7

1.6K 67 20
                                    

காலையில் மணி 6.30 ஆக அடித்து பிடித்து எழுந்த நந்தினி குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு நேராக சமையலறைக்கு வர....
"ஏய் ...என்ன இது ???பூஜையறை ல விளக்கு ஏத்துற பழக்கம் இல்லையா??போய் ஏத்திட்டு வா..என்று மாமியார் அதிகாரம் செய்ய... குடுகுடு வென பூஜையறைக்கு செல்ல.....

விளக்கேற்றி சிறிது நேரம் பூஜையறையில் அமர்ந்துவிட்டு வருவதற்குள் மாமியாரே காப்பி போட்டாச்சு....
"இந்தா பிடி போய் உன் புருஷனுக்கு கொடுத்துட்டு வா"

மாமியாரின் செயல்கள் எதுவும் அவளுக்கு விளங்கவில்லை.... இனி காலையில் 6க்கு எல்லாம் எழ வேண்டும் என்பதை மனதில் நினைத்து..அணைவருக்கும் காபி கொடுத்துவிட்டு டிபன் செய்ய தயாரானாள்.

பிரதீப் வந்தான் "அண்ணி எனக்கு தோசையும் வெங்காயசட்னி" என்று கூற...சரி தம்பி மா செய்து தரேன் என்றாள்.
பின்னாடியே பிரசாத் வந்தான் அண்ணி எனக்கு பூரி என்று கேட்க ...அவளுக்கு தலை சுற்றியது...அத்தை உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்க..."எனக்கும் உங்க மாமாவுக்கு இட்லி போதும் என்று கூற பின்னாடியே பிரஹலாத் வர....."நந்து மா எனக்கு டிபன் எதும் வேண்டாம் கேண்டின் ல வாங்கி சாப்பிடுவேன்"என்று கூற......

அடேங்கப்பா ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு டைப் இந்த வீட்டில் என்று நினைத்து விட்டு செய்ய துவங்கினாள்... கரெக்டா மணி 930 கு டைனிங் இல் எல்லாம் அடுக்கி வைக்க.... அவளுக்கு வேர்தொழுகியது...."அச்சோ நான் காபி குடிக்கவே மறந்துட்டேன் என்று அப்போது நினைவுக்கு வர...காபி யை சூடு பன்னி ஓய்வாக ஊஞ்சலில் அமர்ந்து அந்த 9.30மணிக்கு காபியை குடித்தாள்.

அவளின் மனதில் உள்ள உணர்வுகள் அந்த ஊஞ்சல் அசைவில் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது... ஒரு காலத்துல அப்பா அம்மா தான் உலகம் னு இருந்தோம் இன்னைக்கு பிளு பிளு பிளு னு கூட்டம். அன்னைக்கு வீட்டில் ஒரு சுடுதண்ணீர் கூட வச்சது இல்லை இன்னைக்கு அப்பாடா மூச்சு விட கூட டைம் இல்லை.

எல்லாம் யோசித்து கொண்டிருக்க "ஹலோ மேடம் காபி குடிச்சது போதும் காய்கறி கட் பன்னி தாங்க சமைக்கனும் என்று அனிதா குரல் கொடுக்க....

என்னது அதுக்குள்ள மதிய சமையலா???

ஆமா...ஏன் செய்ய மாடாடேங்கிளோ..

ம்ம்ம்..... செய்து தொலையிரேன்....முதல்ல கொஞ்சம் காபி குடிக்க விடு.

குடிச்சு ட்டு சீக்கிரம் வாங்க மகாயாணியம்மா என்று அனிதா ஏளனமாக பேச....இவளுக்கு கோவம் பொங்கி வந்தது.அதை அடக்கி கொண்டு... காபி டம்ளர் லொட் என்று வைத்துவிட்டு.... மீண்டும் சமையலறைக்கு சென்று காய்கறி நறுக்கினாள்.

காய்கறி நறுக்கிவிட்டு தான்.... அவள் காலை உணவை சாப்பிட சென்றாள்...பூரி ஒன்னு இட்லி ஒன்னு வச்சி விழுங்க முடியாம விழுங்கிட்டு இருந்தா....பின்னாடியே அனிதாவின் அம்மா "என்ன மா.....நீ செஞ்சது நீயே சாப்பிட முடியாம சாப்பிடுற...என்று நக்கல் அடித்து விட்டு செல்ல எதையும் அவள் கண்டுக்காமல் சாப்பிட்டு தன் அறைக்கு சென்று ஓய்வெடுக்க சென்றாள்.

தொடரும்.

உணர்வுகள் தொடர்கதைWhere stories live. Discover now