...

102 0 0
                                    

அடுத்த நாள் மீண்டும் அலெக்ஸைஅழைத்தனர். Konark international என்ற பெயர் தாங்கி நின்ற கட்டிடம் அதன் அதீத அறிவியல் வளர்சிக்கு ஏற்றாற் போலல்லாது பழமையுடன் பசுமை கலந்து நின்று கொண்டிருந்தது. உதட்டுச் சாயம் பள பளக்க நின்றிருந்த இரு அழகிகள் கதவை திறந்து விட்டனர். ஆற்று வெள்ளத்தில் நாணல் வளைந்து கொடுப்பது போல வளைந்து நின்று wellcome to konark என முத்தாய்ப்பாய் கூறினர். உள்ளே ஆயுதம் தாங்கிய இருவர் பொம்மை போல் நின்றிருந்தனர். Dr.Steve அந்த விநோத தீர்ப்பின் இரகசியத்தை வெளியிட்டார்.
patrik விஞ்ஞானின்னு சொல்றத விட சரியான தந்திரகாரர்னு சொல்லலாம். ஐரோப்பா ல அவருக்கு எதிராக அதிகளவு political issue அதிகமானது, அப்டின்றதுனால அவருக்கு தேவையான Support konark international மூலமா கிடைக்கும்னு அவரு நம்பினார். ஏன்னா Konark international இராணுவ ஆயுத உற்பத்தி ,அதை சார்ந்த ஆராய்ச்சிகள் நடத்த தடையில்லா உரிமைய சர்வதேச ஆயுத கட்டுப்பாடு சங்கத்துல வாங்கி இருந்தது. அவருக்கு போட்டியா வருவாங்கன்னு நினைச்ச மூனு பேர இன்னைக்கு காலைல பிணமா தான் கிடைச்சாங்க. இப்படி முன்னேற்பாடா கலந்துகிட்ட அவருக்கு தியரிய மட்டும் வெச்சிக்கிட்டு தண்ணி காட்றிங்களா? எல்லாம் plan . Rascals ஜெயிச்சிட்டோம்னு சந்தோஷப் படுறியா?" you Must Die . ....,Must ... ! "ஆக்ரோசமாக Steve பேச ஆரம்பித்தார்
" Dr.Steve உங்களுக்கு எதும் ஆகலயே!??????" அலெக்ஸ் கொஞ்சம் பதட்டத்தோடே கேட்டான்.
Steve திரும்பிப் பார்த்து புன்னகைத்தார்.சாந்தமாக சென்று மேசையின் மற்றொரு கோடியில் அமர்ந்தார்.குலுங்கி சிரித்தார்.
" Dr.steve , எதாவது வேண்டுமா ?" அலெக்ஸ் மீண்டும் கேட்டான் .
"ஆமாம் ......உன் மரணம்!"
"Dr.steve ... "கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தான் Taro.இவன் எப்படி இங்கு நினைத்த அலெக்ஸ் ன் கவனம் அந்த இடி சிரிப்பினால் சிதறலாயிற்று.
இரண்டு நண்பர்களும் திரும்பி பார்க்கும் போது அவர் கையில் காலிபத் இரக துப்பாக்கி முளைத்திருந்தது. அவர் துப்பாக்கி தனது கடைசி குண்டை துப்பிவிட்டு உயிர் விடத் தயாராகும் முன் வேறொரு குண்டு Steve -ன்
இதயத்தை துளைத்து வெளியேறியது.
அந்த துப்பாக்கி Taro வினுடையது .அவன் தற்காப்பிற்காக அவன் அண்ணன் கொடுத்திருந்தது. கடைசியாக தன் ஏழு வருட உறக்கத்தை கலைத்து விட்டு புகையையும் கக்கிவிட்டு மெளனம் சாதித்தது. தான் கொலை செய்துவிட்டதை கண்டு அலெக்ஸ் பயந்திருப்பான் என திரும்பினான். பிரேசிலில் நிறுவப்பட்ட பெரிய இயேசுவின் சிலையை போல நின்று கொண்டிருந்தான். ஆனால் சிறு மாறுதல் அவன் இரு உள்ளங்கையிலும் சத்தியமாக ஆண்டவன் மீது உண்மையாக துப்பாக்கிக்குரிய சர்வ லட்சணங்கள் பொருந்திய ஒரு சில்வர் நிற பொருள் தான். துப்பாக்கி ஏந்தி நின்ற இரு பொம்மை உருவங்களும் இரத்தத்தை கக்கிவிட்டு கீழே விழுந்தன. மீண்டும் Steve சிரிக்க ஆரம்பித்தார்.
" welcome Mr.Agent Alex "
Taro அவனது அப்பாவி நண்பனை திரும்பி பார்த்தான். அலெக்ஸ் சிறிது நடுக்கத்தோடு Steve -வை பார்த்து பைத்தியக்காரத் தனமான கேள்வியை கேட்டான்.
"Mr.patrik?"
" yes , welcome to SUperMoach Age "
டாரோ தன் காதில் கேட்டதை மீண்டும் ஒருமுறை சொல்லிப் பார்த்தான்....

" SUpermoach"

கபாடம்Where stories live. Discover now