காதலின் மௌனம் 2

7K 188 27
                                    

கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு,அவன் தனக்கு அந்த ஜிமிக்கி வாங்கிய நிகழ்வு நியாபகம் வர,அவள் கண்களில் இருந்து நீர் வழிந்தது....

அன்று...

(கல்லூரியில் ஒரே வகுப்பில் பயின்ற,சனாவும் தீபக்கும் நல்ல நண்பர்களாகவே தொடக்கத்தில் பழகி வந்தனர்....

சனாவை தோழியாக மட்டும் பார்க்க முடியாததை உணர்ந்த தீபக்,சில மாதங்கள் பொறுத்தபின் அவளிடம் தன் விருப்பத்தை மிகவும் நேர்த்தியாக சொன்னான்...

அதிலே சற்று தடுமாறியவள்,சில மாதங்களுக்கு பிறகே அவனுக்கு சம்மதம் தெரிவித்தால்...

அதன் பின் அவர்கள் நண்பர்கள் வட்டத்தில் அனைவரும் ரசிக்கும் ஒரு காதலர்களாகவே இருந்தனர்....வாரத்தில் நான்கு சண்டை,ஆயிரம் சமாதானங்கள் என காதலர்களுக்கு உண்டான அழகிய ஊடல்கள் அவர்களின் காதலை மேலும் ஆழமானதாகவும் அழகானதாகவும் மாற்றியது)

(அன்று😂)

ஏய் எங்கதாட இருக்க,நான் மால்க்கு வந்து பத்து நிமிஷம் ஆகுது!!என கத்திய சனாவை கொஞ்சம் பின்னாடி பாருங்க மேடம் என்றவாறு பின் புறம் இருந்து தோள்களை தட்டினான் தீபக்..

அவனை சிறிது நேரம் முறைத்தவள்...இதுதா வர நேரமா என இடுப்பில் கை வைத்தப்படி கேட்ட...இப்பொழுது முறைக்கும் முறை அவனுடையது ஆனது...லாஷ்ட் டைம் மேடம் எவ்வளோ நேரம் லேட்டா வந்தீங்க??

ஹா!ஏன் வெட்டி கதை பேசிட்டு....வா நம்ம ஷாபிங் ஸ்டார்ட் பண்ணலாம் என அவனை இழுத்து சென்றவள்,ஓர் இடத்தில் அவனை நிறுத்தி...ஏய் ஒரு ஐடியா எனக் கண்கள் விரிய கூறினாள்...

அது என்ன??

நம்மலே நமக்கு ஐடம்ஸ் செலக்ட் பண்ணுறதுனாலதா ஷாபிங் போர் அடிக்குது...ஸோ 1மணி நேரம் டைம் எடுத்துகலாம் நீ எனக்காக எதாவது பர்சேஷ் பண்ணு,நான் உனக்கு பண்ற...இதை வெச்சு நம்ம இன்னொருத்தவங்களோட டேஷ்ட எந்த அளவுக்கு புரிஞ்சி வெச்சிருக்கோனு பாக்கலாம்....எனக் கூறி முடித்தால்

அப்பா!நல்ல முடிவு இன்னைக்காவது நிம்மதியா ஷாபிங் பண்ணலாம் என்றவன் ஆஆ என கத்தியவாறு அவள் கிள்ளிய இடத்தை தேய்த்துக் கொண்டான்...

ராட்சசி!!என அவளை முறைத்தான்...

அவள் திடீரென ஓ மய் காட்!!அது என் வெவரட் சீரியல் ஈரோதான...நான் போய் செல்ஃபி எடுத்துட்டு வர...என குதுத்தோட தீபக் அவள் கையை வளைத்து பிடித்தான்..

வழிதுடி தொடச்சிக்கோ...செல்ஃபி கில்ஃபினு அவன் பக்கத்துல போன கொன்றுவ,ஷாபிங் பண்ணதான வந்தோ போய் அதை பாரு...என அவன் மிரட்ட

உதடை சுளித்தபடி அந்த கதாநாயகனை பார்த்து ஒரு ஏக்க பெருமூச்சிவிட்டு,தீபக்கிற்காக ஷாபிங் செய்ய அங்கிருந்து நகர்ந்தாள்

அவள் சைகையை சிரித்தபடி ரசித்துக் கொண்டிருந்தவன்,அந்த கதாநாயகனை எரிக்கும் பார்வையில் பார்த்து விட்டு சென்றான்

தீபக் ஒரு மணி நேரத்தில் ஷாபிங் முடித்து அவள் சொன்ன பன் வல்ட்டிற்கு வந்தான்...

அரை மணி நேரம் தாமதமாகவே சனா அங்கு வந்தாள்...அவளின் இந்த பழக்கம் அவனுக்கு பழகி விட்டதால் அவன் அதைப் பற்றி ஏதும் கேட்டுக் கொள்ளாமல் என்னமா சீக்கிரம் வந்துட்டீங்க என நக்கலாக கேட்டான்...

இது எனக்கு சீக்கிரம்தா என்றவள் ஆர்வமாக எனக்கு என்ன பர்சேஷ் பண்ண எனக் கேட்டால்

நீ முதல்ல சொல்லு என அவன் கூற

தன் கையில் உள்ள பையில் இருந்து அவள் வாங்கியதை காண்பித்தால்...

அதை பார்த்தவன் பற்களை கடித்தப்படி தலையில் அடித்துக் கொண்டான்...

இதழின் மௌனம்(completed√)Where stories live. Discover now