💞பகுதி-9💞

2K 83 31
                                    

       கோபமாக தன் ஸ்கூட்டியில் எங்கே செல்கிறோம் என்று கூட உணராமல் சென்று கொண்டிருந்த அஞ்சலி ,ஒரு வளைவில் ஸ்கூட்டியை திருப்ப எதிர்பாரால் எதிரில் வந்து காரின் மீது மோதி சரிந்தாள்...........

       தான் யார் மீதோ மோதி விட்டோம் என்ற பதற்றத்தில் காரின் உள்ளிருந்து  வெளிவந்தவன்,ஓடி வந்து அங்கு கீழே விழுந்து கிடந்தவளை ஒரு முறை பார்த்து விட்டு தன் காரை ஆராயத் துவங்கினான் . காரின் மறுபுறமிருந்து வந்தவன்,"மச்சான் ஆதி..... காருக்கு ஏதாச்சும் ஆயிடுச்சா டா..கடவுளே காருக்கு மட்டும் எதுவும் ஆகாம பாத்துக்கோங்க"என்று
வேண்டிக்கொண்டிருக்க, அவன் வேண்டுதலைக் களைக்கும் விதமாக "உன் வேண்டுதல் பலிக்காது மச்சான்"என்று ஆதி  கூறியதைக் கேட்டு கோபமுற்றவன்.."என்னடா பிரச்சனை உனக்கு. ஏன் இப்படி அபசகுனமா பேசுர" என்க ஆதி... "அங்க பாருடா மச்சான் நம்ம கார்ல ஸ்ராட்ச் விழுந்திடிச்சு" என்று காரின் மீதிருந்த சிறு ஸ்ராட்சை ஏதோ பெரிதாய்  ஸ்ராட்ச் விழுந்தைப் போல் மிகைப்படுத்தி கூறிக்கொண்டிருந்தவனுக்கு ஜால்ரா அடித்தார் போல்,"ஆமா மச்சான் என்னா பெரிய ஸ்ராட்ச்..போச்சு என் அப்பா என்னை சும்மா விடமாட்டாரு" என்று புலம்ப ,"இதுக்கெல்லாம் காரணம் அந்த பொண்ணு...எங்க அவ...அவ பாட்டுக்கு வந்து நம்ம கார்ல மோதிட்டா..அவள சும்மா விடக்கூடாது"என்ற ஆதி... அப்பொழுது  தான் அஞ்சலியின் நினைவு வந்து அவளை தேடினான்.கீழே விழுந்து கிடந்த அஞ்சலியைக் கண்ட ஆதி.. "ஓய் உனக்கு கண்ணு தெரியுமா தெரியாதா இப்படியா உன் இஷ்டத்துக்கு பராக்கு பார்த்திட்டு வண்டி ஓட்டுறது"என்று கோபமாக கேட்டான்.

         காரில் மோதியதும் கீழே விழுந்தவளின் கையில் அடிபட்டு விட, வலியை பொருத்துக்கொண்டு எழும்ப முற்பட்ட நேரம் ஆதியும் அவனது நண்பனும் செய்த சேட்டைகளைக் கண்ட அஞ்சலி மனதிற்குள்,"என்னதான் நடக்குது இங்க. அடிபட்டது எனக்கு ஆனா இவனுங்க என்னடானா கார் க்கு ஏதாவது ஆயிடுச்சான்னு பார்த்துட்டு இருக்குறாங்க. ஹிம் உயிருள்ள மனுஷன விட உயிரில்லாத அந்த காருக்கு முக்கியத்துவம் குடுக்குறாங்க. இடியட்ஸ்..... ஒருவேள லூசுங்களா இருக்குமோ...மென்டல் ஹாஸ்பிட்டல் ல இருந்து தப்பித்து வந்திட்டாங்களோ.ஆனா போட்டிருக்க டிரஸ்ஸ பார்த்தா அப்படி தெரியலையே" என்று பாதி யோசித்தும் பாதி திட்டியும் கொண்டிருந்தவளை ஆதி யின் குரல் தடுத்தது.  அவன்.."ஓய்... கண்ணு தான் பியூஸ் போச்சுன்னு நினைச்சேன் ஆனா காதும் அவுட் போல" என்றவனின் வார்த்தைகளைக் கேட்டு சுயநினைவுக்கு வந்தவள் கோபமாக "ஹலோ மிஸ்டர் மைண்ட் யுவர் வர்ட்ஸ். யார பார்த்து காது கேட்காதவன்னு சொன்னீங்க என்ன பார்த்தா உங்களுக்கு காது கேட்காதவ மாதிரி யா இருக்கு" என்றவளிடம் "அப் கோர்ஸ் யா உன்ன பார்த்து தான் காது கேட்காதவன்னு சொன்னேன். பின்ன நானும் உன்ன கொஞ்ச நேரமா கூப்பிட்டு பார்த்தேன் நீ பதில் ஏதும் சொல்லவே இல்ல. அதான் அப்படி சொன்னேன்.  இதுல என்னுடைய தப்பு என்ன இருக்கு" என்று நக்கலாக கூறியவனைக் கண்டு கோபமாக "என் கண்ணும் காதும் நல்லா தான் இருக்கு. உன் கண்ணுக்கு தான் பிரட்சனை.. அதான்.. என்னோட வண்டில நீ மோதிட்டு நான் மோதுனேன்னு சொல்லுற. உன் கண்ண போய் முதல்ல டாக்டர் கிட்ட காட்டு"என்று கீழே கிடந்த தன் ஸ்கூட்டியை நிமிர்த்தி வைத்துக்கொண்டே கூறினாள். பின்னர் தன் ஸ்கூட்டியை ஆராய்ந்தவள்  அதன் ஹெட்லைட் உடைந்திருப்பதைக் கண்டு ,"நீ கொஞ்சம் கவனமாக வந்திருந்தா இப்படி ஆயிருக்குமா இடியட். ஒழுங்கு மரியாதையா இத சரியாக்கி தந்திடு இல்ல நடக்கிறதே வேற சொல்லிட்டேன்" என்றவளிடம்
"அத தாண்டி நானும் சொல்றேன்.... ஒழுங்கு மரியாதையா எங்க கார்ல விழுந்த ஸ்ராட்ச சரியாக்கி தந்திட்டு... இங்கிருந்து கிளம்பு. இல்லாட்டி நடக்குறதே வேற."என்று அவள் கூறியது போலவே ஆதியும்  கூற அவளோ.."நான் ஏணடா உன் கார்ர சரி பண்ணி குடுக்கனும். நீ தான் கவனமில்லாம என் வண்டில இடிச்ச" என்க... அவள் முடிப்பதற்குள் அவன்.."நான் இல்ல நீ தான் கவனக்குறைவா வண்டி ஓட்டி எங்க கார்ர இடிச்ச."...."நான் இல்ல நீ....தான்"...."நோ..நீ தான்" என்று மாறிமாறி குறை கூற துவங்கி பின்னர் சண்டை இட துவங்கினர் ஆதியும் அஞ்சலியும்.

💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖Where stories live. Discover now