💞பகுதி-10💞

2.2K 93 75
                                    

"ஒரு கேசும் இல்லனாலும்..நிறைய கேஸ் இருக்குற மாதிரி பிஸியா காட்டிட்டு இருக்குறாங்க பாரு.... சாண்சே இல்ல...என்னாமா ஆக்டிங்....நம்ம தமிழ்நாடு போலீஸ்க்கு தான் டா உன்னையாவே ஆஸ்கார் அவார்டு குடுக்கனும்" என்ற ஆதியை அஞ்சலியும் பாலாவும் முறைத்துக் கொண்டிருந்தனர்.

"ஏன் டா நண்பா இப்படி முறைக்கிறாய்.....யான் செய்த தவறு தான் ஏதோ???" என்றவனது முதுகில் நான்கு அடிகளை போட்டவன் " என்ன தப்பு பண்ணுனேனாடா கேட்குற.. அந்த ஆளு கேட்ட பணத்த அப்பவே குடுத்திருந்தேனா ..இந்நேரம் வீடு போய் சேர்ந்திருக்கலாம்.நீ பண்ணுண காரியத்தால போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வர வேண்டியதா போச்சு. இப்ப கூட ஒன்றும் ஆகலடா...அந்த ஆளு கேட்ட பணத்த குடுத்திட்டு வா டா போயிடலாம் " என்று கோபமாக துவங்கி கெஞ்சலாக முடித்தான் பாலா.

"என்னடா மச்சி இப்படி சொல்லிட்ட... இந்த ஸ்டேஷனுக்கு என்ன குறை இருக்கு. இந்த மாதிரி பாதுகாப்பு வெளில கிடைக்குமா...எந்த செலவும் இல்லாம... இவ்வளவு போலீஸ் பாதுகாப்போட ....ஜம்முனு உட்கார முடியுமா. செமயா இருக்குள்ள " என்றவனை.

"இவனுக்கு ஏதாவது ஆயிடிச்சா என்ன? பையன் பேச்சே சரி இல்லையே"என்று மனதிற்குள் எண்ணியவன் ஆதியிடம் "நீ நல்லா தான மச்சி இருக்குற. நீ செய்யுறத பார்த்தா எனக்கு பயமா இருக்குடா "என்று கூற

"பயப்படாத மச்சான் ஒன்றும் ஆகாது" என்று கண்ணடித்தவனைக் கண்டு "ஏண்பா தம்பி...நானும் வந்ததுல இருந்து பார்த்திட்டு தான் இருக்கேன். நீயும் சரி உன் வாயும் சரி அடங்கவே மாட்டேங்குதே. எல்லாத்துக்கும் மேல...போலீஸ் ஸ்டேஷன் ஜம்முனு இருக்குன்னு சொல்ற...அப்புறம் எல்லாரும் போலீஸ் ஸ்டேஷன் வரதுக்கே யோசிப்பாங்க ஆனா நீ என்னடானா இங்க வந்து அக்யுஸ்ட் உட்கார்ர பென்ஞ்ல உட்கார்ந்திட்டு சிரிச்சு பேசிக்கிட்டு இருக்க.... " என்றவர் மேலும் " எனக்கு ஒரு சந்தேகம்.....நீ நார்மலா தான் இருக்கியா ."என்று கேட்க

"நல்லா கேளுங்க சார்...எனக்கு அதே சந்தேகம் தான்....
எனக்கென்னவோ இவன் மென்டல் ஹாஸ்பிட்டல்ல இருந்து தப்பித்து வந்த லூசா இருக்குமோன்னு சோனுது " என்று அஞ்சலி கூற

💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖Where stories live. Discover now