🌸13🌸

1.5K 51 9
                                    

காவ்யா.... என்ன பண்ணிட்டு இருக்க?

அம்மா.... இதோ கிளம்பிட்டேன்... லன்ச் பேக் எங்க?

அங்கே டேபில்ல வச்சுருக்கேன்...  எடுத்துட்டு போ... என்றபடி உள்ளிருந்து குறல் கொடுத்தாள் நிர்மலா...

டேபில் மேல் இருந்த லன்ச் பேக்கை எடுத்தவள்... தன் அன்னையிடம் இருந்து விடைபெற்று வெளியே வந்து பள்ளி பேருந்துக்காக வாசலில் நின்றாள்... அப்போது தன் பேரைச் சொல்லி தாத்தா அழைக்கும் குறல் கேட்டது... பேருந்து வர சிறிது நேரம் இருந்ததால் தன் தாத்தாவிடம் ஓடியவள் அவர் அருகில் அமர்ந்தாள்...

என்னடா கிளம்பிட்டயா??

ம்ம்.. தாத்தா... இன்னைக்கு ஸ்கூல்ல டான்ஸ் பிராக்டீஸ் இருக்கு.... இன்னும் இரண்டு வாரத்தல ஆனுவல் டே வருதுல... அதுல நான் ஆடுறேன்... நீங்க கண்டிப்பா வரனும்....

ம்ம் சரி... நான் இருந்தா வர்றேன்... நம்ம வீட்லயே நீதான் நல்லா படிப்ப... நீ நல்லா படிச்சு பெரிய ஆளாகனும்... சரியா..... என்று அவர் கூற...

அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்று அறியாத அந்த பதினொன்று வயது குழந்தை தலையை ஆட்டிவிட்டு பேருந்து வந்ததும் தாத்தாவிடம் விடைபெற்று ஓடியது...

காவ்யா சென்றதும் மாணிக்கம் வர அவனுக்கு காலை உணவை பரிமாறிய நிர்மலா.. தானும் உண்டுமுடிக்கவும்... பாட்டியின் குறல் நிர்மலா நிர்மலா என்று உரக்க ஒலிக்கவும் சரியாக இருந்தது....

என்ன பாட்டி என்று கேட்டபடியே வேகமாக வந்த நிர்மலா கண்டது.... படுக்கையில் பேச்சுமூச்சற்று கிடந்த தன் தாத்தாவையும் அருகில் கண்ணீர் வடித்தபடி அமர்ந்த தன் பாட்டியையுமே.... அதை கண்ட நிர்மலா ஸ்தம்பித்து நின்றது ஒரு கனமே.. அடுத்த நிமிடம்.. தாத்தாவின் மார்பில் கை வைத்து அழுத்த ஆரம்பித்தாள்.... நிர்மலாவை தொடர்ந்து தன் அத்தையின் குறலில் அமுதாவும் விஜியும் பின்னால் வர... தன் மாமாவின் நிலையை பார்த்த அமுதா மாணிக்கத்திடம் செல்ல ஓட... விஜி கேசவனை தேடி ஓடினாள்....

அவள் ஒரு தொடர்கதைDonde viven las historias. Descúbrelo ahora