அத்தியாயம் 26

5.2K 213 39
                                    

இதோ அதோ என்று கிருஷ்ணா அவனால் ஆனா வரை நாட்களை தள்ளித் தீர்த்தான். ஆனாலும் வேணி அவனை தொந்தரவு செய்யாமல் அதே சமயம் நந்தினியை அவனுக்கு திருமணம் செய்ய சகல ஏற்பாடுகளையும் திருப்பதியில் செய்து முடித்திருந்தாள்.

அன்று கிருஷ்ணா அசந்து போய் வீடு வந்து சேர்ந்தான்.சாப்பிட்டுவிட்டு மாடி ஏற போனவனை "நானா ஒக்க நிமிஷறா" என்றபடி மகன் பின்னால் போனாள் வேணி.

"ம்..செப்பம்மா" என்றபடி அவளிடம் திரும்பினான்.

"அதி வர வெள்ளிக்கிழமை பெல்லிறா அது செப்பனுக்கே" என்றாள் சிரித்தபடி.

சட்டென மகன் முகம் மாறிப் போனது. தாயை உறுத்து ஒரு பார்வை பார்த்து விட்டு "எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. என்னால வர முடியாது" என்று விட்டு மாடி ஏற போனவனை கையை பிடித்து கொண்டு "ஒக்க நிமிஷம் கிருஷ்ணா" என்றுவிட்டு பின்னால் நின்று கொண்டிருந்த தம்பிகளை "ஏன்ட்றா இதி , நுவ்வே செப்பினி காதா" என்றாள்.

அவன் மாமன்களை முறைத்தான். அவர்கள் அவர்களின் மாமனை பார்த்தார்கள்.

"சூடு கிருஷ்ணா எல்லாம் டிசைட் பண்ணியதுக்கு அப்புறம் இப்பிடி நீ செய்யுறது தப்பு. நீ நாளையிலேர்ந்து ஆபீஸ் போக வேண்டாம் நாளைக்கு சாயங்காலம் நாம எல்லாரும் திருப்பதி போறோம். ரெடியா இரு" என்றார் தீர்மானமாக.

"பிரமாதம் யாரை கேட்டு எல்லா ஏற்பாடும் பண்ணுணீங்க?நீங்க எல்லாரும் சொல்லுறதுக்காக எல்லாம் என்னால எவளையும் கல்யாணம் செய்ய முடியாது." என்றான் கோபமாக. அந்த கோப குரலில் அதிர்ந்தாலும் சுதாரித்து கொண்டு "வேண்டாம், இ பெல்லி காது, ஆனா ஆராவை தத்து கொடுக்கிறதுக்கும் நீ தானே வேணும் அதுக்கு வா" என்றாள் வேகமாக வேணி மகனுக்கு ஈடு கொடுக்கு தொனியில்.

சற்று அதிர்ந்து தான் போனான் கிருஷ்ணா , ஆனாலும் சுதாரித்து கொண்டு பேச ஆரம்பிக்க வாயை திறக்கவும் அவன் தகப்பன் நிறுத்தவும் சரியாக இருந்தது.

"சூடு கிருஷ்ணா, ஆர்க்யூமெண்ட்டுக்காக பேசினா பேசிட்டே இருக்க வேண்டியது தான். இ பெல்லி அந்தரும் டிசைட் செஞ்சு தான் அரேஞ்சு பண்ணிருக்கோம்.நாளைக்கு நாம கிளம்பிகிறோம் அவ்வளவு தான் நீ போய் படுக்க போ..வேணி நுவ்வு வெல்லு" என்றபடி தானும் நகர்ந்தார்.

இதுவும் காதலா?!!!Where stories live. Discover now