அத்தியாயம் 14

642 22 5
                                    

இரண்டு வருடங்களுக்கு பிறகு

ரம்மியமான மாலைபொழுது கடற்கரையோரமாக இருந்த தனது வீட்டில் நின்றுகொண்டு கையில் காஃபியுடன் சூரிய உதயத்தை ரசித்துக்கொண்டிருந்தான் விஷ்ணு.

என்ன ஒரு அழகான காட்சி சூரியபந்து தனது சுடும் கதிர்களை நீரில் நனைத்தது மறுநாள் புத்துணர்ச்சியுடன் உதிப்பதற்கு ஆயத்தமாகும் தருனம்தான் இந்த மாலைப்பொழுது. விஷ்ணுவின் வாழ்கையில் இந்த மூன்று வருடத்தில் நிறையவிசையங்கள் மாறிவிட்டன.

வேண்டாம் என்று கூறியும் இது ராஜகட்டளை என முனியன் கொடுத்த தங்கத்திலிருந்து கிடைத்த பணத்தை வைத்து பெரிய கம்பபெனி துவங்கியவன் வாழ்கையில் அன்றிலிருந்து ஏற்றமே...

இவர்களின் புதியரக என்ஜின்கள் பலவெளிநாடுகளில் மிகவும் தேவைபடவே அதையும் தயாரித்தது அனுப்பிகொண்டிருந்தான். ரம்யாவும் விஷ்ணுவும் சேர்ந்து வடிவமைத்த என்ஜின் தான் அது...

சொல்ல மறந்துவிட்டேன்... விஷ்ணுவுக்கு இருக்கும் தற்போதைய ஒரே செல்லபிரச்சனை ரம்யா தான். அதிலும் அவளுக்கு சமைக்க தெரியாது என்பதால் விஷ்ணுவின் நிலைமை திண்டாட்டம்தான். கவிதாவின் சமையலே சிறந்தது என்று தோன்றும்.... பின்ன ஒரு வயது குழந்தை எப்படி சமைக்கும்...

ஆம் இந்த விஷ்ணுவின் குட்டி தேவதை இந்த ரம்யா. தன்னவளின் நினைவாக இந்த பெயரை சூட்டியவள் கவிதா தான். ஆம் கவிதா தான் குட்டி ரம்யாவின் தாய்.

பால்கனியில் காஃபியுடன் நின்றிருந்தவனை நோக்கி ஓர் சத்தம் "ஏன் மாமா இன்னுமா அந்த கஃபியை குடிக்குறீங்க"

அதன் இறுதி துளியை உறிஞ்சினான். வழக்கம்போல் அது ஆறாவது சுவையான வெப்பத்தை இழந்திருந்தது.
சூரியனும் கடலுக்குள் தன்னை அமிழ்த்தி கொண்டது சூரியன்.

ரம்யாவின் நினைவு வரும்போது இந்த அந்தமான் தீவில் உள்ள இவர்களது வீட்டிற்கு வந்துவிடுவார்கள் விஷ்ணுவும் அவனது மனைவி கவிதாவும்.

காதல் யுத்தம் (முழு பதிப்பு)Where stories live. Discover now