சு.

ரகு : இப்போ போன் பண்ணா பேசுமா.

கீர்த்தி : எப்ப வேணா போன் பண்ணுங்கனு சொல்லுச்சு.

ரகு, சகுந்தலாக்கு போன் பன்றான்.

ரகு : பாட்டி, இப்போ பேசலாமா.

பாட்டி : பேசலாம், சின்ன கதை தான் சொல்லி முடிச்சூடிரன். ஒரு காதல் ஜோடி, வேற வேற ஜாதி அவங்க,கல்யாணம் பண்ணாங்க, பொண்ணோட அம்மா அப்பாக்கு அது புடிக்கல, பணக்காரங்க, ரெண்டு பிள்ளைகளையும் உயிரோட கொளுத்திட்டாங்க.அந்த காதல் ஜோடிங்க பேய்யா அலையுதுங்க இன்னும் நம்ம ஊர்ல, ஆனா அந்த செத்த பொண்ணு வீட்லயே அந்த ரெண்டு பேயும் இருக்கும், வேற எங்கையும் போகாது. அந்த வீட்ட ஒரு வழி பண்ணுதுங்க அந்த பேய்ங்க. வாழ வேண்டிய பிள்ளைகள, கவ்ரவத்துக்காக கொன்னுட்டாங்க.

ரகு : சரி பாட்டி, அடுத்த கதைய சொல்லு.

பாட்டி : நான் கொஞ்ச நேரம் பொறுத்து பேசுறன் பா.

ரகு : ஓகே பாட்டி.

கீர்த்தி : என்னடா இந்த பேயுங்க தான் நம்ம வீட்ல இருக்கா.

ரகு : இல்ல, வாய்ப்பு இல்ல, அந்த பேயுங்க, அவங்கள கொன்னவங்க வீட்லயே இருக்குங்க, வெளிய வராதாம்.

கீர்த்தி : டேய் மணி பத்து ஆகுது டா. சேதுவும், சித்தப்பாவும் பேய் புடிச்சு ஓடி வர டைம்.

ரகு : அட போடி, டெய்லியும் அதுங்க பண்ணதே தான் பண்ணுதுங்க, சேது ஓடுவான், சித்தப்பா தடுப்பாரு.

கீர்த்தி : என்ன இவளோ நேரம் ஆகியும் பேய் ஓடி வரல, என்னாச்சு.

ரகு : ஏய், சேது அங்க வரான் பாரு.

கீர்த்தி : ஆனா ஏன் இன்னைக்கு ஓடி வரல.நடந்து வருது.

ரகு : சேது மேல இருக்க பேய் அழுவுது, கண்ணுல தண்ணி வருது, ஆனா சித்தப்பா எங்க.

கீர்த்தி : தோ இப்போ தான் அவரு அது பின்னாடி வராரு.அவரும் நடந்து வராரு இன்னைக்கு.

ரகு : சேது திரும்பி சித்தப்பாவ பாக்குறான்.


சேது நல்லா கத்தி அழுவுறான், சித்தப்பா பேய் முன்னாடி மண்டி போடுறாரு. சேது பேசாம கைலயும் முக பாவத்துலயும் பேசுது, சித்தப்பா பேசுறாரு "அக்கா, உன்ன அவங்கள கொல்ல விட மாட்டேன் ". சேது கோபமா எதோ செய்க பன்றான். ரகு அவங்க குறுக்குல போய், யாரு நீங்க, உங்கள பத்தி சொல்லுங்கனு கேர்க்குறான். சேதுவும், சித்தப்பாவும் கைய்ய புடிச்சிட்டு நடந்து போறாங்க. படிக்கட்டு ஏறும் போது, ரெண்டு பேரும் மயக்கம் போட்டு விழுறாங்க. எல்லாரும் சேர்ந்து அவங்கள தூக்கிட்டு போய் அவங்க ரூம்ல போடுறாங்க.

கீர்த்தி : டேய் ரகு, என்ன டா இன்னைக்கு அந்த பேயுங்க, ரொம்ப வித்யாசமா நடந்துக்குச்சீங்க.

ரகு : காரணம் தெரில ஆனா, இந்த பேயுங்க, அக்கா தம்பிங்க. அக்கா யாரையோ கொல்ல போறா, தம்பி தடுக்குறான். சங்குந்தலா பாட்டிக்கு போன் போடு.

கீர்த்தி ட்ரை பண்ரா.

கீர்த்தி : அவங்களுக்கு கால் போல டா.

ரகு : அவசரத்துக்கு எதும் கிடைக்காது. சரி ஊருகுள்ள போய் அக்கா தம்பிங்க யாருனா செத்து இருக்காங்க லாம் கேட்டு பாப்போம்.

கீர்த்தி : நான் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட, போன் பண்ணி கேட்டு பாக்குறேன். இன்னைக்கு குள்ள அவங்க யாருனு சொல்றேன். அக்கா தம்பி ஒண்ணாவோ அடுத்து அடுத்து செத்தவங்க,நிறைய பேர் லாம் இருக்க, வாய்ப்பு இல்ல. அதனால இன்னைக்கு போயே விசாரிச்சிட்டு வந்துடலாம்.

ரஞ்சித்தும், தாத்தாவும் மெதுவா வீட்ட விட்டு வெளிய போறாங்க.

ரகு : ரெண்டு பேரும் நில்லுங்க, வீட்ட விட்டு வெளிய எங்க போறீங்க.

ரஞ்சித் : வெளிய போய் காத்து வாங்கிட்டு வரலாம் போறோம்.

ரகு : அடிக்கிற வெயில்ல.

ரஞ்சித் : சரி டா உன் கிட்ட உண்மைய சொல்லிடுறோம். சூர்ய வெளிச்சம் உடம்புல பட்டா, உடம்புக்கு நல்லதுல, அதான் போறோம். வெளிய போய்ட்டு ரெண்டு பேரும் சட்டைய கழிட்டிடுவோம். அப்போ தான வெளிச்சம் நல்லா படும்.

ரகு : உச்சி வெயில்லயா டா, சரி நீ போயி தொல, இந்த பெருசா வெயில்ல கூட்டினு போய், அது மயக்கம் போட்டுடுச்சுன்னா.

தாத்தா : டேய் யாரை பெருசுனு சொன்ன, எனக்கு சிறுசு டா.

ரஞ்சித் : தாத்தா, எனக்கு சிரிசுடாணா தப்பா எடுத்துபாங்க, நான் சிறுசுனு சொல்லு.

தாத்தா : உங்க பாட்டி எனக்கு சிரிசுனு சொல்லி சொல்லி அப்டி சொல்லிட்டேன். நான் சிறுசு டா.

ரகு : ஆமா பாட்டி ஏன் உனக்கு சிரிசு சொல்லுது.

ரஞ்சித் : தாத்தா, சொல்லிடாத, நீ வேற அர்த்ததுல பேசுற, அவன் வேற அர்த்ததுல பேசுறான். கெட்ட பையன்

தாத்தா : டேய் என்னோட பெரிய பையன், உங்க பாட்டி கிட்ட பிரியமா இருப்பான், சின்ன பையன் என் கிட்ட பிரியமா இருப்பான். அதுனால பாட்டி, எனக்கு பெருசு, உனக்கு சிறுசுனு சொல்லுவானு சொன்னேன்.

ரகு : நல்ல வேல நான் எதும் பெருசா யோசிக்கல.

தாத்தா : எனக்கு வேற ஒரு விஷயம் சின்னதா இருக்கு.

ரஞ்சித் : தாத்தா வேணா, அவன் என்ன நினச்சு கேட்பான்னு எனக்கு தான் தெரியும்.

தாத்தா : என் மூக்க சொன்னேன்.

ரகு : மூளைய விட்டுட்டீங்களே.

தாத்தா : அதுவும் தான்,அதுவும் தான்.

ரகு : நல்ல வேல, கிழவன நம்ம கலாய்க்கிறோம்னு கண்டுபிடிக்கல. சரி ரெண்டு பேரும் எங்க போறிங்களோ,என்னையும் கூட்டினு போங்க.

ரஞ்சித் : சரி, உன் கைல இருக்க சிங்கம் முகம் வச்ச காப்ப குடு ஒரு தடவ, போட்டு பாத்துட்டு தரேன்.

ரகு : டேய், சொல்லி இருக்கேன்ல என்னோட அனாதை ஆசிரமத்துல், என்னோட டீச்சர் எனக்கு வாங்கி கொடுத்தது, யாருக்கும் போட தர மாட்டேன்.

தாத்தா : சரி வா, உன்னையும் கூட்டினு போறோம்.

ரகு : தேங்க்ஸ் தாத்தா. ஆனா எங்க போறீங்கனு சொல்லலையே.

தாத்தா : எட்டிபாரு சாமியார் கிட்ட போறோம்.

ரகு : பேரே வித்தியாசமா இருக்கே. எதுக்கு போறோம்.

தாத்தா : அங்க போன பிறகு தெரிஞ்சுப்ப.

சாமியார பாக்க மூணு பேரும் வந்துடுங்க.

ரகு : ஏன்டா சாமியார்னு சொன்னிங்க, வெளியே கட்டயா வச்சுனு அடி ஆட்கள் லாம் இருக்காங்க.

தாத்தா : டேய் உள்ள கூப்பிடுறாங்க வாங்க போலாம்.

தாத்தா சாமியார் கிட்ட பேச அரமிக்குறாரு.

தாத்தா : சாமி, இது என் பேரன், பேரு ரஞ்சித், அவனுக்கு காமெடியன்ன்ற வார்த்தைல பிரெச்சனை இருக்கு.

சாமியார் : என்ன பிரச்னைனு, நான் நேரடியா பாத்தா தான்,நம்புவேன். அந்த வார்த்தைய சொல்லுங்க.

ரஞ்சித் : வேணாம் சாமி.

சாமியார் : பயப்புடாதீங்க, நான் இருக்கும் போது,உங்கள யாரும் எதும் பண்ண முடியாது.

ரஞ்சித் : சரி சாமி, நான் சொல்றேன், நான் ஒரு காமெடியன்.

சாமியார் மூஞ்சு கோபம் ஆகி, ரஞ்சித் முக்குலயே குத்துறாரு.

ரஞ்சித் தாத்தா கிட்ட போய்.

ரஞ்சித் : தாத்தா,என்ன அடிக்குறாரு,எல்லாரும் அறையுவங்க அதிக பட்சம் இந்த சாமியாரு மூக்குல குத்துறான். இவரு நிஜமாவே சாமியார் தான்.

சாமியார் : தம்பி நீ பேசுனது எனக்கு கேட்டுடுச்சு, எல்லாரும் அரையுறாங்க, நான் மூஞ்சுல குத்திட்டேன்னு நினைக்கிற, அப்படித்தானா,சரி எப்போ கடைசியா காமெடியன் வார்த்தைய சொன்ன.

ரஞ்சித் : ஒரு 3 நாள் முன்னாடி இருக்கும்.

சாமியார் : அந்த வார்த்தைக்கு வீரியம் கூடி போச்சு, அது தான். உனக்கு என் மேல சந்தேகம் இருந்தா, உங்க தாத்தா கிட்ட அந்த வார்த்தைய சொல்லிபாரு.

ரஞ்சித் : சரி சாமி, தாத்தா ரெடியா.

தாத்தா ரெடி பான்னு சொல்லிட்டு, கைய்ய முறுக்கி, குத்ததுக்கு ரெடி ஆகுறாரு.

ரஞ்சித் : ஏய் தாத்தா நில்லு, என்ன நான் அந்த வார்த்தைய சொல்றதுக்கு முன்னாடியே, கைய்ய முறுக்கி உட்கார்ந்துட்டு இருக்க. இல்ல இல்ல நான் உன்ன நம்பள, ரகு நீ இங்க வா.

ரகு : சாமி, இவன் என் friend என் மேல ரொம்ப நம்பிக்கை ஜாஸ்தி.

ரஞ்சித் : மச்சான் ரெடியா.

ரகு : சொல்லு டா.

ரஞ்சித் : நான் ஒரு காமெடியன் டா.

ரகு ரெண்டு step பின்னாடி போய், ஓடி வந்து உட்கார்ந்து இருந்த ரஞ்சித்த மூஞ்சிலயே உதைக்குறான்.

ரஞ்சித் : ஐயோ சாமி, இவன் ஏன் உதைக்கிறான், குத்த தான செய்யணும்.

சாமியார் : அந்த வார்த்தையோட வீரியம் நிமிஷத்துக்கு நிமிஷம் கூடிட்டே இருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல நீ அந்த வார்த்தைய சொல்லும் போது உன்ன கத்தியால வெட்ட கூட வரலாம்.

ரஞ்சித் : சாமி நீங்க தான் என்ன காப்பாத்தணும்.

சாமியார் : நான் பாத்துகிறேன்,ரொம்ப அடி வாங்கி இருக்க, மொதல இந்த தண்ணிய குடி.

ரஞ்சித் தண்ணிய குடிக்கிறான்.

ரஞ்சித் : ஏன் சாமி, தண்ணி ஒரு மாதிரி இருக்கும்.

சாமியார் : அது என் கால் கழுவி பூஜை பண்ண தண்ணி.

ரஞ்சித் துவாக்னு வாந்தி எடுக்க போறான்.
தாத்தா, "ரகு அவன புடின்னு full தண்ணியும் ரஞ்சித் வாயில ஊத்துது"
ரஞ்சித் வாந்தி எடுக்குற மாதிரி பண்ணிட்டு இருக்கான்.

சாமியார் : வாந்தி எடுத்துடாத பா, அந்த தண்ணி தான் உன் பிரச்னைய தீர்க்க போது.

தாத்தா, ரஞ்சித் வாய மூடி, கை வச்சு இருக்காரு.

ரஞ்சித் : தாத்தா கைய எடு, மூக்கு நோண்டிட்டு என் வாயில கைய வச்சிட்ட.

தாத்தா : சரி சாமி, ஏன் இவனுக்கு இப்டி எல்லாம் நடக்குது பாத்து சொல்லுங்களேன்.

சாமியார் சப்பனா காலு போட்டு உட்கார்ந்துட்டு, கைய ஊனி, எட்டி பாக்குறாரு. ரஞ்சித் திரும்பி பாக்குறான்.

ரஞ்சித் : தாத்தா, அவரு எட்டி அந்த எதிர் வீட்டு ஆண்ட்டி துணி காய போடுறத பாக்குறாரு.

தாத்தா : டேய், அவரு உன் போன ஜென்மத்த எட்டி பாக்குறாரு.

ரஞ்சித் : போன ஜென்மத்த யா.

தாத்தா : ஆமா, அதுனால தான அவர எட்டி பாரு சாமியார்னு சொல்றாங்க.

ரஞ்சித் : நம்ப முடியலையே.

தாத்தா : நீ நம்புனா தான் உன் பிரச்னை தீரும் .

ரஞ்சித் : நம்புறேன், நம்புறேன்.

தாத்தா : சொல்லு எட்டி எட்டி சாமியார்.

ரஞ்சித் : எட்டி எட்டி சாமியார்.

சாமியார் : ம்ம் இது தான் விஷயமா.

ரஞ்சித் : என்ன சாமி, கண்டிப்பிடிச்சிட்டீங்களா.

சாமியார் : போன ஜென்மத்துல நீ ஒரு காமெடியனா இருந்து இருக்க. உன் காமெடி முதல் சில படத்துல நல்லா இருந்து இருக்கு. ஆனா அதுக்கு அப்பறம் எந்த படத்துலயும், எந்த காமெடிக்கும் மக்கள் சிரிக்கிறது இல்ல, போக போக எல்லா படத்துலயும் வந்து காமெடி ன்ற பேர்ல மக்கள துன்புருத்தி இருக்க. அதுனால இந்த ஜென்மத்துல அந்த வார்த்தை சொன்னா எல்லாம் உன்ன அடிக்க வராங்க.

ரஞ்சித் : இதெல்லாம் ஒரு பிரச்னையா சாமி, வடிவேலு, சந்தானம் போன அப்பறம், வந்த காமெடியன் எல்லாம், முதல் சில படத்துல நல்லா பண்ணாங்க, அப்பறம் மக்கள்ல கொல்லலயா காமெடி பண்றேன்னு. அவங்களவிடவா நான் கொடுமை காரன். சரி பரிகாரம் எதுனா இருக்கா.

சாமியார் : இப்போ ட்ரெண்ட்ல இருக்க நல்ல காமெடியன் கூட ஒரு selfie எடுத்துக்கோ, அது தான் பரிகாரம்.

ரஞ்சித் : நீங்க இப்போ சினிமா பாக்குறது இல்லனு நினைக்கிறன், நல்ல காமெடியனுக்கு நான் எங்க போவேன். பேசாம நானே நடிச்சிடுவா.

சாமியார் : அப்பறம் அடுத்த ஜென்மத்துக்கும் அந்த பாவம் சேரும்.

ரஞ்சித் : சரி விடுங்க இப்போலாம் youtube சேனல் வச்சு இருக்க,நல்ல காமெடியன் இருக்காங்க, அவங்க யாரு கூடனா selfie எடுத்துக்குறேன்.

தாத்தா : சாமி, எனக்கும் ஒரு வார்த்தை சொன்னா பிரச்னை வருது.

சாமியார் : என்ன வார்த்தை.

தாத்தா : பரிமளானு கூப்டா என் பொண்டாட்டி அடிக்கிறா.

சாமியார் : இது என்னயா, கொடுமையா இருக்கு, பொண்டாட்டிய பேர் சொல்லி கூப்டா , அடி விழுதா, நீ ஒன்னும் கவல படாத, ஆண்களுக்குனு ஒரு சங்கம் இருக்கு,அங்க இந்த பிரச்னைய முறையிடலாம்.

தாத்தா : ஐயா பரிமளா என் பொண்டாட்டி பேரு கிடையாது.

சாமியார் : யோவ் அப்பறம் ஏன் அந்த பேர சொல்லி கூப்டுற, உனக்கு சின்ன வயசுல இந்த பேருல எதாவது காதலி இருந்தாளா.

தாத்தா : இல்ல சாமி.

சாமியார் : இங்க பாரு யா, டாக்டர் கிட்ட, வக்கீல் கிட்ட, சாமியார் கிட்ட லாம் பொய் சொல்லக்கூடாது.

தாத்தா : இல்ல சாமி. உங்க கிட்ட பொய் சொன்னா, இந்த ஜென்மத்துல என்ன பண்ணணு நீங்க கண்டுபுடிச்சிடுவீங்கள.

சாமியார் : அதுவும் சரி தான், நான் இப்போ என்ன பண்ணனும்.

தாத்தா : நான் ஏன் அந்த பேர சொல்றேன்னு தெரியணும், கொஞ்சம் எட்டி பாத்து சொல்லணும்.

சாமியார் எட்டி பாக்குறாரு.

சாமியார் : போன ஜென்மத்திலயும் இப்போ உனக்கு இருக்க பொண்டாட்டி தான், பொண்டாட்டி, அப்போ அவ பேரு பரிமளா ஆனா நீ பாக்கிய லக்ஷ்மினு கூப்பிட்டு அடி வாங்குவ. இந்த ஜென்மத்துல உன் பொண்டாட்டி உனக்கு தான் பொண்டாட்டியா வரணும்னு வரம் வாங்கி பாக்கிய லக்ஷ்மினு பேரு வச்சிட்டு வந்து இருக்கா, ஆனா நீ இந்த ஜென்மத்துல பரிமளானு கூப்பிட்டு அடிவாங்குற.

தாத்தா : இப்போ பரிமளா பேர மறந்து பாக்கிய லக்ஷ்மி பேர வர வைக்க நான் என்ன பண்ணனும்.

சாமியார் : ஒரு தடவ உன் வாழ்க்கைல நீ உன் சுய நினைவ மறக்கணும், திரும்ப சுய நினைவு கிடைக்கனுக்கு, அப்போ பரிமளா பேர மறந்துடுவ, பாக்கிய லக்ஷ்மின்ற பேர ஞாபகம் வச்சிப்ப

ரகு எழுந்துருச்சு போறான்.

ரஞ்சித் : டேய் எங்க போற.

ரகு : ஒரு கட்ட தேட.

ரஞ்சித் : எதுக்கு.

ரகு : தாத்தாக்கு சுய நினைவு போனும், அப்போ தான் பரிமளா பேர மரப்பாருனு சாமி சொன்னாருல, அதான் ஒரு கட்ட எடுத்து மண்டையில போட்டா, கிழவனுக்கு சுய நினைவு போய்டும்ல.

ரஞ்சித் : கிழவன் சுய நினைவுக்கு வரணும்னா என்ன பண்ணவ.

ரகு : தண்ணி தெளிச்சு எழுப்பிட்டா போச்சு.

ரஞ்சித் : சரி நீ அடி அவர நான் போன்ல ரெகார்ட் பண்ணிக்குறேன்.

ரகு : ஏன் டா.

ரஞ்சித் : நீ தலைல அடிச்சு ஒரு வேல கிழவன் எழுந்துக்கலனா, போலீஸ்க்கு ஒரு proof கொடுக்கணும்ல.

ரகு : ஐயோ எம்மா.

கட்டய கீழ போட்டுடுறான்.

சாமியார் : ரகு தம்பி ஏன் கட்டய கீழ போட்டுட்டீங்க, பரி சோதனை பண்ணா தான் ரிசல்ட் சக்ஸஸா, failure ah னு தெரியும்.

ரஞ்சித் : சாமி, கொலை பண்ணுறவங்கல விடு கொல பண்ண தூண்டுறவங்களக்கு தான் தண்டனை அதிகம்.

சாமியார் : சாரி பா, எதும் போன்ல ரெகார்ட் பண்ணலல.

ரகு : சாமி, அவன் போன் வீட்ல இருக்கு, சார்ஜ் போட்டு இருக்கான், இப்போ தான் ஞாபகம் வருது.

சாமியார் : அப்போ எடு அந்த கட்டய.

ரஞ்சித் : யோவ் என்ன, எங்க கிழவன போட்டு தள்ளுறதுலயே இருக்க. எதாவது பழைய பகை இருக்கா. நாங்க போறோம் வாடா போலாம்.

மூணு பேரும் சாமியார் எடுத்துல வெளி வாசல்ல நிக்குறாங்க.

தாத்தா : பேராண்டி, நான் போய் ஒண்ணுக்கு உட்டு வந்துடுறேன்.

ரஞ்சித் : பாத்து போய்ட்டு வா, நாங்க இங்கயே நிக்குறோம். அந்த பக்கம், போகாத, பாம்பு புத்து இருக்கு.

ரகு : தாத்தாவ எவளோ அக்கறையா பாத்துக்குறா டா.

ரஞ்சித் : பாம்பு பாத்து பயந்திட போகுதுனு சொன்னேன்.

ரஞ்சித் : சரி இங்க ஏன், சாமியார் வாசல்ல கட்டயோட அடியால் நிக்குறாங்க.

ரகு : நீயே கேளு.

ரஞ்சித் : ஏன்பா சாமியார்க்கு எதுக்கு அடியாலு, புரியலையே.

அடியால் : நம்ம சாமியார் எடத்துக்கு எதிர்ல ஒரு விடு தெரியுதா.

ரஞ்சித் : ஆமா.

அடியால் : அந்த மாடில, துணி காய போட ஒரு பொம்பள வரும், நம்ம சாமி, போன ஜென்மத்த எட்டி பாப்பாரு அப்போ, அந்த பொம்பள துணி காயப்போடுறத தான் பாக்குறாருனு நினைச்சுகிட்டு, ஒரு நாள் சாமியார தூக்கி போட்டு மிதிச்சுட்டான் அவ புருஷன். அதுல இருந்து சாமி safety காக, எங்கள வேலைக்கு வச்சு இருக்காரு. வேலையே கிடைக்காம இருந்தோம், இப்போ கை நிறைய சம்பாரிக்குறோம்.

ரகு : டேய் யார் ஏமாத்த பாக்குறீங்க, சாமியாரே அம்பது, நூறு தான் வாங்குறாரு. உங்களுக்கு கை நிறைய எப்படி கிடைக்கும்.

ரஞ்சித் : மச்சான், ஒருபா காயினா மாத்தி, சில்ரயா, கை நிறைய கொடுத்து இருப்பாரு.

அடியால் : ஒய், என்ன நக்கல் பண்றிங்க, எடு டா அந்த கட்டய.

ரஞ்சித் : போய்டலாம் டா.

தாத்தா வந்துட்டாரு. மூணு பேரும் கிளம்பி வீட்டுக்கு போய்ட்டாங்க.

கீர்த்தி : ரகு, இப்போ தான் சகுந்தலா பாட்டி கிட்ட பேசிட்டு இருந்தேன். இந்த ஊர்ல அக்கா தம்பி ரெண்டு பேரும் அடுத்து அடுத்து செத்து இருக்காங்க.

ரகு : அவங்க பேரு என்ன.

கீர்த்தி : அக்கா பேரு வர்ஷினி, தம்பி பேரு வருண்.

ரகு : அவங்க எப்படி செத்தாங்கனு பாட்டி சொல்லுச்சா.

கீர்த்தி : இல்ல பாட்டிக்கு அத பத்தி முழுசா தெரியலனு சொல்லுச்சு,மேட்டு தெருக்கு போய் கேட்க சொல்லுச்சு, அங்க அவங்க ரெண்டு பேர் இருந்தாங்கனு சொல்லுச்சு.

ரகு : சரி வா போலாம்.

கீர்த்தி : இப்பவேவா.

ரகு : அதுக்கு தான் இவளோ நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தோம், கிளம்பு.

ரஞ்சித் வரான்.

ரஞ்சித் : ரெண்டு பேரும் எங்க கிளம்பிட்டிங்க

ரகு : பேய்ய பத்தி விசாரிக்க.

ரஞ்சித் : சரி வாங்க போலாம், நானும் வரன்.

ரகு : உன்ன நாங்க கூப்டவே இல்லையே.

ரஞ்சித் : நண்பனுக்கு உதவி,கேட்டா தான் செய்யணும்னு இல்ல.

ரகு : நீ பண்ணா அது உதவியா இருக்காது, உபத்ரமா தான் இருக்கும்.

ரஞ்சித் : நான் இன்னைக்கு சாமியார் கிட்ட உன்ன கூட்டினு போனேன்ல, அது மாதிரி நீயும் இப்போ கூட்டினு போ.

கீர்த்தி : ரகு,இவனையும் கூட்டிட்டு போவோம். ஒரு கிழவி அன்னைக்கு,உன்ன பாத்து அழகா இருக்கணு சொல்லிச்சுல, சென்னைல இருக்க பசங்க லாம் அழகா தான் இருப்பாங்க போலன்னு சொல்லிச்சு. அது கிட்ட இவன கூட்டினு போய் காட்டணும்.

ரஞ்சித் : எதுக்கு

கீர்த்தி : அப்போ தான் அதுக்கு தெரியும், சென்னைல இது போல ஜந்துகளும் இருக்கும்னு.

ரஞ்சித் : இப்போ நீ என்ன அவமானம் படுத்தனதுகெல்லாம், நான் வருத்த படல, வா போவோம்.

கீர்த்தி : என்ன சொன்னாலும் வரான் டா இவன். சரி வா.

ரஞ்சித், ரகு, கீர்த்தி, மூணு பேரும் நடந்து போறாங்க.
போற வழில கீர்த்தி ஒரு தெரிஞ்சுவங்கல பாத்து ஓடி போய் அவங்க கிட்ட பேசிட்டு இருக்கா, அவங்க கையில் இருக்க, குழந்தை கிட்ட விளையாடிட்டு இருக்கா.

ரஞ்சித் : பா ரகு, குழந்தைய பாத்த உடனே, கீர்த்தியும் குழந்தையாவே மாறி விளையாடிட்டு இருக்கா.

ரகு : கியூட் girls லாம் அப்படி தான் இருப்பாங்க, குழந்தைய பாத்து கொஞ்சவாங்க, நாய் குட்டிக்கு முத்தம் கொடுப்பாங்க, ஆட்டுகுட்டி, தலைய தடவி குடுப்பாங்க , இந்த காதோரமா இருக்க முடிய அடிக்கடி தள்ளி விடுவாங்க.

ரஞ்சித் : என்ன டா பெண்கள் இவளோ விஷயம் பண்ணுவாங்களா.

ரகு : பின்ன கியூட் girls ah இருக்கறது அவளோ ஈஸியா.

கீர்த்தி வந்துட்டா பேசிட்டு, இப்போ மேட்டு தெருவுக்கு வராங்க.

ஒருத்தர் கிட்ட ரகு பேசுறான்.

ரகு : சார் இந்த தெருல அக்கா தம்பி, ரெண்டு பேரு செத்துட்டாங்கல. அவங்க வீடு தெரியுமா.

அந்த ஆள் : சார் நான் வெளி ஊரு, உள்ள போய் கேளுங்க. ஆனா அந்த ஒரே வீட்டுக்கு ரெண்டு வாசல் ரெண்டு வீடு இருக்குல அங்க அண்ணன் தம்பிங்க இருப்பாங்க,அந்த ரெண்டு பேரு கிட்ட மட்டும் கேட்காதீங்க, யார பத்தியும்.

ரகு : ஏன் சார்.

அந்த ஆள் : அவங்க என் சொந்தக்காரங்க தான், அங்க இருந்து தான் வரேன், எல்லாரையும் பத்தி தப்பா பேசுவாங்க, எங்க சொந்த காரங்க உள்பட, இப்போ அங்க இருந்து வந்தேன்ல, இப்போ என்ன பத்தி எதுனா தப்பா பேசிட்டு இருப்பாங்க.

ரகு : சரி சார், நாங்க பாத்துக்குறோம்.

மூணு பேரும் அந்த தெருவுல போய் பாக்குறாங்க நிறைய வீடு பூட்டி இருக்கு, சில வீட்டுல குழுந்தைங்க மட்டும் தான் விளையாடிட்டு இருக்காங்க.

ரகு : எங்கயும் கேட்க முடியாது போல, அந்த ரெண்டு வீட்ல போய் கேட்போம்.

கீர்த்தி : இப்போ தான் அந்த ஆள் சொன்னான், அந்த ரெண்டு அண்ணன், தம்பிங்க கிட்ட போகாதீங்கனு.

ரகு : வேற வீடு எல்லாம் சின்ன குழந்தைங்க இருக்கு, இல்ல வீடு பூட்டி இருக்கு. என்ன பண்றது. செத்தவங்கள பத்தி யாரும் தப்பா பேசமாட்டாங்க.

ரஞ்சித் : நான் அந்த வீட்ட போய், விசாரிக்கிறேன், நீ இந்த வீட்ட விசாரி.எவன் அண்ணன், எவன் தம்பினு தெரியல.

ரகு : சரி டா போ.

ரஞ்சித் ஒரு வீட்டுக்குள்ள போறான், ரகு ஒரு வீட்டுக்குள்ள போறான்.

ரகு : சார் இங்க வர்ஷினி, வருண்னு ரெண்டு பேரு அக்கா, தம்பி, செத்துட்டாங்கல, அவங்க வீடு எது.

சந்திரன் : அந்த வீட்ல இப்போ யாரும் இல்ல பா, யாரு கிட்ட பேசுவீங்க.

ரகு : ஏன் அவங்க வீட்ல வேற யாரும் இல்ல.

சந்திரன் : அந்த வீட்ல அம்மா, அப்பா முன்னாடியே செத்துட்டாங்க, கொஞ்சம் நாள் முன்னாடி அந்த பசங்க ரெண்டும் செத்துடுச்சு.

ரகு : சார் அவங்க எப்படி செத்தாங்கனு சொல்ல முடியுமா.

சந்திரன் : இப்போ என் சொந்தகாரங்க வர நேரம் ஆச்சே பா.

ரகு : அவங்க வர வரைக்கும் சொல்லுங்க சார், அப்பறம் நாங்க போயிடுறோம்.

சந்திரன் :சரி வாங்க திண்ணையில உட்காருங்க.

ரகுவும் கீர்த்தியும் திண்ணையில, சந்திரனுக்கு எதிர்த்த மாதிரி உட்காருறாங்க.

சந்திரன் : டீ சொல்லட்டா பா.

ரகு : வேணாம் சார்.

சந்திரனக்கு ஒரு போன் வருது, பேசி முடிக்குறாரு.

சந்திரன் : என் சொந்தக்காரங்க போன்ல பேசுனாங்க, இந்த சொந்தக்கறாங்கல மட்டும் நம்பவே கூடாதுப்பா. இப்போ நீங்க வரதுக்கு முன்னாடி ஒருத்தன் மஞ்ச சட்ட போட்டுட்டு போனான்ல, அவன் நம்ம சொந்தக்கார பய தான், அவன் தொழில் பண்ண காசு கொடுத்து, ஆள் ஆக்குனது நாம தான், ஆனா இப்போ ஒருத்தன் பொண்டாட்டிய வச்சிட்டு இருக்கான்.

கீர்த்தி ரகு கிட்ட போய் "இவன் கிட்ட தான் அவங்கல பத்தி விசாரிக்கணுமானு யோசிச்சிக்க "

சந்திரன் : சரி என்ன இருந்தாலும், சொந்தம் வேணும்னு கூட வச்சு இருக்கேன்.

ரகு : சார், வருண்,வர்ஷினி பத்தி சொல்லுங்க.

சந்திரன் : அந்த பொண்ணு தங்கமான பொண்ணு, வாய் பேச முடியாத பிள்ள,யாருக்கும் அவள தப்பா பாக்கணும்னு தோணாத பொண்ணு. மஹா லக்ஷ்மி போலனு வச்சுக்கயேன். ஆனா அந்த பையன் ஒரு மாதிரி கேஸ்.

ரகு : ஒரு மாதிரினா .

சந்திரன் : ஒரு பொம்பளைய வச்சு இருந்தான் பா. அதுவும் ஒரு விபச்சாரிய, அவன் அக்கா வயசு இருக்க பொண்ண.

ரகு ஒரு மாதிரி உடும்ப உளுக்குறான். உறும்பூறான்.

சந்திரன் : ஏன் மா இந்த பையனுக்கு என்ன ஆச்சு.

ரகு கை அசைவுல எதோ பேசுறான்.

சந்திரன் : கை மட்டும் அசச்சு என்னமோ சொல்றான். ஆனா ஒன்னுமா அந்த வருண் பையன் செத்தது தான் இந்த தெருவுக்கே நல்லது.

ரகு, சந்திரன் கழுத்த புடிச்சு தூக்குறான். சந்திரன் கத்துறான். தூக்கி வாசல் வெளிய வீசுறான். கீர்த்தி வெளிய போய் பாக்குறா.
பக்கத்துல ரஞ்சித் அந்த வீட்ல இருக்க சந்திரன் தம்பிய தோளுக்கு மேல தூக்கி வச்சு இருக்கான், அவன் கத்துறான். ரகு, சந்திரன அடிக்குறான், ரஞ்சித், சந்திரன் தம்பிய அடிக்கிறான். சந்திரன், அவன் தம்பி ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்குறாங்க. ரகுவும், ரஞ்சித்தும் கோபம் தனிஞ்சு, மயங்கி விழுந்துடுறாங்க.சந்திரன் சொந்தக்காரங்க வராங்க, சந்திரன், அவன் தம்பி ரெண்டு பேரையும் தூக்குறாங்க. சந்திரன், அங்க மயங்கி இருக்காங்கள, அவனுங்கல அடிச்சு கொள்ளுங்க டா அவனுங்க தான் எங்கள அடிச்சதுனு அவன் சொந்தகாரங்க கிட்ட சொல்றான். ரகுக்கு ரஞ்சித்துக்கும் முழிப்பு வந்து இருக்கு, ஆனா ரெண்டு பேரும் tired ah இருக்காங்க. சந்திரன் சொந்தக்காரங்க ரெண்டு பேரையும் அடிக்க கட்டயோடு வராங்க.

கீர்த்தி : சார் அடிக்காதிங்கனு கெஞ்சுரா.

கீர்த்தி அழுவுரா.

அப்போ ஒரு பெரியவர் அங்க வராரு.

அந்த பெரியவர் : ஏன் மா அழுவுற, என்ன ஆச்சு.

கீர்த்தி விஷயத்தை சொல்றா.

அந்த பெரியவர் : டேய் கட்டய கீழ போடுங்க டா, மொதல்ல மனுஷங்கள பத்தி தப்பா பேசுனாங்க இந்த அண்ணன் தம்பிங்க, இப்போ செத்தவங்கள் பேசுறாங்க. இவனுக்கு போய் சப்போர்ட் பண்ணிட்டு இந்த பசங்கல அடிக்க வரீங்க. போங்க டா.

எல்லாரும் போயிடுறாங்க.

அந்த பெரியவர் : நீங்க மூணு பேரும் பாத்து போங்கமா, நடந்து போய்டுவீங்களா, இல்ல கூட்னு போய் விட்டுட்டு வர சொல்லட்டுமா.

கீர்த்தி : போயிடுவோம் ஐயா.

அந்த பெரியவர் : அந்த வருண், வர்ஷினி ரெண்டும் தங்க கட்டிங்க மா. அவங்கள பத்தி நான் உங்க கிட்ட நாளைக்கு சொல்றேன், என்ன வந்து பாருங்க.என் நம்பர் எடுத்துகோங்க. என் பேரு கணியன்.

கீர்த்தி : நன்றி ஐயா.

மூணு பேரும் நடந்து போறாங்க.

கீர்த்தி : ரஞ்சித் உனக்கு என்ன ஆச்சு.

ரஞ்சித் : அவன் வர்ஷினி பத்தி தப்பா பேசுனான், அப்பறம் வருண் என் மேல வந்து, பூஜைய பண்ணிட்டான்.

ரகு : சந்திரன், வருண் பத்தி தப்பா பேசினான், வர்ஷினி என் மேல எறங்கிட்டா. வருணும் வர்ஷினியும் எவளோ அன்பா இருந்து இருப்பாங்கன்னு புரிஞ்சிக்க முடியுது, நாளைக்கு எப்போ வரும் அவங்க கதைய எப்போ கேட்க போறேனோனு இருக்கு.

மூணு பேரும் வீட்டுக்கு போய்ட்டாங்க. ரகுவும், ரஞ்சித்தும் tired ah இருக்கறதுனால ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்துகிறாங்க.

ரகுவும் ரஞ்சித்தும் பண மரத்துக்கு அடில உட்கார்ந்து இருக்காங்க.

ரஞ்சித் : டேய் ஏன் டீ குடிக்கிற.

ரகு : பண மரத்துக்கு அடில உட்கார்ந்து பால் குடிச்சாலும், கல்லுனு தான் சொல்லுவாங்க, அதான் டீ குடிக்கிறேன்.

ரஞ்சித் : டேய் என்ன மாதிரி இளநீர் குடிக்க வேண்டியது தானனு சொன்னேன்.

ரகு : ரஞ்சித், அங்க கவனிச்சியா.

ரஞ்சித் : என்ன மச்சான்.

ரகு : நம்ம கமல் மாட்டு கொட்டாயில, உட்கார்ந்து அழுதுட்டு இருக்கான், கண்ணாடி பார்த்து பேசிட்டே.

ரஞ்சித் : நம்ம கமலா, உங்க கமல்னு சொல்லுங்க, நான் லாம் கமல ஹாசன் வெறியன் டா. இவனுக்கு அதே பேரு வச்சது, எனக்கு ஒரு மன கஷ்டம்.

ரகு : ஒருத்தன் அழுவுறான் சொல்றன், உனக்கு நம்ம கமல்னு சொன்னது தான் கஷ்டமா ஆகிடுச்சு. அவன் உன் வருங்கால மச்சான்.

ரஞ்சித் : அவன் தங்கச்சி குயிலிய, நினைக்கும் போதெல்லாம் எனக்கு வர ஒரே பயம், இவன் எனக்கு மச்சான் ஆகிடுவான், அவன் கூட நான் பேச நேரிடும், அதுக்கு அப்பறம் என்ன எந்த மெண்டல் ஹாஸ்பிடல் சேப்பாங்கன்றது தான்.

ரகு : எனக்கு மணிநேயம் ஜாஸ்தி, நான் போய் அவன் கிட்ட பேச போறன், நீயும் வர.

ரஞ்சித் : அவன பத்தி உனக்கு தெரியல.

ரகுவும் ரஞ்சித்தும், கமல் கிட்ட போறாங்க.

ரகு : கமல், எனக்கு உன் கஷ்டம் புரியுது, உனக்கு எதோ கஷ்டம், அத நீ யார்கிட்டனா சொல்ல நினைக்குற, ஆனா உன் கஷ்டத்த கேட்க ஆள் இல்ல, அதுனால நீ முகம் பாக்குற கண்ணாடிய பாத்து, நீயே பேசி அழுதுக்குற. இங்க பாரு உனக்காக, நானும், ரஞ்சித்தும் இருக்கோம், நீ சொல்லு.

ரஞ்சித் : டேய் நீ வேணா இரு, நான் சும்மா நீ பேசுறியேனு கம்பெனி தான் குடுக்குறன்.

ரகு : கல் நெஞ்ச காரன், ஒருத்தன் அழுவுறனே கரையுறானானு பாரு. கமல் நீங்க சொல்லுங்க,உங்க கஷ்டத்த சோலோவா நான் கேட்குறன்.

கமல் : என்ன கஷ்டம் சார்.

ரகு : கமல் நீ அழுவுறத நான் பாத்துட்டேன், உன் கஷ்டத்த கேட்டுட்டு தான் போவேன்.

கமல் : ஐயோ சார்,ஒத்திக பாத்துட்டு இருந்தேன் சார்.

ரகு : ஒத்திகையா, இது தெரியாம இவனுக்கு இவளோ feel பண்ணிட்டோமே. சரி,எதுக்கு கமல், எதாவது நாடகம், கூத்து நடிக்க போறியா.

கமல் : சார் நான் ஒரு food review சேனல் ஆரமிச்சு ஒரு வீடியோ போட்டு இருக்கேன், இன்னும் கொஞ்சம் நாள்ல மில்லியன் வியூஸ் வந்துடும், அப்பறம் கொஞ்ச நாள்ல் நான் கோடீஸ்வரன் ஆகிடுவேன்.பல அவார்டு ஃபங்கஷன்ல,கூப்பிட்டு எனக்கு அவார்டு தருவாங்க, அப்போ அவார்டு குடுக்கும் போது ஒரு ஸ்பீச் கொடுக்கணும், அழுதுகிட்டே. அதுக்கு தான் கண்ணாடிய பாத்து நான் எப்படி அழுதா பாக்க அழகா இருப்பன்னு ஒத்திக பாத்துட்டு இருக்கேன். ரகு சார் நான் இப்படி மூஞ்ச வச்சு அழுதா அழகா இருக்கானானு பாருங்களேன்.

ரகு, ரஞ்சித் மூஞ்ச பாக்குறான்.

ரஞ்சித் : சாவு நாயே, உன்ன அப்பவே எச்சரிச்சேன்.

கமல் : சார் நான் அவார்டு வாங்குன உடனே எப்படி பேசணும்னு ரெடி பண்ணி வச்சு இருக்கேன், கேட்குறீங்களா.

ரஞ்சித் : போடா டேய்.

ரஞ்சித் : வா ரகு போலாம்.

தாத்தா இவங்க கிட்ட வராரு.

தாத்தா : என்ன டா பண்றிங்க எல்லாரும்.

கமல் : தாத்தா, நான் மாட்டு காரன்னு என் கிட்ட இவங்க சரியா பேச மாற்றாங்க.

தாத்தா : டேய் நம்ம குடும்பத்துல, அந்த பாகுபாடு லாம் பாக்க மாட்டாங்க.

கமல் : ரகு சாரும், ரஞ்சித்தும் பாக்குறாங்க.

தாத்தா : டேய் ரஞ்சித், இவன் மாட்டுக்காரன்னு இவன் கிட்ட பேசமாற்றியா.

கமல் : இல்ல இவன் கலெக்டரா இருந்தாலும் இவன் கிட்ட பேசமாட்டேன்.

தாத்தா : இதெல்லாம் சரி பட்டு வராது.

தாத்தா ஒரு கோடு ஒன்னு மண்ணுல கிழிக்கிறாரு.

ரஞ்சித் : என்ன தாத்தா,கோடு இது.

தாத்தா : இது அன்பால் இட்ட கோடு, இத நீங்க தாண்ட கூடாது. எப்போ கமல் பேசி முடிக்குறானோ, அப்போ அவன் வந்து இந்த கோட்ட அழிச்ச பிறகு தான் நீங்க வீட்டுக்குள்ள வரணும்.

ரஞ்சித் : தாத்தா நீ எங்க போற.

தாத்தா : நான் போய் தூங்குறன்.

ரஞ்சித் : நம்மள மாட்டிவிட்டுடு கெழவன் எஸ்கேப் ஆகிடுச்சு.

கமல் : ரகு சார் அப்போ நான் எப்படி அவார்டு வாங்கிட்டு பேசுவன்னு பேசி காட்டடா.

ரகு : ஆரமிச்சு தொல.

கமல் : அவார்டு வாங்க மேடையில ஏறுன உடனே, வணக்கம் பாப்பாம்பட்டி, லவ் யு டூனு சொல்லுவேன்.

ரகு : ஏன் அப்படி சொல்ற.

கமல் : எல்லாரும் மேடையில ஏறுன உடனே வணக்கம் சென்னைனு தான சொல்லுவாங்க, நம்ம பாப்பம்பாட்டில இருக்கோம், அதான் அப்படி சொன்னேன்.

ரகு : அந்த லவ் யு டூ எதுக்கு.

கமல் : அதுவும் நடிகர்கள் பேசும் போது, நடவுல லவ் யு டூனு சொல்லுவாங்க.

ரகு : டேய் அது அவங்க ரசிகர்கள், லவ் யுனு யாருனா சொல்லுவாங்க, அதுக்கு அவங்க லவ் யு டூன்னு சொல்லுவாங்க.

கமல் : இல்ல நானும் அது சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

ரகு : சரி மேல சொல்லு.

கமல் : மேடையில கேள்வி கேட்கறதுக்கு ஒரு பொண்ணு இருக்கும், அது கேள்வி கேட்குது என்ன, சார் நீங்க எப்படி இவளோ சின்ன வயசுல லெஜெண்ட் ஆனீங்க. நீங்க கேட்குற கேள்வியே வேடிக்கையா இருக்குமா. ஏன் சார்னு கேட்குது அந்த பொண்ணு. நான் லாம் 7 வருஷத்துக்கு முன்னாடியே லெஜெண்ட் ஆகிட்டேன். எப்படி சார். ஒரு மீம்ஸ் ஒன்னு பாத்தேன், அதுல கிட்ஸ் லைக் த்ரிஷா, மென்ஸ் லைக் நயன்தாரா, லெஜெண்ட்ஸ் லைக் ஷகீலானு போட்டு இருந்துது. அப்போ தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன், நான் ஒரு லெஜெண்ட்னு. தெரிஞ்சு எங்க அம்மாவ தேடி ஓடுனே, வீட்டுக்கு போய், அம்மா உன் புள்ள ஒரு லெஜெண்ட் ஆகிட்டேன்மானு சொன்னேன், எங்கம்மா ஆசிர்வாதம் பண்ணி, எனக்கு சுத்தி போட்டுச்சு. அப்போ பக்கத்துல உட்கார்ந்து இருந்த என் தங்கச்சிய பாத்தேன், அவன் என்ன கேவலமா பாத்து த்துனு துப்பிட்டா. அப்போ தான் ஒரு விஷயம் புரிஞ்சிச்சுது, கூட பொறந்து இருந்தாலும் அவங்க கூட பொறாமை பொறந்து இருக்கும்னு

ரகு : சரி அடுத்து என்ன பேசுவ.

கமல் : அந்த கேள்வி கேட்குற பொண்ணு,நீங்க இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்பிறீங்கனு கேட்குது.

ரகு : டேய் இரு, உன் வயசு என்ன.

கமல் : 27.

ரகு : நீயே ஒரு இளைஞன் தான், நீ ஏன் இளைஞர்களுக்கு எதாவது சொல்ற

கமல் : சார் அவார்டு வாங்கிட்டேன்ல, நான் என்ன வேணா சொல்லலாம்.

ரகு : இந்த கேள்விக்கு நீ பதில் சொல்ல கூடாது, அடுத்த கேள்வி போ.

கமல் : அந்த கேள்வி கேக்குற பொண்ணு கேக்குது, சார் நீங்க பாக்க சல்மான் கான் மாதிரி இருக்கீங்க, நீங்க லவ் பண்ணி இருக்கீங்களா.

ரஞ்சித் : சல்மான் கானா.

கமல் : ஆமா அவர் படம் chak தே இந்தியா பாத்து இருக்கேன் சார்.

ரஞ்சித் : அது ஷாரு கான்.

கமல் : சரி இருங்க, அந்த பொண்ணு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிடுறேன், நான் லவ் பண்ணி இருக்கேன், அப்போ மாடுங்க மேல இருந்த அன்புல மாடு மேய்க்கற வேல பாத்துட்டு இருந்த காலம், ரெண்டு வர்ஷம் என் லவ் நல்லா தான் போச்சு, ஒரு நாள் என் லவ்வர் கேட்டா, இந்த ஊர்ல இருக்க எல்லாம் பொண்ணுங்களும் உங்கள லவ் பண்ணாங்க, நீங்க ஏன் என்ன செலக்ட் பண்ணீங்க. இங்க பாரு மா இந்த உலகத்துலயே எனக்கு புடிச்சது மாடுங்க தான், எனக்கு வர போகுற பொண்ணு,கரு கருனு கியூட்டா, கொம்பு வைக்காத எரும மாடு மாதிரி இருக்கணும் நினச்சேன் அப்போ தான் நீ வந்த. அப்போ என்ன விட்டு போனவ தான் என் லவ்வர். அப்போ தான் ஒரு விஷயம் தோணுச்சு, இந்த பெண்கள் மனச புரிஞ்சிக்கவே முடியாதுனு.

ரகு : என்ன ரஞ்சித் யோசிக்கிற.

ரஞ்சித் : இவன் லூசுனு கண்டுபிடிக்க அந்த பொண்ணுக்கு ரெண்டு வர்ஷம் ஆகி இருக்கு பாரேன்.

ரகு : அப்பறம் என்ன கமல் வேற என்ன ஐட்டம் வச்சு இருக்க.

கமல் : குட்டி கதை சொல்லுலாம்னு இருக்கேன்.

ரகு : வேணாம் டா, ரஜினி, விஜய் லாம் வருத்த படுவாங்க டா.

கமல் : சார், ரஜினி சொல்லலாம், விஜய் சொல்லலாம், கமல் சொல்ல கூடாதா.

ரகு : சரி கமல் இது வரைக்கும் குட்டி கதை சொன்னது இல்ல, புதுசா தான் இருக்கும்.

கமல் : சொல்ல ஆரமிக்கிறேன். ஒரு நாள் ஒரு கடைல ஜட்டிய பாத்தேன், ரொம்ப நல்ல கலர், ரொம்ப புடிச்சிது ஒரே ஒரு பீஸ்சு தான் இருந்துது, அப்போன்னு பாத்து கைல காசு இல்ல, வீட்டுக்கு போய் காசு எடுத்துனு வந்தா, அத எங்க ஊருல இருக்க ஒரு பிச்சைக்காரன் நான் வாங்கறதுக்கு முன்னாடி வந்து வாங்கிட்டான், வாங்கிட்டு என்ன ரொம்ப ஒழுங்கு காட்டி வெறுப்பேத்திட்டு போய்ட்டான். அடுத்த நாள் கம்மாயில கக்கூஸ் போய்ட்டு இருக்கும் போது, என் பக்கத்துல தான் அவனும் கக்கூஸ் போய்ட்டு இருந்தான், நம்ம பிச்சைக்காரன்னு லாம் பாக்க மாட்டோம், சரிசமமா பக்கத்துல உட்கார்ந்து கக்கூஸ் போவோம். ஆனா அவன் கெட்ட எண்ணம் புடிச்சவன், என் பக்கத்துல உட்கார்ந்து கக்கூஸ் போகும் போது, அவன் அந்த புது ஜட்டிய கழட்டி தோல்ல நான் பாக்குறா மாதிரி போட்டுட்டு, என்ன வெறுப்பேத்தனான். நமக்கு ஏழ பணக்காரன்லாம் பாக்க தெரியாது, அவன் கூடவே ஒரே ஏறில கால் கழுவுனேன். கால் கழுவனவன், ஜட்டிய போட வேண்டியது தானே, அது தான உலக வழக்கம், ஆனா அவன் தோல்லயே போட்டுட்டு இருந்தான், என்ன வெறுப்பேத்த. தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்னு சொல்லுவாங்க, அதுனால அவன் கிட்ட கேட்டன் , டேய் டேய் அந்த ஜட்டிய குடு டா ஒரு வாட்டி போட்டுட்டு தரேன்னு எனக்கு ஆசையா இருக்குனு ஆனா அவன் பக்கத்துல அவன் வலக்குற,ஒரு சொறி நாய் இருந்துது அதுக்கு அந்த ஜட்டிய போட்டு விட்டு, அந்த நாய்க்கு குடுப்புனே தவிர, இந்த நாயிக்கு குடுக்க மாட்டேன்னு என்ன பாத்து சொல்லிட்டு போய்ட்டான். நான் அவன கூப்பிட்டு, டேய் நீ பிச்சை எடுக்கும் போது, போன வாரம், நான் குச்சி ஐஸ் வாங்க வச்சி இருந்த ஒருபாவ உனக்கு போட்டேன்னு, அந்த காசையும் சேர்த்து தான ஜட்டி வாங்குன நீனு கேட்டன். அவன் அதுக்கு, டேய் இந்த நாயிக்கு ஜட்டி போட்டு விட்டேனல, அந்த நாய் அதுலயே ஆய் போய்டுச்சுன்னு சொன்னான் , பருவால டா, நாய் நன்றி உள்ளது தான்,நான் போட்டுக்குறேன் கேட்டேன், அதுக்கு அவன் நான் வீட்டுக்கு போய் தோச்சு போட்டுப்பேன் டா சொல்லிட்டு ஓடிட்டான்.
நான் வீட்ல இத நினச்சு வருத்த பட்டு ரெண்டு நாள் சாப்புடுல. அப்போ ஒருத்தர் வந்து, அந்த பிச்சைக்காரன், ஜட்டில பூரான் இருந்து கடிச்சு அவன் செத்துட்டான்னு சொன்னாரு, அப்போ கூட நான் அவன் சாவுக்கு போல.என் பாட்டி நான் ஜட்டி கிடைக்கிலயேனு வருத்ததோடு இருக்கறத பாத்து, டேய் உனக்கு இருக்கறது உனக்கு தான் டா வரும் அதுதான் நியதி,நீ வருத்த படாதனு சொல்லுச்சு. அப்போ என் வீட்டுக்குள்ள யாரோ வர மாதிரி தெரிஞ்சுது, பாத்தா, அந்த பிச்சைக்காரன் வளர்த்த சொறி நாய், அது வாயில அந்த ஜட்டி, எடுத்துனு வந்து என் மடில போட்டுச்சு. அவன் செத்துட்டான், இனி உனக்கு தான் இந்த ஜட்டின்னு அது சொல்றது அது கொலைக்கும் போது நான் தெரிஞ்சிகிட்டேன். ஆனந்த கண்ணீரோடு, அந்த ஜட்டிய போட்டு, என் பாட்டி கிட்ட காட்டுனேன், அது ராசா மாதிரி இருக்கணு சொல்லுச்சு. அந்த சம்பவத்துல இருந்து தான், நமக்கு கிடைக்கறது நமக்கு கிடைச்சே தீரும்னு நம்ப ஆரமிச்சேன்.

ரஞ்சித் அழுவுறான்.

ரகு : ஏன் மச்சான் அழுவுற.

ரஞ்சித் : குட்டி கத சொல்லுறேன்னு சொல்லிட்டு, ஜட்டி கத சொல்றான்.

கமலுக்கு போன் வந்துது, பேசி முடிச்சிட்டான்.

கமல் : ரகு சார், எனக்கு கொஞ்சம் வேற வேல வந்துடுச்சு, மீதிய அப்பறம் பாத்துக்கலாம்.

ரஞ்சித் : வாடா உடனே வீட்டுக்கு போய்டலாம்.

ரகுவும், ரஞ்சித்தும், வீட்டுக்கு போய்ட்டாங்க.

நண்பன் ஒருவன் வந்த பிறகுWhere stories live. Discover now