மூன்று

200 13 0
                                    

"டேய் புருஷா எழுந்திரிடா... புருஷாஆஆஆ.....", என்று கூப்பாடிட்டாள், அவள்.

அவளின் கூப்பாட்டில், நடு இரவில் நார்த் கொரியா அமெரிக்காவை அணுகுண்டால் தாக்கிவிட்டது போல் அலறி அடித்து எழுந்தேன். ஏறக்குறைய இப்போது அவள் கூப்பிட்டதும் அதற்கு ஒத்ததே. எழாமல் இருந்திருந்தால் நிச்சயம் பிரளயம் வெடித்திருக்கும். அதற்கான ஆயத்தச் சங்கே அவள் முழங்கிய "புருஷாஆஆஆ" ஆகும்.

கண்ணைத் திறக்காமல், "என்னடி கண்மணி வேணும்?", என்று அவளை செல்லமாய் கேட்டு சாந்தமாய் பேசினேன்.

"ஐய்ய.. இந்த கொஞ்சல்லாம் வேண்டாம். போய் குழந்தைங்களுக்கு பால் கலந்து கொண்டு வா. பசில அழறாங்க பாரு", என்று என் இதயத்தின் ராணியாக ஆணையிட்டாள்.

என் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு, "இன்னிக்கு மட்டும் நீ கலந்து கொடேன். என் கண்மணில", என்றேன்.

"அதெல்லாம் முடியாது. மொத 5 மாசம் நீயா கொடுத்த. இப்ப யுவர் டர்ன்... போ...போ... போயா", என்றாள் கறாரான குறும்பு புன்னகையுடன்.

அவளின் அந்த குறும்பில் தான் என்னை அவளுள் தொலைத்தேன். இப்போது, அவள் பேச்சை என்னால் மீற இயலாது. இல்லையென்றால், பசியில் குழந்தைகள் அழுவது போல் நாளை முழுவதும் நானும் முத்தம், அரவணைப்பு போன்ற காதல் பசியாலும் மற்றும் வயிற்றுப் பசியாலும்

ஏங்கி அழ வேண்டியதாகிவிடும். வயிற்றுப் பசியை ஏதோ ஒரு ஓட்டலில் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், காதல் பசியை?. கஷ்டமல்லவா, அதனால் தான் மீற இயலாது என்றேன்.

"குழந்தைங்க அழறது கூட காதுல வாங்காம நல்லா தூங்குறடா புருஷா", என்று கிண்டல் செய்தாள்.

சிரித்துக் கொண்டே எழுந்து சென்று, ப்ரிட்ஜில் இருந்தப் பசும்பாலை எடுத்து, காய்ச்சி, சூடு தணிய ஆற்றி, பால்புட்டிக்குள் ஊற்றிக் கொண்டு வருவதற்குள் அவள் கண்ணயர்ந்துவிட்டாள்.

இரு ஆண் குழந்தைகள் - "ஐடென்டிக்கல் ட்வின்ஸ்". பிறந்த நேரத்திலிருந்தே ஒற்றுமை தான் இருவருக்குள்ளும், பசியில் அழுவதிலும் கூட. மாதம் 8 ஆகிவிட்டதால், கையில் புட்டியை தாங்களே பிடித்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்திருந்தனர். அவர்களிடம் புட்டியைத் தந்ததும் சத்தம் அனைத்தும் நிசப்தமானது.

"என்னுயிர் காதலிக்கு,"Where stories live. Discover now