தோழி

33 5 4
                                    

தோழி

தோழி! எனும் இரண்டெழுத்தில் மழலையாய் தொடங்கி பருவம் தொட்ட காலம் வரையிலுமே!

தாய், தந்தை, ஆசான், தோழன் என அனைத்து உறவுகளாகவும் விளங்கியவள் அவள்.

அவள் கரங்களை பற்றி நடக்கையிலே என் மனதிற்குள் முடிவற்ற கடலாய் இருக்கும் கவலைகள் யாவும் வறண்ட பாலைவனமாக பறந்தோடும்

மழலை பருவத்தில் அவளோடு கிரிக்கெட் மட்டை பிடித்து விளையாடியது,

சின்ன சின்னதாக இட்ட குறும்புச் சண்டைகள்

அடம் பிடித்து வாங்கிய குச்சி ஐஸை தின்னும் போது பள்ளியின் சீருடையை ஐஸின் வண்ணத்திற்கே மாற்றியது

பக்கத்து வீட்டுக்காரனின் தோட்டத்தில் பதுங்கி, பதுங்கி மாங்காய் அடித்து தின்றது

என ஒவ்வொரு நிகழ்வுகளும் அவளின் நினைவு வரும் போதெல்லாம் என்தன் கண்முணே திரையிட்டுக் காட்டப்படுகிறது.

தோழிWhere stories live. Discover now