பாகம் 30

6.5K 214 60
                                    

ம்ம் சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு டைம் இல்ல.. என சலித்துக் கொண்டே சொன்னாள்..

இப்ப உனக்கு என்ன தான் மகதி பிரச்சனை.. அப்டி உன்ன நான் என்ன பண்ணிட்டேன்.. என அவள் கையைப் பிடித்து உலுக்கினான் கோவமாக..

கைய எடுங்க.. வலிக்குது.. ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க.. நீங்க நினைக்கிற மாறி தான் இப்ப நடக்குது.. அப்ரோம் என்னை ஏன் தொல்ல பண்றீங்க.

நான் உனக்கு தொந்தரவா

ஆமா.உங்க தம்பிக்கு பண்றதுக்கு பேரு தொந்திரவு இல்லையா.. ச்சே உங்கள நினைச்சாலே கடுப்பாகுது.. என முகத்தைத் திருப்பிக் கொண்டு சொன்னாள்..

சரி நீ சந்தோசமா இருக்க என்ன பண்ணனும் .. அத மொதல்ல சொல்லு..

அதான் என் வாழ்க்கையவே அழிச்சிட்டிங்களே.. இப்ப உங்களுக்கு நிம்மதியா..

நீயேன் ஃபீல் பண்ற.. இப்ப உங்க அத்தானோட உனக்கு கல்யாணம் ஆகனும் அப்டி தான.. நான் போயிட்டா நீ நினைச்சுது நடந்திரும்.. அதேமாறி கிருஷும் சுஜியும் சேர்ந்திடுவாங்க.. ஒரே கல்லுள்ள மூனு மாங்கா.. என்ஜாய் மகதி..என்றான்

அவன் இவ்வாறு கூறவும் பயந்து போய் " ஏன் நீங்க தப்பாவே புரிஞ்சிக்கிறீங்க..நம்ம நிச்சயம் நடந்தா கிருஷ் சுஜி கண்டிப்பா வருவாங்க.. அப்ப அர்ஜூன் அத்தான பார்த்து பிரச்சனையாகிடும்னு தான் இத நிறுத்த நினைச்சேன்.. ஆனா நீங்க அத்தானோட சுஜிய சேர்த்து வைக்கறீங்கனு சொல்றீங்க.. உங்க தம்பிய விட அத்தான் ரொம்ப முக்கியமானவங்களா.. அதே மாறி நீங்க ரொம்ப அறிவாளியா இருக்கலாம்.. நான் என்ன சுத்தி என்ன நடக்குதுனு புரிஞ்சிக்காம முட்டாளாவே இருக்கலாம்.. அதனால் தான் நீங்க என்ன காதலிக்கிறீங்களா இல்ல நடிக்கிறீங்களானு கூட இன்னும் தெரிஞ்சுக்க முடியாம பொய்யாக்கூட சந்தோசப்பட முடியாம ஒவ்வொரு நிமிசமும் செத்துட்டு இருக்கேன்..

உங்களுக்கு நான் எந்த வகையிலும் தகுதியானவ இல்லனு எனக்கே தெரியும் .. அதுனால என் மனச நானே தேத்திக்குவேன்..எங்க அப்பா மனச காயப்படுத்தாம எதா இருந்தாலும் பண்ணுங்க.. அவர் இப்ப உங்க மேல நிறைய நம்பிக்கை வெச்சிட்டாரு.. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்.. ஒரு பொண்ணோட மனசுல என்ன இருக்குனு தெரியாம அவளோட உணர்வுகளோட விளையாடாதிங்க..
இத நான் எனக்காக மட்டும் சொல்லல சுஜிக்காகவும் தான்.. நான் பேசறத பேசிட்டேன்.. இனி உங்க இஷ்டம்..என்றாள் கண்ணீரோடு..

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)Where stories live. Discover now