சில்லி சப்பாத்தி

88 13 39
                                    

தேவையான பொருட்கள் :

சப்பாத்தி தயார் செய்யும் போது கொஞ்சம் அழுத்தமாக போட்டு கொள்ளவும்.
வேக வைத்த சப்பாத்தி - 3 to 4
எண்ணெய் - 3 ஸ்பூன்
கருவேப்பிலை - 5
இஞ்சி மற்றும் பூண்டு விழுது - 4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1
கொடை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ்‌ - 3 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - தேவையான அளவு

செய்முறை :

      ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கறிவேப்பிலை
போடவும்.

     அதில் இஞ்சி மற்றும் பூண்டு விழுது , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின்பு பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

      கொடை மிளகாய் சேர்த்து வதக்கவும் அதில் தோவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

     பின்பு அதில் மிளகாய் தூள் , மல்லி தூள் , கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.அதில் தக்காளி சாஸ் சோர்த்து கொள்ளவும்.

      அதில் சப்பாத்தியை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சேர்த்து கொள்ளவும்.

       ஒரு 20 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பில் இருந்து இறக்கவும்.

*** சுவையான சில்லி சப்பாத்தி தயார் ***

Chapati senju extra erundha adhava innoru time sapdama ipdi senju sapdalam romba easy samiya irukum try panni paruga frds....

sapida vanga🌮🌯😋Where stories live. Discover now