7

5K 151 10
                                    

மாணிக்கம் கார்த்தியை கண்டித்தார். நீ பொறுப்பு ஏற்காததால் கீர்த்தி இந்த நிலையில் இருக்கிறாள்.

"மாமா நான் என்ன. செய்யட்டும் என் சூழ்நிலை அப்படி. எனக்கு மட்டும் கீர்த்தி மேல அக்கறை இல்லையா.  இந்த வீட்டு கடன் அடைச்சி  கீர்த்திய கல்யாணம் பண்ணிதர்ர பொறுப்பு  எனக்கிருக்கு."

."என்னவோடா உங்க அப்பா  ஒழுங்கா பணத்தை சேர்த்து வைச்சிருக்கலாம்.  எல்லாத்தையும் கொண்டு போய் தங்கச்சிக்கு சீர் செய்யறதுக்கே செலவு  பண்ணுணாரு.இப்ப அவர் பிள்ளைங்களுக்கு ஒண்ணுண்ணா என்ன ஏதுன்னு கூட கேட்க மாட்டேங்கறாங்க ".

"இல்ல மாமா அன்னிக்கு உங்ககிட்ட பணம் கேட்டனே அப்போ கண்ணண் தான் ஹெல்ப் பண்ணாண்.அதனால கூட கீர்த்தி அவங்ககிட்ட ஹெல்ப் கேட்காம இருந்திருப்பா. நான் இப்ப என் பொறுப்புல இருந்து நான் விலகி யிருக்கலாம். ஆனா என் தங்கச்சி கல்யாணத்தில நான் அப்பாவா அண்ணணா என் கடமைய நிறைவேற்றுவேண்.
"
மாணிக்கம் தன் மருமகனை நினைத்து பெருமை  கொண்டார். கீர்த்தி பி.எஸ்.சி முடித்து எம்.எஸ்.சி சேர்ந்தாள். பி.எஸ்.சியில் கோல்ட் மெடல் வாங்கினாள்.

அவளது பெருமை உணர்ந்த கல்லூரி முதல்வர் தனது மகனுக்கு அவளை பெண் கேட்டார்.  அவள் படிப்பு முடிய வேண்டும் என்றாள்.

ஆனால் ராணி அவளுக்கு  வரும் நல்ல வாழ்க்கையை இழக்க விரும்ப வில்லை. கார்த்தியும் சம்மதித்தான்.

இதுவரை சேர்த்து வைத்த சேமிப்பு முழுவதையும் செலவு செய்தான். எல்லாம் சரியாக சென்றால் கடவுளை நினைக்க மாட்டோமா என்று கடவுள் ட்விஸ்ட் செய்து விடுகிறார் போல.

மாணிக்கம்  கீர்த்தி யை நினைத்து பெருங்கவலை கொண்டார்.

நிகழ் காலத்திற்கு வந்த அவர் நடந்ததை கார்த்தியிடம் கூறினார்.
கார்த்தியால் தாங்கி கொள்ள முடிய வில்லை.

"மாமா ஏன் இப்படி நடக்குது. கீர்த்தியோட வாழ்க்கை என்னால தான் ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு குழப்பம் வருது. இப்ப கூட அவ கல்யாணம் வேண்டாம் நான் படிக்கணும்னு சொன்னா, நான் தான் நல்ல சம்பந்தம் விட்டு போக கூடாதுனு அவள போர்ஸ் பண்ணேண். இப்ப நான் எந்த முகத்தை வச்சிக்கிட்டு அவள போய் பார்ப்பேன். "

மாணிக்கம் "ஒருத்தர் நினைச்சா இந்த கல்யாணம் நடக்கும் "
"யார் மாமா அது   சொல்லுங்க. யாரா யிருந்தாலும் நான் கால்ல விழுந்தாவது இந்த கல்யாணத்த நடத்தனும் ".
"நீ நிஜமாவே கால்ல விழுந்து தான் ஆகனும். ".
"யார் மாமா அது ".

"கண்ணண் "

அவளும் நானும்Where stories live. Discover now