15

3.5K 204 75
                                    

சங்கீதா ப்ரியாவை அழைத்துக்கொண்டு வர அர்விந்த் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தான் .சங்கீதா நிஷாவுடன் பின் சீட்டில் அமர்ந்தாள்.ப்ரியா சங்கோஜத்துடன் அர்விந்துடன் முன்னாள் அமர்ந்தாள்.ப்ரியா இப்படி தடுமாறுவதை அவதானித்த சங்கீதா குறும்புடன் " ஏய் என்னடி ஏதோ புதுப்பொண்ணு மாப்பிள்ளை பக்கத்துல உட்கார்ர மாதிரி இருக்க.கூலா இருடி" என்றவளை 

"கொஞ்ச நேரம் வாய முடிக்கிட்டு வாரியா "என்று கடுகடுத்தான் அரவிந்த்.

அதற்கு அவள் சலைக்காமல் "அப்டியா சார்.சரி சார்.சாரி சார்.போடாங்க்க்க்..." என்று நக்கலாக் கூறிவிட்டு "நீங்க வாங்கம்மா நாம பேசுவம் "என்று நிஷாவுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.அர்விந்தையும் ப்ரியாவையும் மேலும் கலாய்க்க என்னி சங்கீதா

"அம்முக்குட்டி என்ன செய்றீங்க.நைட் நீங்க யாரு கூட தூங்கினீங்க.உங்க அப்பா சொன்னாரே நீங்க கம்பர்டப்பிள் இல்லன்னா தூங்கமாட்டீங்க என்று,ஆனா நீங்க உங்க ஆண்ட்ட்ட்.."என்று இழுத்து ஆண்டி என்று கூறாமல்

"உங்க அப்பாவோடா ஆளு,சாரி ப்ரெண்ட் கூட தூங்கினீங்களா.அவங்களும் உங்கள யார்கிட்டயும் கொடுக்காம அந்த கை வலியோடயும் உங்கள வெச்சுக்கிட்டாங்கலே.நைட் உங்களுக்கு அம்மா ஞாபகம் வந்துட்டா "என்றவளிடம் நிஷா "மாம் ம்மா மா ப்ப்பூ" வாயில் எச்சில் வடிய பேசிக்கொண்டே இருந்தால்.இதைக் கண்ட அர்விந்த் மேலும் கடுப்பாவி

"சங்கீதா கேன் யூ ப்ளீஸ் சட் அப்" என்றான்.

அவள் அதற்கு சளைக்காமல் "ஆமா எதுக்கு இப்போ நீ எங்கூட எகிர்ர.குழந்தைதானே அம்மான்னு சொல்லுது,அதுவும் யாரையும் குறிப்பிட்டு சொல்லாம சும்மா என்கூட பேசுது.இதுல உனக்கென்ன பிரச்சினை.நீ உன் வாய மூடிகிட்டி வண்டிய ஓட்டு சரியா.வந்துட்டாரு பெரிய இவரு மாதிரி" என்றாள்.

இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வாரிக்கொள்வதை ப்ரியா அமைதியாக பார்ர்துகொண்டு வந்தாள்.

"ப்ரியா ,அப்பாவும் ஊர்ல இல்ல.நீ எப்டி தனியா மெனேஜ் பன்னுவ.காயம் வேற வலது கைல.என்ன பன்ன போற.பேசாம என் வீட்ட வந்துடு "என்றாள் சங்கீதா.

ப்ரியாவோ "இல்லடி நான் மெனேஜ் பன்னிக்குவேன்..."என்று இழுத்தவளை

சங்கீதா மனதுக்குள் எருமை மாடு என் வீட்டுக்கு வா ப்ரியா,நான் உன்ன கைல வெச்சு தாங்குறன்னு சொல்ரானா பாரு.அட்லீஸ்ட் அம்மா இருக்காங்க அவங்க பார்த்துக்குவாங்க என்றாச்சும் சொல்ரானா மரமண்டை.இதெல்லாம் லவ் பன்னி என்னத்த கிழிக்க.நல்ல வேலை மைதிலி போய் சேர்ந்துட்டா என்று என்னியவள்

"ஏன் அர்விந்த் நீ வேனும்னா உன் அம்மாவ ப்ரியாகூட இரண்டு நாளைக்கு இருக்க சொல்லுடா .அவ பாவம்தானே.இந்த நிலமைல தனியா ஒரு வேலையும் அவளால பார்க்க முடியாது.நீ நிஷாவ தனியா பார்த்துப்ப தானே.இல்லன்னா......."

"எனக்கு ஓக்கேதான்.ஆனா ப்ரியாக்கு..." அர்விந்த்

"என்ன ப்ரியாக்கு..அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்ல.அப்படித்தானே ப்ரியா" என்றதற்கு ஏதோ யோசனையில் இருந்த ப்ரியா "ஹ்ம்ம்" என்றாள்.

உடனே சங்கீதா "பாரு அவளே ஒக்கே சொல்லிட்டா" என்றதற்கு ப்ரியா நினைவிற்கு வந்தவளாக "எதுக்கு ஒக்கே சொன்னேன்"என்றாள்.

"ஆஹ் சுரக்காய்க்கு உப்பில்லயாம்.அதான் உப்பு வாங்கலாமான்னு கேட்டன்.நீ ஹ்ம்ம் என்று சொன்ன" என்றால் சங்கீதா எரிச்சலுடன்.

சங்கீதாவின் ஆலோசனைக்கு அமைய ப்ரியாவின் வீடு செல்லாமல் அர்விந்தின் வீடு செல்ல ப்ரியாவோ

"நாம ஏன் என்வீட்ட போகாம அர்விந்த் வீட்ட போறம் "என்றவளை சங்கீதா

"ப்ரியா சும்மா அடம் பிடிக்காத.அர்விந்த் அம்மா இரண்டு நாளைக்கு உன்கூட இருக்கட்டும்.உன் அப்பா வந்ததும் அவங்க இங்க வரட்டும்.அது வர அர்விந்த் நிஷாவ பார்த்துப்பான் சரியா." என்றவளை

"எதுக்கு வீனா அம்மாக்கு கஷ்டம் கொடுக்கனும் .நான் சமாளிச்சுக்குவேன் "என்ற ப்ரியாவை சங்கீதா மனதுக்குள் ,,அவன் ஒரு எருமைன்னா இது ஒரு தத்தி.இதுங்க ரெண்டையும் சேர்த்து வைக்க நான் என்னல்லாம் பாடு படனுமோ என்று என்னினாள்.

"ப்ளீஸ் ப்ரியா அடம் பிடிக்காத.உன்னால தனியா எதுவும் செய்ய முடியாது.நான் வந்து உன்கூட தங்கிக்குவேன்.ஆனா என் மாமனாரும் சுரேசும் பாவம்.அதான்.அர்விந்த் அம்மா தெரியாதவங்களா என்ன.ரம்யாவுக்கு அவங்களும் அம்மா மாதிரிதானே.சோ உனக்கும் அம்மாதான். சும்மா போட்டு மனச குழப்பிக்காம நான் சொல்ரத கேளு "என்றாள்.

ப்ரியாவும் மறுத்து பேசாமல் மவுனமாக இருந்தாள்.மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்ற நிலைப்பாடு மாற முன் அர்விந்த் வீட்டின் முன் ப்ரியாவின் கார் நின்றது.

என் உயிரினில் நீWhere stories live. Discover now