விசாரணை

842 112 111
                                    

 ஸ்டோன் கோல்டு செல்வா கண் விழித்த பொழுது, அவன் தலை இன்னும் கிர்ர்ர் என சுத்தியது. கடைசியாக அந்த காபி சாப்பில் இருந்து வரும் வழியில் அந்த போலீஸ் அதிகாரி இவன் புற மண்டையில் ஓங்கி அடித்தது தான் நினைவிருந்தது. இப்போது சுத்தி பார்த்தால் எல்லாம் மாறி போயிருந்தது , ஏதோ வீட்டில் இருப்பதை உணர்ந்தான்.. அந்த மோப்பம் பிடித்த போலீஸ் நின்று கொண்டிருந்தான், அவன் அருகில் நிழல்கள் ரவி போல ஒருவன் அவன் தோற்றமும் உருவமும் இவனும் போலீஸ் ஆக தான் இருக்க வேண்டுமென உணர்த்தியது. பக்கத்தில் சொட்டை தலையுடன் நெற்றியில் சந்தனமுமாக ஒரு சாமி போலீஸ். இவரகள் பின்னணியில் சில அப்ரசண்டி போலீசுகள் , அனைவரின் கண்களும் இவனையே கண்கொத்தி பாம்பாக பார்த்த வண்ணம் இருந்தன. பக்கத்தில் சிறிய முனகல் குரல் கேட்க திரும்பி பார்த்தான் அங்கே ஜட்டியுடன் ஒரு உருவம். அதன் முகம் இவனுக்கு ரொம்ப பரீட்சயமானது தான். சற்று நெருங்கி அந்த முகத்தை பார்த்தவன், முகம் தெளிந்தான், " அண்ணே நீ எப்புடினே இங்க.."

மித்ரனின் நண்பன் பயந்தவாறே தான் பேசினான், " நான் வந்து ரெண்டு நாள் ஆச்சு , உன் அண்ணன் கூட சேர்ந்த பாவம். என் நிலமைய பாத்தியா.." தன உடலின் கோரைகளை காட்டினான்.

" அன்னைக்கு பாத்த மாதிரி அப்பிடியே இருக்கியே.. பாடிய நல்லா மெயிண்டயின் பன்னிருக்க  போல.. " அசட்டு தனமாய் சிரித்தான்  செல்வா.   

மித்ரனின் நண்பன் கோபத்தில் முறைக்க," என்னனே அப்டி பாக்குற.. எவ்ளோ நாள் ஆச்சு உனைய பாத்து.. வீட்ல  அக்காலாம் நல்லா இருக்காங்களா..? "

இதை கண்டு பொறுமையிழந்த நாராயணன்,

" என்ன கல்யாண வீடுக்காடா வந்துருகிங்க.. நலம் விசாரிசிட்டிருகீங்க.." 

அப்போது தான் கடத்தப்பட்டது நினைவு வர, முகத்தை கொஞ்சம் சீரியசாக மாற்றினான் செல்வா.

" எதுக்கு சார் என்ன கூட்டிட்டு வந்துருக்கீங்க, இன்ஸ்பெக்டர் பையன ஏமாத்தி பத்து ரூபா வாங்குனேன் .. உண்மை தான், அதுக்காக இப்படியா..? " அலுத்துக் கொண்டான்.

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now