என் அதிகாலை நேரம்

61 5 2
                                    


அதி காலை நேரம்
எங்கள் சாலை ஓரம்,

குப்பைச் செடிகளின் அழகிய பூந்தோட்டம்,
குட்டை அணில்களின் குதூகல ஓட்டம்;

மலர்களில் வட்டமிடும் வண்ணத்துப்பூச்சி,
உடலெங்கும் தீட்டிய வானவில்லின் பூச்சு;

"குக்கூ" எனக் கூவும் குயிலோசைக் கேட்டு,
"கிக்கீ" எனப் பகரும் சிறு கிள்ளைப் பேச்சு;

அரிதாரம் பூசாத இயற்கையின் படைப்பு,
அதை ரசிக்க நமக்கேன் இத்தனை சலிப்பு;

அலங்காரம் செய்தோரின் அகங்கார நடிப்பு,
அவர்கட்கு மட்டுமேன் இத்தனை மதிப்பு!

My Tamil Poems               #என்னுள் உதிர்ந்த வார்த்தைகள் Where stories live. Discover now