பாகம் 19

6.5K 241 82
                                    

ப்ளீஸ் சொல்லுங்க ..அத்தான்..

இங்க பாரு மகதி.. இப்ப அதப் பத்தி பேச வேணா.. நீ போய் ரெஸ்ட் எடு..

சரி விடுங்க.. ஆனால் நீங்க ஏன் கல்யாணப் பேச்செடுத்தா அப்செட் ஆகறீங்க.. என்னைப் பிடிக்காததால..

லூசு.. ஏன் இந்த மாறிலாம் பேசற.. நான் உன்ன பொறந்ததிலிருந்து பார்க்கறேன்.. எனக்கு நீ எப்பவும் அந்த கட்டவிரல வாய்ல வெச்சிட்டு பலூன் ஊதிக் கொடு அர்ஜு னு சொல்ற குட்டிப்பாப்பாவா தான் தெரியற.. நீ என்னோட குழந்தம்மா.. உன்னப் போய் என்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னா நான் எப்படி கோவப்படாம இருக்க முடியும்..

நான் என்னைக் கேக்க வரனு உங்களுக்கு புரியவே இல்லையா..எங்கிட்ட எதையும் மறைக்கனும்னு நினைக்காதிங்க..நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் . .. சொல்லுங்க அத்தான்..

உன்னோட பிரச்சனையே மணல் லாரி வெச்சு அள்ளுற அளவு இருக்கு.. நீ எனக்கு ஹெல்ப் பண்றியா..நான் சொன்னா கேப்பதானா.. போ.. எதும் பேசாம.. சாப்பிட்டு வா..

இப்ப உங்க பிரச்சினை தீர்ந்தா தான் என் பிரச்சினையும் தீரும் என வாய்க்குள்ளே முனுமுனுத்தாள்..

என்ன சொன்ன..கேக்கல.. சத்தமா சொல்லு..என்றான் அர்ஜூன் ..

நீங்க மட்டும் நான் கேட்டதுக்கு எதாவது பதில் சொன்னிங்களா.. நீங்களே உங்க வாய் திறந்து எல்லா உண்மையும் சொல்ற வரைக்கும் இந்த மகதி உங்களோட பேச மாட்டாள்.. போங்க பரு என் மேல கோவமா இருக்கு.. எனக்காக போய் சப்போர்ட் பண்ற வேலைய பாருங்க.. என்றாள் மென்னகையுடன்..

உனக்கெலாம் அந்த பையன் தான் சரிப்பட்டு வருவான்.. என்னா அடி.. னு சொல்லிட்டே உள்ள போய்டான்..

இதுவரை சிரித்துக் கொண்டிருந்த மகதியின் முகம் இறுகியது..

' பாலா சரியான சுயநலக்காரன்.. தன் தம்பி லைப் செட்டில் ஆனவுடனே.. அத்தான ஒரு கேள்வி கூட கேக்காமல் அப்படியே போய்டானே..இதுல என்னை விரும்பறேனு பொய் வேற..அப்பா வந்து என்ன கேள்வி கேப்பார்னே தெரியல.. இப்படி மாட்டி விட்டுட்டு போய்டாரே...'

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang