8

3K 149 72
                                    

பத்திரத்தை பார்த்த அபி... அப்பா என கத்த...

என்னாச்சி அபி??
ஏன் இப்படி கத்துறே??
என சீதா வரவும்...

ப்ச்ச்... அப்பா எங்கே மா??
என கேட்ட அபியிடம்...

ஒரு வேலையா வெளியே போய்க்கிறாங்க டா...நீ என் கிட்ட சொல்லு...எதுவும் ப்ராப்ளமா?? என சீதா கேட்க...

என்ன மா இது என்ற அபிடம்...

இது என்று தடுமாறியபடி இருந்த சீதாவிடம்... என்னம்மா இதெல்லாம் நான் உன் கிட்ட முன்னாடியே சொன்னேன்லே மா...

வரதட்சணை வாங்குற மாப்பிள்ளை எனக்கு வேணாம்னு... அப்புறம் ஏன் மா இப்படி பன்னுனே...

அவன் பணத்துக்காக என்னை கல்யாணம் பன்னிக்கிரான்...நாளைக்கு பணத்துக்காக இன்னொருத்தி கிட்ட போவான்... அப்படி இல்லைனா அதே பணத்துக்காக என்னை விக்க கூட தயங்க மாட்டேனே மா என கோபமும் அழுகையும் ஒரு சேர கத்தினாள்...

அபி என அதட்டியபடி ராம் வர...
அபி அமைதியாக நின்றாள்..

இப்படி வா மா என அபியை தன் அருகில் அமர வைத்தவர்...இங்கே பாரு டா அபி..
உனக்கு தெரியும்...நீ எங்களுக்கு எவ்வளவு செல்லம்னு..

நீ எங்களுக்கு உயிர் டா...நாங்க காதலிச்சி கல்யாணம் பன்னதாலே யாருமே எங்கள சேர்த்துக்களே...நீ பிறந்து..உன் ராசியோ என்னவோ...குடும்பம் ஒன்னு சேர்ந்துச்சி...
நீ இல்லைனா நாங்க இல்லை டா...நீ என் கூடவே இருக்கனும்...அதுக்கு தான் அக்ஸர வீட்டோட மாப்பிள்ளையா பார்த்தேன் என அபி கூறி முடித்தார்...

அதெல்லாம் சரிப்பா...எதுக்கு இந்த வீடு, நகையெல்லாம் என கேட்க...
வீட்டோட மாப்பிள்ளைனா வீடு வேணும்லே என்றவரிடம்..

வாடகைக்கு இருக்க மாட்டானோ??
இதுல அவனுக்கு நகை வேறே??
அவன் படிச்ச மாப்பிள்ளை கூட இல்லையே என அபி கூறினாள்..

நீ தானே மா படிக்காட்டாலும் பரவாயில்லைனு சொன்னே என ராம் கேட்டிட...

ஆமா பா... படிக்காட்டாலும் நல்லவனா இருக்கனும்னு நினைச்சேன்... இப்படி சொத்துக்கு ஆசைபடுவானு நினைக்கலயே என அபி பதிலடி குடுக்க...

அபி... உனக்கு தெரியாதத நீ பேசாதே... வீடு, நகை லாம் அக்ஸரோட அம்மா கேட்டது... பொண்ணு நல்ல பொண்ணா இருக்கனும்... இது மட்டும் போதும்னு தான் அக்ஸர் சொல்லிக்கிறாங்க என கூறியவர்...இதெல்லாம் சகஜம் மா... இதுலாம் குடுத்தா தான் கல்யாணத்துக்கு அப்புறமும் உன்னை சந்தோஷமா வச்சிருப்பாங்க என கூறி முடித்தார்...

சரி... இதெல்லாம் விடுங்க...இந்த பத்திரம் எதுக்கு என கேட்க...
மாட்டுனோம் என்பதை போல விழித்தவர்..
எனக்கே நிச்சயதார்த்தம் மார்னிங் தான் வேல் ஃபோன் பன்னி பத்திரம் போட சொன்னாரு...

எங்க மேலே நம்பிக்கை இல்லையானு நான் கேட்டேன்...

அதுலாம் இருக்கு தான்...எங்க சொந்தத்துல பத்திரம் போடனும்னு பிடிவாதம் பன்றாங்க...எனக்கு வேற வழி தெரியலை..அதான்...நீங்க அப்படி பத்திரம் போடுங்க...அப்புறம் இதை பத்திலாம் பொண்ணு கிட்ட சொல்ல வேண்டாம்னு என் மனைவி சொல்றானு... சொல்லிட்டு ஃபோன வைச்சிட்டாங்க என ராம் கூறி முடித்தார்...

எதுக்கு சொல்ல கூடாதாம்...சரியான ஃப்ராடு குடும்பத்தில மாட்டிக்கிட்டோம் போலயே....பேசாம இந்த கல்யாணத்தை நிறுத்திறலாம் என அபி கூறவும்...

ராம் அதிர்ச்சியாகினார்..
.
.
.
என்ன அபி... இப்படி சொல்றே என்றவரிடம்...

பின்ன என்ன??
எப்படி நீங்க த்ரீ ஏர்ஸ்ல வீடு கட்டுவீங்க??
நகை கூட இருக்கு...கொஞ்சம் வாங்க வேண்டியது வரும்...வீடு எப்படி என கேட்டவளிடம்...

த்ரீ ஏர்ஸ் இருக்குதுலே... கடவுள் வழி விடுவான்... எல்லாம நல்லபடியா நடக்கலாம்... பார்த்துகலாம் என்றவர்...

இன்னொரு தடவை இப்படி சொல்லாதே மா...உன் கல்யாணம் நல்ல படியா நடக்கனும் என கண்கலங்கினார் ராம்..

மனசெல்லாம் (முடிவுற்றது)Where stories live. Discover now