ஸ்மார்ட் போன்

181 11 52
                                    

"டேய் டேய்... நான்‌ ஒருவாட்டி விளையாண்டுட்டு தரேன் டா "

ம்ம்ம் முடியாது முதல்ல என் கூட உட்கார்ந்து கேம்ஸ்ஸை பாருங்க....
டேய் அப்படி தான் அவனை கொல்லுடா... டேய் டேய் என்னை யாராச்சும் காப்பாத்துங்க டா... என்று கத்த..

மொபைலுக்குள் நான் ஐக்கியமாக...

அங்க என்ன தெரியுதுன்னு... இப்ப கிட்ட வந்து பார்க்கறீங்க...

இல்லடா தம்பி கொல்ல வரனான்னு சொல்லறேல... அதான் எப்படி வரான்னு பார்த்தேன்...

தலையில் அடித்த பையன்... உன்னால அவனுங்க என்னை கொண்டுடானுங்க என்று போனை சோபாவில் எரிந்துவிட்டு சென்றான்...

அந்த போனையே வெறிக்க பார்த்த நான்....

மீண்டும் கையில் ஸ்நாக்ஸ் உடன் பக்கத்துவீட்டு பையன் வர... மொபைல் அவன் வசம் ஆனது...
டேய் இந்த தடவை நான் உன்னை பழிவாங்குவேன் டா... என்று பைத்தியமாக அவன் உளற...

ச்சீ இன்னும் கொஞ்ச நேரம்... இவன் கூட இருந்தா சீக்கிரம் இவனுங்களை மாறி நம்பளையையும் மாத்திருவான் முதல்ல இங்க இருந்து எஸ்கேப் ஆகனும் என்று நகர்ந்த என்னை...

சுத்தி வளை சுத்தி வளை... அப்படி தான் அப்படி தான் அட்டாக் பண்ணுங்க என்று துப்பாக்கி சத்தம் கேட்க...
இவனை என்று அருகில் இருந்த... தண்ணீரை எடுத்து அவன் மேல் ஊற்றிவிட்டு நான் ஒட...அவன் துரத்த... உண்மையான பப்பஜி விளையாட்டு இது தான் என்று நான் ஓடி என் வீட்டினுள் நுழைத்தேன்...

இருங்க மூச்சு வாங்கிகறேன்... என்னா துரத்து துரத்துறான்...

வணக்கம் மக்கள்ஸ்...

புத்திசாலியா இருந்தவன் கூட இப்போ... ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகி கிடக்கிறான்...

வழக்கம் போல எதுக்கு அப்படின்னு சொல்லி விலக்கி விட முடியாதது நிறையா இருக்கு...வாங்க பேசலாம்....

ஜு பசிக்குது ஏதாவது சாப்பிடலாமா... ?
இதோ ஸ்வீக்கி இருக்கே கவலை எதுக்கு....( அம்மா செய்யற சாப்பாட்டுக்காக " காத்திருந்து காத்திருந்து வயிற்றில் சத்தம் கேட்டதுதம்மா... " ஆமாங்க.. விறகு அடுப்பில செய்யற சாப்பாட்டுக்கு... நேரம் எவ்வளவு ஆகுமுன்னு அம்மாக்களுக்கு தான் தெரியும்... கையில சூடு பட்டாலும் பரவாயில்லை புள்ளை பசியில்ல இருக்காங்களேன்னு... செஞ்சு தருவாங்க பாருங்க... அட என்ன பா நீ ஸ்வீக்கிலேயே... அவ்வளவு ருசியா சாப்பாடு கிடைக்குதேபா... என்று கூறுபவர்களுக்கு... ( பசி ருசி அறியாது கடவுளே...))

வாங்க பேசலாம் ...!Where stories live. Discover now