அத்தியாயம் 6

283 11 0
                                    

"காப்பாற்றுங்கள் இந்திராணிக்கு ஆபத்து....." என்ற குரல் வந்த திசையில் இருவரும் குதிரையை திருப்ப அங்கே சில பெண்கள் பதட்டத்துடன் நின்று கொண்டிருநதனர்.

சற்று தூரத்தில் ஒரு பெண்தரையில் கிடக்க அவள் மீது ஓர் சிறுத்தை கொடூரமான பற்களை கொண்டு முன்னேறியது.

இந்திரவர்மனாகிய விஷ்ணுவிற்கு நிலைமை புரந்தது. குதிரை தனது கால்களின் இயக்கத்தை நிறுத்தும்முன் தரையில் குதித்து முன்னேறினான்.

அவன் பின்னாலையே இருந்த காண்டீபன் இந்திரவர்மனின் தோள்களில் கை வைத்து "சிறிது பொறுமை காக்கவும் இந்திரவர்மா"

'பெண்கள் என்றால் நாட்டின் மண்ணை காப்பதுபோல காப்பவன். இவனுக்கு இன்று என்ன நடந்தது' என சிந்தித்து காண்டீபனை பார்த்தான் இந்திரன்.

அவனுது நினைவுகளை நன்கு உணர்ந்த உயிர்தோழனான காண்டீபன் "அங்கே பார்" என்றான்.

வேகத்தில் சுயநினைவை இழந்தவனாய் இருந்த இந்திரன் அந்த மங்கையை பார்த்தநொடி சிறுத்தையை கீழே தள்ளி அவள் அதன்மீது முன்னேறியிருந்தாள்.

இந்திரன் கண்விழிகள் விரிவடைந்தன.... பூவுக்குள் புயல் என்று காண்டீபன் அடிக்கடி கூறுவது நினைவுக்கு வர இவள் பூவா புயலா என குழம்பி நின்றான்.

ஆனால் அவளது கண்கள் புலியின் கண்களுக்கு நேர் எதிரே இருந்தது. அந்த கண்களை பார்க்க இயலாத புலியின் வேகம் அதிகரிக்க அவளது தோளில் தனது நகங்களை பதித்தது.

போரில் பல காயங்களை பரிசாக பெற்ற இந்திரனுக்கு அவள்மீது பட்ட காயம் வலியை ஏற்படுத்தியது. அவளது உடையிலும் கீறல்கள் இருக்க அதிலிருந்தது குருதி வெளியே வந்த மண்ணில் விழுந்தது.

ஆக்ரோசத்தின் உச்சிக்கு சென்ற சிறுத்தை முன்னேறி பாய அதை தூக்கி வீசினால்... அவளது பலம் அதில் தென்படும் அளவுக்கு அது இந்திரன் காலடியில் வந்து விழுந்தது.
இந்த மங்கைகுள் இப்படி ஒரு பலமா என உறைந்திருந்ததான் இந்திரன். அவளோ தனது கைவாளை எடுத்துகொண்டு புலியை நோக்கி முன்னேறினாள்.

காதல் யுத்தம் (முழு பதிப்பு)Where stories live. Discover now