கல்லூரி - 3

814 47 190
                                    

This story is translated by Rashmiroy

This chapter is dedicated to SAMMI_RAPHAEL

*****

சந்தோஷத்தில் பறப்பதை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இப்பொழுது தன் நேரில் பார்க்கிறேன்.

எதற்காக இப்படி சந்தோஷ படுகிறான் ?

அவள் அவனை பார்க்க கூட இல்லையே?

அவள் மூச்சு காற்றில் எதாவது இருந்திருக்குமோ?

சந்தோஷத்தில் நடக்காமல் குதித்து கொண்டே வந்தான். கணேஷினால் சிரிப்பை கட்டுபடுத்த முடியவில்லை.

"சாம், ஏன்  'வாங்க நண்பர்களே எல்லாரும் ஒன்ன போலாம்' என்று பாடும் டோரா புஜ்ஜி மாதிரி தாவி தாவி போற. ஒழுங்கா நடங்க ஜி "

சாமுவேல்க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எப்படி இந்த பெண்கள் எதுவுமே செய்யாமல் பசங்களை பைத்தியம் ஆக்கிடறாங்க?

அவன் கணேஷிடம் " ஜி நீங்க கூப்பிடும் பொது என்னடா இவன் ராத்திரி போய் திருடன் மாதிரி நடக்க சொல்லுறானேன்னு நினைத்தேன். அதனால் தானே அவளை பார்க்க முடிந்தது "

நாங்கள் விடுதிற்குள் வந்ததும், வரவேற்பறையில் கூட்டமாக இருந்தது. அங்கே மாணவர்களின் எண்ணிகையை கணக்கிட்டு கொண்டிருந்தார்கள்.

விடுதி காப்பாளர் பேச ஆரம்பித்தார். " அனைவரும் வந்தாயிற்றா, சாப்பாடு எப்படி இருந்தது " நாங்கள் அனைவரும் நன்றாக இருந்தது என்று தலை ஆட்டினோம்.

" இனிமேல் தினமும் இங்கே வந்துவிட வேண்டும். உங்களுடைய வருகையை எங்களுக்கு அறிவித்து விட்டு , அவரவர் அறைக்கு செல்லவேண்டும். 6:30 P.M to 7:30 P.M உங்களுக்கு படிப்பிற்கான நேரம். அறையின் கதவுகளை சாத்த கூடாது. அதற்கடுத்து இரவு சாப்பாட்டிற்கான நேரம். 8:30 to 10:30 அடுத்த இரண்டு மணி நேரமும் உங்களுக்கு படிப்பிற்கான நேரம். காலை  7:30 A.M மணிக்கெல்லாம் சாப்பிட வந்து விடவேண்டும்."

அனைவரும் அறைக்கு வந்தோம். வந்ததும் கணேஷ் ஒரு பெரிய மெத்தையை எடுத்து விரித்தான். அவன் அருகில் சாமுவேலும் படுத்தான்.

என் கல்லூரி வாழ்க்கைWhere stories live. Discover now